Posts

Showing posts from October, 2022

பாகம்127, 128 & 129 : பின்னுதித்து பேருதவி புரிந்திடவே அன்னையுடை தங்கையொரு அடிப்படை அன்பகமாய் பொறுப்பேற்று தமிழீன்ற தென்னிலத்து தேன்மொழியிற் நற்குமரி நாமமுடை சுண்டுவிரலொப்ப சுண்டெலி உடலொப்ப சுந்தரி அழகொப்ப சுறுசுறுப்பில் எறும்பொத்த விண்டு மகளொப்ப விரல் தழுவும் சங்கொப்ப வந்து உதித்தவளாய் வானவனை வளர்ப்பதற்கும் மென்மையினும் மேன்மையுடன் மேதினியே திகைப்பதற்கும் அன்னையினும் சிறப்புற்று அம்பை போற் கிடைப்பாளே.

Image
  பாகம் 127  எங்கு காண்பினும் இதயபூர்வமாய் தயக்கம் தளர்த்தியே தயை கூர் எம் தங்கரதமவன் இத்தகைசால் உயிர் மேல் கருணை கொள்வதை கண்டு பகருவேன். அது ஆளைப் பார்த்ததும் அகம் குளிர்ந்திட வாலை வீசியே வஞ்சமிலாமலே வாஞ்சை கொண்டதோர்  நன்னெஞ்சமுற்றிடும் ஞாளிப்படைகளை நடக்கும் இடமெல்லாம் நேசம் செலுத்தியே நெஞ்சை நிமிர்த்திடும் சிங்கத்தழிழ்மகன் செவ்வடி தாங்கிடும் இல்ல வளாகத்துள் எண்ணெட்டு வைரவருள் வெறும் ஐவர் வாழ்க்கையை அங்கு கண்டிட்டேன். அருட்பாண்டவருற்ற வீரத்தில் ஐம்பெரும் பூதங்கள் பெற்ற கோலத்தில் அவனடி பூமியில் ஒன்று சென்றபின் ஒன்று வந்திடும் கால இடைவெளி விட்டுவிட்டுத்தான் காக்கும் தேவர்கள் பூத்து உதிர்ந்ததை காலந்தோறும் யான் கண்ட காட்சியை ஞானக்கண் வழி இங்கு தருகிறேன்.  மல்லனாகவே மறம் வீழா வல்லவன் வீட்டை வலம் வந்த காவல் தெய்வத்துள் ஒன்று மட்டும் காலன் அழைத்த  நாள் வரைக்கும் கடமை பூண்டு பணியாற்றி அரவம் ஒன்றையும் விடாது அஞ்சா நெஞ்சுடன் போர்புரிந்து வருடம் பத்தாய் வாழ்ந்த பின்னர் கொற்றவை குலமகன் முற்றத்தில் குருதி சுருங்கி வயதாகி இறுதி பயணம் கொண்டதுதான் உள்ளம் உள்ள நாள் வரைக்கும் உள...