பாகம்127, 128 & 129 : பின்னுதித்து பேருதவி புரிந்திடவே அன்னையுடை தங்கையொரு அடிப்படை அன்பகமாய் பொறுப்பேற்று தமிழீன்ற தென்னிலத்து தேன்மொழியிற் நற்குமரி நாமமுடை சுண்டுவிரலொப்ப சுண்டெலி உடலொப்ப சுந்தரி அழகொப்ப சுறுசுறுப்பில் எறும்பொத்த விண்டு மகளொப்ப விரல் தழுவும் சங்கொப்ப வந்து உதித்தவளாய் வானவனை வளர்ப்பதற்கும் மென்மையினும் மேன்மையுடன் மேதினியே திகைப்பதற்கும் அன்னையினும் சிறப்புற்று அம்பை போற் கிடைப்பாளே.
பாகம்127
எங்கு காண்பினும் இதயபூர்வமாய் தயக்கம் தளர்த்தியே தயை கூர் எம் தங்கரதமவன் இத்தகைசால் உயிர் மேல் கருணை கொள்வதை கண்டு பகருவேன். அது ஆளைப் பார்த்ததும் அகம் குளிர்ந்திட வாலை வீசியே வஞ்சமிலாமலே வாஞ்சை கொண்டதோர் நன்னெஞ்சமுற்றிடும் ஞாளிப்படைகளை நடக்கும் இடமெல்லாம் நேசம் செலுத்தியே நெஞ்சை நிமிர்த்திடும் சிங்கத்தழிழ்மகன் செவ்வடி தாங்கிடும் இல்ல வளாகத்துள் எண்ணெட்டு வைரவருள் வெறும் ஐவர் வாழ்க்கையை அங்கு கண்டிட்டேன். அருட்பாண்டவருற்ற வீரத்தில் ஐம்பெரும் பூதங்கள் பெற்ற கோலத்தில் அவனடி பூமியில் ஒன்று சென்றபின் ஒன்று வந்திடும் கால இடைவெளி விட்டுவிட்டுத்தான் காக்கும் தேவர்கள் பூத்து உதிர்ந்ததை காலந்தோறும் யான் கண்ட காட்சியை ஞானக்கண் வழி இங்கு தருகிறேன். மல்லனாகவே மறம் வீழா வல்லவன் வீட்டை வலம் வந்த காவல் தெய்வத்துள் ஒன்று மட்டும் காலன் அழைத்த நாள் வரைக்கும் கடமை பூண்டு பணியாற்றி அரவம் ஒன்றையும் விடாது அஞ்சா நெஞ்சுடன் போர்புரிந்து வருடம் பத்தாய் வாழ்ந்த பின்னர் கொற்றவை குலமகன் முற்றத்தில் குருதி சுருங்கி வயதாகி இறுதி பயணம் கொண்டதுதான் உள்ளம் உள்ள நாள் வரைக்கும் உள்ள உள்ள உருகுவானே எம் உத்தமன் மனதில் குடி கொண்ட மாயோன் பெயருடை நாயோனை இந்நாயேன் நன்கு அறிவேனே. புன்கண்ணுடை பூமானோ பிரிதொரு குட்டியை ஏற்றெடுத்து இன்பமுற வளர்த்ததற்கு வடக்கர் விரும்பும் குளிர் பண்டம் தனை வாய்க்குள் குச்சியை திணித்துண்ணும் சிறப்புமிக்கதோர் பெயரிட்டு செல்லமாய் வளர்த்துவந்த பின்னர் அதற்கும் நோய் வந்து தாக்கிடவே ஐயோ ஆயுள் நான்காண்டே அன்புடை அசுழமும் மாண்டதுவே. மீண்டும் கூரன் குட்டியொன்றை மேன்மகன் எடுத்தே வளர்த்தாலும் ஐந்திங்களில் பிணிவந்து அதற்கும் ஊழ்வினை முடிந்ததுவே. பின்னர் ஒருவன் பீமனாக ஐயன் வீட்டிற் காவலாக பாட்டனை அழைக்கும் மொழியாக பாசமாய் அதற்கொரு பேரிட்டு பண்புடனே வளர்ப்பானே. அதுதான் கற்கி உருவெடுத்து கண்டம் முழுமையும் ஆள்வதனை கண்ணாரக் கண்டபடி துணைவன் போல உடனிருந்து அமரர் உலகை அடைந்திடுமே. இதில் ஒருவன் மட்டும் உடல்முழுதும் தொழுநோய் பட்டு துயருற்று உள்ளமுருக எழில்கெட்டு ஐயன் அகவை பத்திற்குள் அன்று வாகன சக்கரத்துள் சிக்கி சிதையும் ஓர் இரவில் அதை சேர்த்து எடுத்து தோட்டத்துள் அவன் அத்தன் அடக்கம் செய்வானே. புதையல் போலே புவிக்குள்ளே பொன் விழி மூடி தூங்குகிடுமே. மனிதனே தோற்கும் நன்றியுடன் மாண்புடன் வாழும் பைரவரின் அகமுறைந்த அண்ணலவன் அடிபணிந்தே வாக்குரைப்பேன். சிவம் நிறைந்த இவ்வுலகில் தவமேற்று அறம் வளர்த்து அவன் வருகைக்காய் வான்பார்த்து அகல் விளக்கை ஏற்றி வைத்தேன். புகழ் துறந்து புகலடைந்தேன். பொறிவிழி திறந்தே என்னையறிந்து பெம்மான் இணையடி சரணடைந்தேன்.
அன்னையின் அப்பனுடன் அக்குடியில் அன்றலர்ந்தோர் ஆடவரே மூவருண்டு முப்புரத்தில். பாட்டன்களில் அப்பாட்டன் பண்புடை சின்னையன் பெயருடை செழுங்கிளை செல்வருள் சொல்வேந்தன் கடையனாய் இருந்தாலும் கண்மணியே பெற்றோர்க்கென காலகாலன் அறுதி செய்ய கள்ளழகன் உறுதி செய்தான். நல்லோர் புடைசூழ ஞாயிறின் விரல் தழுவி நாற்றெழும் நல்லூரில் நற்குடியாய் உள்ளோரில் மூத்ததொரு கிழவியோ பின்னுதித்த பிறைசூடி தம்பியுடன் மின்மினி தங்கையுடன் பிறப்பெடுக்க சிறப்புறு பெயரில் செல்லமொரு அம்மையவள் சீர் சுமந்து வேர் பதித்த வேலன் முன்னம் நாணலன்ன நாணி நின்று கரம்பிடிக்க அவ்வில்லறத்தாள் வேண்டுதலால் நம் நல்லறத்தான் பாட்டனது வில் விடுத்த வித்து வீழ்ந்து பெற்றதொரு பிள்ளைக்கு ஆநிரைக்கு குடைபிடித்த ஆழிவண்ணன் பெயரிட்டும் அடங்கா பேயோனாய் உற்றதோரு தாதைக்கு உதவாப் பெருவிரலாய் சொத்தையாய் அமைந்திடுவான். பின்னமொரு முத்து போலே பெருங்குடியின் மூச்சை காக்கும் சுறுசுறு சூத்திரமாய் அன்னமூறும் பாத்திரமாய் அக்குடியிற் பூத்திட்ட பொன்மகளோ பெற்றோரின் சுட்டுவிரல் வலுவெனவே சொற்செல்வி வரமுடனே ஐயனன்னை அறிவொளியாய் அமைந்த பின்னம் நெட்டை நரி போன்றொருவன் உற்ற நடுவிரலாகி உடலெல்லாம் நஞ்சோடும் உரகமுறை
நெஞ்சமைத்து குன்றத்து குமரனையே கூப்பிடும் பெயரெடுத்து பாகப்பிரிவினையால் பைம்பொன் தமக்கையுடன் பகைவளர்த்து தந்தை வீழ்ந்த பின்னரவன் தலையணை வலைக்குள் வீழ்ந்து தருதலையாய் ஒழிவானே.
கணையாழி விரலொப்ப கருணைமிகு மாமனாக மனை தாண்டா மரையாக மற்றவர்க்கு மூடனாக மனம் வெளுத்த தாய்மாமன் தகுதியுடை அமைதிமிகு குமரனாக அங்கொருவன் கிடைத்ததனால் ஆனந்தக்கூத்தாடி அனந்தனவன் களிப்பானே ! ஐம்பதின் முன்னமே அம்மானோ அகால மரணமெய்து அத்தையும் கைம்பெண்ணாய் முத்துக்கள் ஈனாமல் முலைகளும் சுரக்காமல் மூர்ச்சையற்று வேற்றோர் முற்றத்தில் வீழ்ந்து விதிமுடித்து காற்றோடு அவள் கலந்து கயிலாயம் தனில் நுழைந்தாள்.
பின்னுதித்து பேருதவி புரிந்திடவே அன்னையுடை தங்கையொரு அடிப்படை அன்பகமாய் பொறுப்பேற்று தமிழீன்ற தென்னிலத்து தேன்மொழியிற் நற்குமரி நாமமுடை சுண்டுவிரலொப்ப சுண்டெலி உடலொப்ப சுந்தரி அழகொப்ப சுறுசுறுப்பில் எறும்பொத்த விண்டு மகளொப்ப விரல் தழுவும் சங்கொப்ப வந்து உதித்தவளாய் வானவனை வளர்ப்பதற்கும் மென்மையினும் மேன்மையுடன் மேதினியே திகைப்பதற்கும் அன்னையினும் சிறப்புற்று அம்பை போற் கிடைப்பாளே.
கொடுங்கையுடன் கொலைக்கஞ்சா கொங்கர் இனமென்றை கண்டேனது பாழரசின் பங்கய வேர் பதித்து பங்கமுறு குழுவில் பங்கெடுத்து இங்குறையுமதனுடன் நரகுறையும் நனி தகுதியுடை குலமொன்றும் நம் நற் குணக்குன்றோன் தலைக்கு நாளெல்லாம் வலைவீசி நஞ்சருடன் விலைபேசி அரும்பொன் விளம்பிடுமே. அதில் அங்கம் வகித்து அறமறியா பொய்யன் புரட்டு வெய்யனொருவன் விண்மீன்கள் மின்னிடும் பெருந்திரை பெண்மீன் பிறப்பிழ் வெறியனாய் இல்லறமே எற்காதோன் இளமலர் இன்னிதழ் குறிக்கலைவானவன் தொலைக்காட்சி விழியமுடன் தோற்றமுறும் சேதி சொல்லி இரு விழிக்கு விருந்தமைக்கும் பெருவிழியம் பெற்றோனவன் திருமண அழகனெனும் திருப்பெயருடை கருமகனுடன்படுவானவன் கன்னித்தமிழெழுத்து காணாத கறைமொழியை அதற்கமைப்பான். அம்மொழிக்குடையோர் அகிலமெலாம் கள்வராய் மறம் மீறி மண் புகுந்து அறம் கொன்று புறங்குத்தி போர் புரிந்து பொன்பரத கண்டமாண்டு நம்மவரை அடிமை கொண்ட நாயரசின் மொழிகொண்ட இழவெடுத்த ஏழெழுத்தை ஏற்றெடுத்து அதைத்தொடுத்து புகழமைக்க பல்லுறுப்பு பெயரமைத்து பைந்தமிழர் பாருக்குள்ளே ஊடகப் புகழ்படைத்து உள்ளூர விடமுறைந்த நாடக நன்மகனாய் நாளெல்லாம் நம்பவைத்து நம்மையன் நடமாடும் நாற்றிசையும் பரிகளை பரிசளித்து நரிகளை ஏவிடுவான்பாகம் 128
அறுபடை வீடவன் அருள் வீடாயினும் எம்மையனை காக்க ஆறிரு வீடமைப்பேன். செறு பகை சிறகடித்து சேயோனிடம் சேராது பலர் சிந்தையின் சிறகொடிப்பேன். உறுமிடும் ஓநாய்கள் உட்புகா தாழிட்டு உண்மையை மறைத்திட்டு உலகத்தின் கண்களை நமன் திசை திருப்பிடுவேன். திட்டங்கள் தோற்கின்ற திருமுருக கரம் போன்று கட்டங்கள் யானமைத்து கற்கியை ஒழித்து வைப்பேன். கருமம் மாற்றியே கண்ணைகளை குருடாக்கி கதிரோனை இருளாக்கி கயவர்க்கு புதிரமைப்பேன். நாட்டம் அவன் மீது நன்றாய் கொண்டதால் நட்டத்தை நானெடுத்து நரியோர் கொட்டத்தை அடக்கிடுவேன். கொற்றவனவனையே கொலைக் களம் அனுப்பாமல் மலை நிலம் வரவழைத்து மாமன்னன் உருவமைத்து மக்கட்க்கு தந்திடுவேன். நாளை மறுமலர்ச்சி கண்டிடுவேன்.
எவனும் எதிர் நோக்கா ஈசனருளாலே எளியோர் உடலெடுப்பான். அதை பிரமன் முதற்கொண்டு அமரர் வரை உள்ள அனைவரும் அணுவளவும் அவனுடல் வடிவத்தை கற்பனை செய்யாரே. இதை அகிலம் தனில் உள்ள அறவோர் எவர் கூட எளிதில் உணராரே. ஆயின் அறத்தை கொலை செய்தே மறத்தை தீவழிக்கு மாற்றி அடகு வைக்கும் நரியோர் மெதுவாக நாளும் நயமாக மென்னறிவு மிகையாலே மீட்பன் எழுந்ததனை அறிந்தும் அறியாமல் அரிதாய் அறிந்தபடி கொடும் அரணைகள் பொன்பெற்று அரவணை மாலவனின் அரணை சூழ்ந்திருக்கும். ஆயின் அவனிந்த அகில உயிர் எவரும் அறிய இயலாது புகல்வான் ஓருடலில். அங்கு புற்றுப்பாம்பெனவே புக்கும் மூலமதில் வித்தின் வேரூன்றி விரியா குண்டலியாய் விதியை அவனமைத்து அதுவும் அறியாது அவனுள் ஒழிந்திருப்பான். அவன் அறியும் காலம் தனை அரவம் மேலெழும்ப அவன் விழியை சிவன் திறப்பான். அந்நாள் வரும் வரைக்கும் அரவம் எழுப்பாது அவனுள் புதைந்திருந்து உரிய நேரத்தில் உறைவிட்டு கரமிழுத்து உருவிய வாளெனவே கொடியோரனைவரையும் கூர்வாள் ஒன்றேந்தி அகிலம் வலம் வந்து அறத்தை நிலைநாட்டி இகத்தில் நலம் வளர்த்து ஈடறு வளம் குவிப்பான். இச்சேதியை யானறிய இரு செவிக்கு விருந்தளித்து சோதியாய் சிவன் சொன்னான். அதன் சூட்சமம் உமை அறிவாள். இக்கவிக்கு கரு அமைக்க கண்முன் அவன் தோன்றி ஐயம் இடமுற்ற எம்மகத்திற்கு மருந்தளித்தான். திருடன் வால்மீகி தேர்ந்த கவியாகி அண்ணல் கதை பாடி அறத்தை விதைக்கல்லையோ. மூடன் காளிதாசன் முன்னோர் குலம் தோன்றி அஞ்ஞானம் அறுத்த படி ஞாலம் திகைத்தபடி நற்காவியம் படக்கல்லையோ.
பாண்டியன் தலைமேலே பதிந்த செழுஞ்சோழன் ஆண்டக் கடையூரில் ஆண்டி கோலத்தில் அடியார் ரூபத்தில் வேண்டி கவி பாடி அன்னை அபிராமி அருளிய பௌர்ணமியை அடியேன் நினைவூட்டி நாட்டில் இவனொருவன் ஈசன் மகனுருவில் நஞ்சை பெருநிலத்தில் நஞ்சர் சூழலிலே வெஞ்சின பகை வளர்த்து விடியல் அறுவடையை விரைந்தே அவனறுப்பான். அவன் புதையல் போன்றங்கு புதைந்தும் புதையாது மிகுந்திருப்பானே. மீதியை அவன் அறிந்தும் மீண்டும் அறம் தோன்றும் மனு நீதியும் உடன் தோன்றும். இமய முடிகொண்ட எழில் விமலன் விடுவிக்க பொய்க்கா கொடையொடு பொய்கை பூமரை வலக்கரத்துள் சங்கம் புடைத்திருக்கும் சதுர் வேதன் கைத்தலத்துள். அங்கம் கொண்டிருக்கும் அகவல் ஊதும் அழகன் அகிபுசம் அதன் அரை மெய் கொண்டிருக்குமவன் சூலக்குறி கொண்ட சுழுமுனை நெற்றியுடன் ஞானம் சுமப்பானே. நன்னெறி போதிக்கும் நாடாய் ஒருமித்த பொற்குடை அமைப்பானே அவன் நற்கொடி உலகெழுந்து நாற்றிசை மணமுடைத்து புவிபோற்றியே பொலிந்திடவே புல் முதற் மன்னுயிரும் புண்ணியம் பெற்றிடவே எம்மவன் பதினெண்ணில் எழுந்திடும் சித்தருள்ளில் விண்ணருள் முத்தெனவே வேதம் மொழிந்தேனே அவன் முத்தமிழ் மொழிதேனை முப்பார் முழங்கிடவே முடக்கம் தகர்ப்பானே.
காதற் தோல்வி தாங்கிடினும் கற்கி தோல்வி தாங்காது மோதல் கொள்ளும் மூடர்களே ! வேதம் எதிலும் உறைந்தவனே விதியினை எழுதி தந்தவனே. வானம் விட்டு பிறப்பெடுத்து வையம் தழைக்க வைப்பானே. பாரில் எவனை பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டுமென ஆற்றுச்சூடி அனல் கண்ணன் அவனே என்னிலும் நன்கறிவான். யாரை பாரில் எழ வைத்து யுகத்தை முடிக்க வேண்டும் என்று தீயை மெய்யாய் உருவெடுத்த தேவி பகவதி கண்டறிவாள். தாரை வார்த்து என்னுயிரை தந்தே ஆயிரம் நோற்ற பின்னம் வேரை பிடித்து அவன் விதியை விண்ணே அதிர பாட்டிசைப்பேன்.
பொன்மகள் வாழாதிருந்தும் பூமகள் வாளாதிருந்தும் எம்மகள் காணாதிருந்தும் இதழ்விரிந்தொளிர் வெண்மரை மேல் வீணை மீட்டியே மென்மகளருளை மிக்க கொள்வானவன் கண்மலர் கனிவின் உருவாய் கைமலர் கொடையில் மழையாய் பெண்மலர் வணங்கும் இறையாய் பேரருளாளன் பிறவியைச் சொல்வேன். அத்தேற்றறிவாளன் துளிர்விட்ட நிகழ்வை வெண்டலையானவனன்றி வேறு தேவராளனும் அவன் திசுவையும் அறியான். பாகம் 129
நெய்தல் நிலம் கண்ட மருதம் கரம் தந்த தமிழன் நிலமொன்றில் ஆறேழகவையிற் அன்பாலையனடி பதிந்த அங்கொரு தோட்டத்தில் பைங்காணி வாவியாய் பைம்புல் மேனியாய் கரையுடை நெடுமழை நிரப்பியும் மாந்தர்க்கே நிலைக்காத நீர்நிலை நடுவிலே சிறுகோல் ஆயிரம் தொலைவுடை வெள்ளத்தில் ஆம்பல் கூட்டம் அலர்ந்ததோர் பள்ளத்தில் அருநீர்ப்பறவையாய் தெரிந்தொரு கருநீர்காகத்தின் கால் அகப்பட்டது சிறுநூல் வலையொடு சிக்கயே துடித்திட பெருமான் விழியது அதன் பெரும்பாடு கண்டிட ஐயனின் அன்பகம் அகழிக்குள் இறங்கிட ஆணைகள்
இட்டதால் சோதனை தாண்டியும் வானவன் நீந்தியே வந்து அப்புள்ளிடம் வசதியாய் சேர்ந்திட்டு வலைதனை அறுத்திட்டு அப்பறவையை விடுவித்து வாழ்ந்திடும் வரத்தினை எம் வானவன் வழங்கினான். இதை கரையினில் அமர்ந்த நன்மாந்தர்கள் அனைவரும் கைமலர் தட்டியே கரவொலி எழுப்பினர். அக்கடமையாற்றிட்ட பழமைப்பதியது தமிழர் பாகையாய் தரையிலுறைந்திடும் தலையில் உலவியே கைபணமீட்டிட கடும் பணியாற்றியும் உறைவிடம் இரவலாய் உற்றதோர் கொற்றவனுற்ற பல்லின்னலை பெற்றதை பெற்றத்தாய் போலவே உருகியே இறைவியும் உரைத்ததை கேட்டு யான் இரு கரம் கூப்பினேன்.
ஐயன் தேசத்திற்கு அதிகம் போனாலொரு அறுநூறு காதத்தில் ஆழிசூழ் தென்கிழக்கு வெள்ளத்துள் திருமதியின் தேயா நிறையொத்த ஐநூறிலொரு கூறு அனல் பொதிந்த ஆனையொன்று அந்தரத்தில் அரவணைக்கும் ஆடவனின் கரம் விடுத்து அவன் பிணைத்த சரடறுத்து ஆழிகோள் உருவெடுக்க அங்காருயிர்கள் அலறியழும் அபத்தத்தை விளைவிக்கும். அதன் ஆரம் தொடும் நீளமது நம்மன்னை நிலம் அண்டை நிலம் ஆறடுத்து அன்னமூட்டும் தாய் நிலமும் அதை அணைத்திருக்கும் மென்னிலமும் அழலடி விழும் திசையில் கருணையொத்த கவின் நிலமும் கருங்கண்டமுள்ளுறைந்த சிறு கண்டம் புதைந்திடுமே. பெருங் கண்டம் சிதைந்திடுமே. மந்தை போன்று மாந்தரெல்லாம் மரண ஓலம் எழுப்புவதை எந்தை சிவன் எடுத்தியம்ப உந்தைக்கு சொல்வதோடு உன் உதிரத்தை எச்சரித்தேன். ஆதலால் நன்று செய்க இன்று செய்க. அதை இன்முகத்தோடு என்றும் செய்க. நமை ஈசனடி கொண்டு சேர்க்க இம்மையொடு மறுமையிலா ஈடற்ற நற்கதியை என்றென்றும் ஈட்டி தரும். வீடற்றோரில்லாத விதி எழுதும் மதியமைத்து வினையறுக்க வழி வகுப்போம்.
அனந்தன் தலை வீழ்த்தும் அற்ப நோக்கத்தில் அறங்கொன்றோனொருவன் மாற்றானாய் உள்ளில் மறைத்து வைத்த விடம் விளைய தோற்றம் புதைத்து தொலைவிலிருப்பானவன் கனகம் ஈழத்து கலைஞன் தலை பத்தாய் தரித்த தளிர் கிளையில் உதித்த ஒரு கொடியோன் உறுமி எழந்தபடி ஒட்டிய தமிழ் நிலத்துள் ஒழிந்தே பதிந்திருப்பான். பாதகன் அவன் பணியை பரமன் முதலானோர் தினமும் யானறிய தேவரும் முன் அறிவர். பங்கய உந்தி கொண்டோன் பரந்த இடம் சுற்றி பாதக சூனியர்கள் உறைந்த மலை நாட்டில் நிறைந்த பொன்னளந்தும் நெறிமான் திருவடிதான் நிலம்படும் மண்ணள்ளி நித்தம் ஏவல் செய்தும் நெருங்கா தீயாவி நொறுங்கி வீழ்ந்திடுமே. திறந்த விழியோடு தென்னில வரையோரம் அங்கம் மறைத்தொழுகும் அவன் மேனியிற் நாக நாணொன்று நஞ்சு கண்டம் போல் அங்கு மிளிரக்கண்டேனவன் ஐயனுதிக்கும் அகவைகள் கடந்தே அங்கலர்ந்து பொய்யர் புடை சூழ வெய்யர் கரம் கொடுக்க அவன் அனந்தன் அலர்ந்த பின்பு அகிலம் வருவானே. அரியை இழித்தபடி அவன் செயலை பழித்தபடி அவதூறுரைத்தபடி சினமோங்குமொரு சிறு குழுவை இணைத்தபடி வனங்கள் பல புகுந்து வளவன் உயிர் நாடி வரம்புகள் பலமீறி ஒளிமகன் ஒளிர்ந்த பின்னே உதிரம் தெறித்தபடி உயிரை மாய்ப்பானே. எம்வளவன் வேரறுக்க எவ்வுயிர்க்கும் போர் தொடுக்கும் வரங்கள் வழங்காத சிவனை என் செல்லி சேவடி தொழுவேனே.
நெய்தல் நிலம் கண்ட மருதம் கரம் தந்த தமிழன் நிலமொன்றில் ஆறேழகவையிற் அன்பாலையனடி பதிந்த அங்கொரு தோட்டத்தில் பைங்காணி வாவியாய் பைம்புல் மேனியாய் கரையுடை நெடுமழை நிரப்பியும் மாந்தர்க்கே நிலைக்காத நீர்நிலை நடுவிலே சிறுகோல் ஆயிரம் தொலைவுடை வெள்ளத்தில் ஆம்பல் கூட்டம் அலர்ந்ததோர் பள்ளத்தில் அருநீர்ப்பறவையாய் தெரிந்தொரு கருநீர்காகத்தின் கால் அகப்பட்டது சிறுநூல் வலையொடு சிக்கயே துடித்திட பெருமான் விழியது அதன் பெரும்பாடு கண்டிட ஐயனின் அன்பகம் அகழிக்குள் இறங்கிட ஆணைகள்இட்டதால் சோதனை தாண்டியும் வானவன் நீந்தியே வந்து அப்புள்ளிடம் வசதியாய் சேர்ந்திட்டு வலைதனை அறுத்திட்டு அப்பறவையை விடுவித்து வாழ்ந்திடும் வரத்தினை எம் வானவன் வழங்கினான். இதை கரையினில் அமர்ந்த நன்மாந்தர்கள் அனைவரும் கைமலர் தட்டியே கரவொலி எழுப்பினர். அக்கடமையாற்றிட்ட பழமைப்பதியது தமிழர் பாகையாய் தரையிலுறைந்திடும் தலையில் உலவியே கைபணமீட்டிட கடும் பணியாற்றியும் உறைவிடம் இரவலாய் உற்றதோர் கொற்றவனுற்ற பல்லின்னலை பெற்றதை பெற்றத்தாய் போலவே உருகியே இறைவியும் உரைத்ததை கேட்டு யான் இரு கரம் கூப்பினேன்.
ஐயன் தேசத்திற்கு அதிகம் போனாலொரு அறுநூறு காதத்தில் ஆழிசூழ் தென்கிழக்கு வெள்ளத்துள் திருமதியின் தேயா நிறையொத்த ஐநூறிலொரு கூறு அனல் பொதிந்த ஆனையொன்று அந்தரத்தில் அரவணைக்கும் ஆடவனின் கரம் விடுத்து அவன் பிணைத்த சரடறுத்து ஆழிகோள் உருவெடுக்க அங்காருயிர்கள் அலறியழும் அபத்தத்தை விளைவிக்கும். அதன் ஆரம் தொடும் நீளமது நம்மன்னை நிலம் அண்டை நிலம் ஆறடுத்து அன்னமூட்டும் தாய் நிலமும் அதை அணைத்திருக்கும் மென்னிலமும் அழலடி விழும் திசையில் கருணையொத்த கவின் நிலமும் கருங்கண்டமுள்ளுறைந்த சிறு கண்டம் புதைந்திடுமே. பெருங் கண்டம் சிதைந்திடுமே. மந்தை போன்று மாந்தரெல்லாம் மரண ஓலம் எழுப்புவதை எந்தை சிவன் எடுத்தியம்ப உந்தைக்கு சொல்வதோடு உன் உதிரத்தை எச்சரித்தேன். ஆதலால் நன்று செய்க இன்று செய்க. அதை இன்முகத்தோடு என்றும் செய்க. நமை ஈசனடி கொண்டு சேர்க்க இம்மையொடு மறுமையிலா ஈடற்ற நற்கதியை என்றென்றும் ஈட்டி தரும். வீடற்றோரில்லாத விதி எழுதும் மதியமைத்து வினையறுக்க வழி வகுப்போம்.
அனந்தன் தலை வீழ்த்தும் அற்ப நோக்கத்தில் அறங்கொன்றோனொருவன் மாற்றானாய் உள்ளில் மறைத்து வைத்த விடம் விளைய தோற்றம் புதைத்து தொலைவிலிருப்பானவன் கனகம் ஈழத்து கலைஞன் தலை பத்தாய் தரித்த தளிர் கிளையில் உதித்த ஒரு கொடியோன் உறுமி எழந்தபடி ஒட்டிய தமிழ் நிலத்துள் ஒழிந்தே பதிந்திருப்பான். பாதகன் அவன் பணியை பரமன் முதலானோர் தினமும் யானறிய தேவரும் முன் அறிவர். பங்கய உந்தி கொண்டோன் பரந்த இடம் சுற்றி பாதக சூனியர்கள் உறைந்த மலை நாட்டில் நிறைந்த பொன்னளந்தும் நெறிமான் திருவடிதான் நிலம்படும் மண்ணள்ளி நித்தம் ஏவல் செய்தும் நெருங்கா தீயாவி நொறுங்கி வீழ்ந்திடுமே. திறந்த விழியோடு தென்னில வரையோரம் அங்கம் மறைத்தொழுகும் அவன் மேனியிற் நாக நாணொன்று நஞ்சு கண்டம் போல் அங்கு மிளிரக்கண்டேனவன் ஐயனுதிக்கும் அகவைகள் கடந்தே அங்கலர்ந்து பொய்யர் புடை சூழ வெய்யர் கரம் கொடுக்க அவன் அனந்தன் அலர்ந்த பின்பு அகிலம் வருவானே. அரியை இழித்தபடி அவன் செயலை பழித்தபடி அவதூறுரைத்தபடி சினமோங்குமொரு சிறு குழுவை இணைத்தபடி வனங்கள் பல புகுந்து வளவன் உயிர் நாடி வரம்புகள் பலமீறி ஒளிமகன் ஒளிர்ந்த பின்னே உதிரம் தெறித்தபடி உயிரை மாய்ப்பானே. எம்வளவன் வேரறுக்க எவ்வுயிர்க்கும் போர் தொடுக்கும் வரங்கள் வழங்காத சிவனை என் செல்லி சேவடி தொழுவேனே.
Comments
Post a Comment