பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.
பாகம்124
பாகம்124
🌸 கண்ணுக்ககப்படா அணுவுக்குள் கருவானாய். உன் காலடியில் கரம் குவிக்க காலமெலாம் தருவானாய். உள்ளது உள்ளபடி ஒப்பற்ற வடிவாகி உண்மையே உருவானாய். உன் ஒப்புதல்க்கு சிரம் தாழ்த்தி உனை துதித்தேன் வாக்காவாய்.
ஒப்பரியோன் அவன் உள்ளங்கையுள்ளில் ஓம்கார முத்திரைதான் கைத்தலம் வலதில் கதிர் வீசி கண்கவர அப்பெருமாள் அனைத்தும் ஒரு சேரும் வார்ப்பாய் ஒன்பது பிறவிகளின் உயரியதோர் நோக்காய் ஒருவனே தாங்கி வித்தகன் வடிவில் விரிவதை சித்தர்கள் மட்டுமே சிந்தனையுன்றி சிதறாதறிவர்.
உன் சேவடியறியா வஞ்சக வைதிகர் வரம்பிலா நிந்தனை செய்வர். வானவர் அவனை வாழ்த்தி வணங்கி வந்தனை செய்வர். சிவபக்தரும் புரியா புதிராய் பத்தாம் பிறப்போ பாவைப்பொன்னிதழ் வழி வித்தாய் விளைந்து முத்தாய் ஒளிரும் முற்றுமுணர்ந்த சித்தை சுமந்து
முலவராணைக்கிணைங்கியே முத்தமிழ் சொத்தை சுமந்து மூதறிவு சூத்திரமறிந்து சுடரொளி பாத்திரமேற்று பங்கய இதழ் குறி நெற்றியில் தாங்கி பாராள வருவானே. சக்கரதாரியாய் சங்கை வலக்கையுள்ளில் தாங்கி எங்கும் நிறைந்தோன் இங்கோர் உடலுடன் இறுதிப்பிறப்பெடுத்து பொங்கும் நிதிகுவித்து பொல்லாரை கொன்று குவித்து எல்லார்க்கும் நீதியளித்து எமையாள வருவானே. எம் ஈசன் உமையோடு எம்மானுக்கருள்வானே.
🌸மைதவழ் மான்விழி வீசும் மையலுள் வீழா மலர்மன்னனிவன் காலடிதோறும் கைதவர் கண்ணிகள் பதித்தும் கற்கியை கருமம் நெருங்காது காலனையே கதறிக் கழன்றோடவிடும் அரவ நஞ்சுறை அன்புநாதன் துஞ்சாதிருந்து தூமணியை தொடர்ந்தம்மையுடன் அரவணைக்க அகிலமே அடைக்கலம் புகுந்து ஐயனடி தொழும் நாள் அகலாதருகில் வருமே.
🌸 கற்கி தான் நீராட கமலவாவி சென்றபோது கண்பட்ட புள்ளொன்று பூவென மிதக்க கண்டு அதன் அருகே நீந்தி சென்று அடையாளம் கண்ட போது அது அன்னமே அல்ல ஓர் அழகெழில் புறாஎன்றே அறிந்ததனை எடுத்து வந்து இல்லத்து மாடத்திலே இதற்கொரு கூடமைப்பு செல்லமாய் வளர்த்ததற்கு சிதியொன்றை தேர்த்தெடுத்து குஞ்சுகள் பல பொரிக்க கொண்டாடி குதூகலித்தான்.
நஞ்சுறை நண்பனொரு நரியனாய் வாய்த்ததோடு நெஞ்சற நீதிகொல்ல ஐயனை நாடி வந்து இணையுடன் குஞ்சு பெற்று இன்புடன் வளர்ப்பேன் என்று அன்புடன் பேசி சென்று அதையே பொறியிலிட்டு பொசுக்கியே தின்றான் பாவி. அவ்வுண்மை அறிந்ததாலே ஐயனும் அகமுடைந்து அவனுக்கு சாபமிட்டு ஐயகோ என்றழுதான். ஆதலால் அக்கயவன் அழல் நோய்க்கு ஆட்பட்டு குடியோடு நொந்தழுதான். கொற்றவன் முற்றத்தில்
கற்புக்கு பேர் போன கண்களை கவரும் பல பொற்புடை புறாக்களவன் பொன்னகம் பறிக்கக் கண்டேன். அவை கைமாறி போனாலும் கண்டங்கள் கடந்தாலும் கழுகுகள் கிளித்தாலும் சிறகுகள் ஒடிந்தாலும் செய்நன்றி மறவாது உறைவிடம் வந்திறங்கும் அவ்வொப்பிலா உடன் பிறப்பை பலவாறு தீனியிட்டு உளமார நேசித்தான். அத்தகு உயிரினத்தில் அவன் மீட்ட முதல் புறாவோ ஐயனின் அன்பகத்தை அத்துமீறி தாக்கியே கொடும் நோய்க்கிரையாகி கூற்றுவனால் பிணமாகி தோட்டத்துள் தூங்குவதை ஏக்கத்தில் இன்றளவும் எம்மான் நினைத்தபடி பெருமூச்சிவிடுவானே.
🌸பிள்ளையாய் நீரருந்தி பெருமகளாய் தலைநிமிர்ந்து அன்னையாய் முலையூட்டி அன்றாடம் குளிரூட்டி அன்பகத்தின் வலக்கரமாய் அழகாக நின்றதொரு அமுத கலம் காய்க்குமொரு அழகான தென்னை மரம். இலம் என்று கரம் விரிக்காது இம்மையில் ஈசன் தந்த இணையிலா பிள்ளைவரம். மனை உயர்த்த இடையூறாய் மண்மீது நிற்கக்கண்டு மணவாட்டி ஆணையிட அதை மாபாவி வெட்டிபோட குலமகனார் அழுதுருக கூட உள்ள நன்றி கொன்றோர் நறுக்கியதன் குருத்துண்ண மன்னவன் மனம் குமுறி மறுப்பானதன் ஊன் உண்ண. என்னதான் இருந்தாலும் ஈர நெஞ்சே அமைந்தாலும் தென்னம் குருத்துண்ணா தெய்வ மகன் உலகில் உண்டோ ?
🌸ஐயன் விரலுக்கு அறுவிரலுயரத்தில் அன்னைநிலம் தொட்ட அழகெழில் மலர்ப்பதம் இடதின் வலதில் கொள்ளிடையும் வலதின் இடதில் எள்ளிடையும் இருக்கக்கண்டேனிரு மருக்களவை கணுக்கால்களில் இடம் பெற்று எதிரெதிரே உள் நோக்கி ஒருவரையொருவர் கண்ணோக்கி காதலிப்பரென என்னோக்கி இறையோனுரைக்க அதை பொன்வாக்காயுரைத்தேன் பூமகனே.
🌸 பூவையர் இவனகத்தில் பூக்க தன் பொன்னுடலணுகாது மோப்ப பேரின்பப் பெரும்பயனறியான் சிற்றின்ப சிறகை விரிக்க உதிரத்துள்ளுறைந்த உயிர்மணி ஊறிச் சொட்டுமவன் செவ்வாம்பல் மொட்டே ஒளிமணியை விரையம் செய்து வாதைக்கு வழி வகுக்கும் வரம்பிலா செய்கை கண்டேன். விண்ணாணை வரும்வரைக்கும் விந்துமணி உருக்கிவிட்டு பொன்னாளை வீணாக்கும் பூம்பாவை முயக்கத்தினும் புயமசைத்து இரசமெடுத்த பொழுதே பெரிதென அவன் பூங்குறியே புறம் சொல்லுமது இடம் சற்றே சாய்ந்திருக்கும். அவனந்தரங்கம் அத்தனையும் அடியேன் யானறிவேன். இத்தனையும் கசிந்ததற்கு இறையோனே மன்னிப்பாய் !
பாகம் 125
🌸அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே. மூவருள் இருளன் விரல் சுழற்றும் எழிற் சங்குடன் அங்கயற்கண்ணிணைந்து ஆனையாகுமதன் அல்லியங்குலி (அல்லி +அங்குலி)
அவன் பெருவிரல் அடுத்து பிறைபோல் வளைந்து அருநிலம் நோக்கியே அருவியாய் விழும் அவ்வாம்பல் நிறத்து ஐயன் கைத்தலம் வலதுள் அது அறிவின் வேர் நட்டு அரும்பொன்னூல் தொட்டு ஆயுள் வேர் விட்டு ஆனையின் முகங்காட்டி அழகேதும் சிதையாது மையத்திற் மேலுதிரன் உறைந்த மலைக்குன்றிற் மறையாதொளிர அவன் மரையடியிற் மலர் கூட்டும் கரம் பட்டால் மறுபிறப்பறுத்து மாயோனடி சேர்வதற்கு வழிவகுக்க வரமொரு கோடியுறும். வாக்கிது பொய்யில்லை. வானமே அதற்கெல்லை. அவனிதயம் எழில் வில்லாய் வளைந்திருந்து புலவன் பாதம் பணிந்து கீழ்ஆரன் சிரம் தன்னில் ஆழவேரூன்றி அதன் பின்னர் நீலன் குன்றில் நிமிர்ந்த கிளை விட்டு மேலேறும். மதிவில்லின்னொரு முனையோ மாமேதைக்குற்றது போல் உயர் செவ்வாயில் உச்சி வைத்து அதனொரு கால் இதயத்துள் ஈட்டியாக இன்னொரு கால் விதி தழுவி மதிமடிக்குள் குறியிறக்கி விரலரையாய் நின்றுவிடும். ஆயுளல்லிக்கொடி ஆரல் மேட்டிற் அறிவொடு தொப்புள் கொடியுறவெடுத்து தோன்றியே நிலவுக்கு வலமும் நீண்டு வெள்ளிக்கு இடமும் கொடுத்து மணிக்கட்டிற் மையங்கொள்ளும் மலர்க்கரம் இதுவே.
🌸கொற்றவனே தனை மாய்த்து கொள்வதற்கே அழுத்தமளித்திடும் மாற்றாரனைவருமே மனைக்குடியொடு தனை மாய்க்கும் விதியினை வலுசேர்க்கும் எம் வேந்தனின் வரமாகும். உற்றது சிவமாகும். உயிரவன் மகனாகும். பெற்றது பிறப்பறுக்கும் பெருமாளின் உடலாகும். மற்றதை என் சொல்வேன். மாளாதவன் மகத்துவமே. கற்றது கைதேர்ந்த கனி ரசவாதமுடன் கானகமென கொழிக்குமது கண் பறிக்கும் கனகம் குவிக்கும் கலையாகும்.
அற்றது கரும்பொன்னாய் அவனருளாலே அரும்பொன்னவதாரமுருவாகும். ஒற்றனாய் உள்ளுறைந்து உள்ளதை யானறிந்து உலகுக்குரைக்கவந்தேன். பொற்றலைவனவன் பொல்லுலகில் புணராது பூவிலக்கி முற்றுமைம்பொறியடக்கி மூலாதார கனலெழுப்பி சிற்றின்பத்தேனடக்கி சேராமல் முத்தடக்கி தன் சிரம் தனில் சரோருக இதழ்களொரு சகசிரம் விரிய பெற்றதொரு இன்பமது பேரின்பமே.
🌸மலர்களுருகும் மண்ணே தாங்காது விடலைகளலறும் வேதனையுணராது விண்டுறை விண்ணரும் விலகுவர். இவ்வாதை கண்டு வருந்தியே இங்குறை அமரரும் அகலுவர். எம்முயிர்கள் ஓலம் கேட்டு புல்லும் உருகுமே. கல்லும் கரையுமே. இங்குறைந்து அங்கு கண்டேன் எம்மானே எழுந்தருள்வாய்.
🌸 ஆள்காட்டி விரலில் ஆழிதாங்கியோனை அரவணை தாங்கியே அறிதுயில் புரிவோனை பாலாழி தாங்கியே படுத்துறங்கும் பொன்னிப் புனலரங்கன் புகழ்பாடாது கல்கி போல் தலை எழுப்பும் கயவரனைவருமே கருவறுக்கப்படுவர். அது அறம் வகுத்த விதியன்று அவனவனமைத்த விதியுமதை அகம் குளிர காண்பதுவும் அடியேன் விதியுமென விதித்தவனே விரும்பியதும் எனை விதைத்தவனே வேண்டியதும் அறம் சிதைத்தவரை சிரமறுத்து சிவன் சேவடியிற் குவிப்பதனை எவன் காணாதிருப்பினும் யான் காண்பேன் பரம்பொருளே .
விண்ணற வீடிலா ஊழினை கண்ணறக் கதறியே கடும் வழியகற்றி காக்கும் ஈசனின் கமல திருவடி சேர்க்குமிடமது சிர்மிகு மறுமையை என் சொல்வேன் ;
பாகம் 126
🌸 அறம் உயிர்நாடியாய் அருந்தமிழனன்னையாய் மறம் மாறா மல்லன் புறம் காட்டா திறமுடையோனவன் தினவெடுத்து புயம் துடிக்கும் தென்னிமயம் எழுவது; தீரப்புயல் தாக்கியும் கோரத்தீ மூட்டியும் பொய்துயில் கலையா பொன்னரங்கன் அறிதுயிலும் பூநிலத்தெற்கில் தேவதேவப் பொறியெழுமே. அவன் ஆய கலை அறுபத்தி நான்கும் ஆதிமுனியருளுமுன்னர் உற்ற குடிக்கும் நயம் கொடாதவன் ஊருக்குள் உருப்படாதவன்
பாருக்கே பயன்படுவானவன் யாருக்கும் பயப்பாடானவன் நீதிக்கே உடன்படுவானென நெஞ்சார வாக்குரைத்தேன். நஞ்சர் நரிகளை நாடெல்லாம் கருவறுத்து நல்லோரகம் குளிர்வித்து அஞ்சாப்புலிகளை அரவணைத்து பொல்லா அடும் பூனையை புறம் ஓட்டி அனைவர் வலியையும் அவனுணர்ந்து ஆழமாய் நிலைக்கும் இன்பமுற காலமெலாம் வாழவைக்கும் வள்ளல் அவனுக்காய் வானமே வாழ்த்து பாடும்.
🌸 அகரம் முதலாயின் ஆகரம் அவன் அப்பன் முன் தோன்றி ணகரம் மெய்யாகி குமரன் பெயர் சொல்லி குழந்தையாய் முடியும் கொற்றவன் தாதை கொண்ட பெயருரைத்தேனதை மற்றவரறியாது மாமுனிகளறிவரே. பகரமெய்யுடன் பைந்தமிழ் ஒகரம் புணர செங்கனகமொலிக்குமவனை பெற்றாள் பெயர் சொல்லின். இனி அவனைச் சொல்லின் அதிலிருவருறைவரே. இனிய காதலாற் இருகரம் தழுவியும் இணை தவறியவள் இகரமுயிராய் எழுந்து நின்ற பின் ரகர நெடிலுடன் தகரமோங்கி தங்கத் தலைவி நிற்க தளரா ஈகைக்கோர் இறைவி துணையாள் அவன் சிகரம் தொடும் பொழுது சீரடி தொட வருவாள். பின்னம் வருகின்றவன் பெயரின் முன்னம் ககரம் அங்கமாய் இகரம் இன்பமாய் உயிரெடுத்து உறைய ரகர உடலுடன் உகரம் உட்கார ஒட்டுமொத்த திக்கெண்ணுடன் தேனுறையும் எம்முயிர் மொழியிருக்க ; உலகேற்கும் ஓர் மொழியின் அகரம் ஈற்றிலமைய அனைத்தும் எமையாளும் வேலவன் வெற்றிக்கரங்களின் எண்ணில் மாலவன் நாமம் தன்னை மறைத்து வைத்தேன் மாமணியே. மறையுறைந்து மனமேவும் தூமணியே .
🌸 அங்கம் இடம் கொண்ட செவ்வாம்பல் கைதலத்துள் அரியமர் அரியணையாம் அக்கன் இறகுயர்த்தி அறுமுகவேல் பொதிய அவ்வேலின் தலை காக்கும் வேலையை ஏற்று நிற்கும் விண்டுவின் விரல் தாங்கும் வீரிய சக்கரமே வேந்தன் பொற்கரத்துள் மையப்புள்ளி கொண்டு எம்மனதை கொள்ளையிடும்.
இக்கைத்தல முத்திரையிலாது இக்கவிதையுள் எதையும் சொலாது எத்தகு சின்னமும் இலாது எம்மானெழுதலென்பது கதிரவப்பகவனிலாது கோளங்கள் சுழற்வதற்கொப்பாகும். இஞ்ஞாலமே முற்றிலும் தப்பாகும். மெஞ்ஞானமே இதற்கோர் தீர்வாகும். மெய்யகற்றி பொய்யமைத்து மெருகேற்றி கதைகட்டி கள்வர் திருத்திய எம்பாடல் கடும் வேதையை கொணர்ந்து வாதை தரும். கண்ணீர் பெருகும் வெய்யருக்கே கற்கி கனலாய் பூக்கையிலே. காப்பியம் புதைத்த இப்புதிருக்கு காலம் நல்லொரு விடை நல்க காலன் வரும் வரை காத்திருப்பேன் கண்திறவாய் எம்பரம்பொருளே
🌸 உந்திக்கமலமுடையான் ஒளிர் கைத்தலமுறை கனகக்கொடியோ கட்செவியுடை கருநாக முடியான் கரமுடை முச்சூலமதன் முடி கவிந்து மூதறிவன் மணிக்கரம் நோக்க அதன் நடுவேல் நெடுங்கோடென நீண்டு கமலக்காம்பாய் கைபிடி பூண்டு இதயத் தமனியுடன் இணைந்தேறி நீலன் மேட்டில் நிற்குமிருகிளையாய். கண்டேனவனை காலன் நெருங்கா கல்லென ஆயுள் உறைந்தோனது ஆருடம் சொன்னேனிதை ஆரிடம் சொல்வேனிதை அனைவருக்கும் சொல்லேனிதை மானிடம் வெல்லும் போது எம்மானுடன் யானிருப்பேனவன் மலரடி தொடர்ந்தே சிவனடி சேர்வேன்.
🌸 வெட்டிய கோணம் விழாமல் விரைந்தே வேறிடம் பெயர்ந்தாலும் அங்கு பாட்டன் பதிந்து பண்போடு கட்டிய குடிசையும் ஒன்றுண்டு பின் கட்டிடமாகி எழுந்ததுண்டு. அது சேயோன் குன்றின் புறமாகும். எம்நேயன் நாற்சிரன் பெயருடைய ஆயபணிக்கோர் புரமாகும். அங்கு மாயோன் வகையினர் மண்ணிறைய நம் தூயோன் தோன்றா மனையுள்ளே அவன் தோன்றும் காலம் முன் தோன்றி துவளா ஐந்துவிரல்களிலே ஐயன் தாதை அதில் நடு விரலாவான். அதில் முற்றிய மூத்தவள் நிலமுறைந்து முக்கணன் சேவடி சேர்ந்தாளே. அதிலிளையோன் மட்டும் உதிராமல் எம்மான் வரவை காணும் வரை உயிரை கையில் பிடித்தபடி உறங்காதுலவிட யான் கண்டேன். அவன் பகவதி அம்மன் பதம் தன்னை பற்றியே பணிவுடன் திரிவானே.
🌸 ஐயன் தோன்றி இரு அகவையுள்ளே அவன் அப்பனப்பன் வீழ்வானே. அப்பாட்டன் தலையில் வேலிருக்க பக்க பலமிடை ஆயுதமாய் பிள்ளைத்தமிழொடு வால் இருக்கும் வெள்ளை மனமுடை இல்லாளோ கிள்ளை மொழியுடை நல்லாளாய் அவுரி நிறமுடை பெயரெடுத்து அத்துடன் பாயொடு கால் பதிந்து பக்தி நெறியுள் தழைத்தபடி அவனப்பன் மெய்யுடல் பொய்த்த பின்னர் ஐயன் அகவை ஐநான்கில் அங்கம் கூனி குறுகியதால் அவளும் மீளா துயில் கொள்வாள்.
Comments
Post a Comment