Posts

Showing posts from December, 2022

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.

Image
  பாகம் 133     அகிலத்தின் அன்பனென அருளாளன் பெயருற்று அறம் மாறா ஏழ்முனிக்குள் அவனொரு ஞானியுமாய் முடி துறந்த அரசனவன் முற்றுணர்ந்த முனிவனுமாய் அரம்பையுடன் அன்றிணைந்து அழகுடை பூமழலை அலரக் காரணமாய் மாகவிஞன் காவியத்தில் மறதியுறம் சாபமுற்ற நீள் கூந்தல் நேரிழைக்கு நெறிபிறழா தாதையவன் முன் வந்த முதுகுத்தண்டுவடம் சிதைந்த முடவனொருவன் முறை தவறி காமன் கண்ணாயிரம் கரமோங்கும் உலகுறைய உடன்பட்டும் உள்ளுறைய விடாது உம்பர்கோன் மறுத்ததனால்  ஆரம்பையருலகமொன்றை அவனுக்காய் அமைத்ததொரு பிரமமுனியை பெயர் சொலாது நீயறிவாய் ! அம்மாமுனிவன் அருமகள் மறவன் குலம் தோன்றி மாலனுறங்கும் மண்டபம் மேற்கே மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும்  கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர  அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் ...

பாகம்130, 131 & 132 ஐயனுதித்த ஆதிசிவனொளி பதிந்த அருளில்லத் திருவாயிற்படிக்கு தெரியும் கிழக்கே தீங்கிழைக்கா எம்மானுறவு அம்மான் முறை வரும் அறவோன் ஒருவனின் பொழிற்பொதி புத்தன் வீட்டு முற்றமுறைந்த பத்தடி கேணியுள் பாரில் பிறந்தே அறுமதி கடந்த இளம் மறி மழலை அவனுடன் வந்து மறுகடக்க அறியாததன் கால் இடறி கண் முன் வீழ்ந்து நீரில் மிதக்க நெஞ்சம் பதைக்க கருணைக் கடலாம் கனிவின் பெருமான் தன்றுயர் நோக்கா தக்க பொழுதிற் ஈரேழகவையுள் நீருள் பாய்ந்து ஈரநெஞ்சோடணைத்து ஆட்டை மீட்டு ஆருயிர் காத்த அரும்பெருஞ்செயலை அனைவரும் போற்ற ஆகாயம் வந்து அமரர் அரம்பையருடன் அடியேனும் வாழ்த்த சேதாரம் இல்லா செவ்வேள் பண்பினை ஆதாரமோடும் அவனடிதொழுது ஆதாயம் இன்றி அருள்வாக்காய் உரைத்தேன்.

Image
பாகம்130   அம்பாள் துணை இருக்க ஆதி சிவனுடனிருக்க அருட்பண்பன்‌ கிடைத்தானே பரம்பொருளே. அண்டமெலாம் பெரும்பேறு பெற்றதற்கு அலகிலா நன்றி சொல்வேன் பரம்பொருளே. வெண்டலையான் அருளாலே கொண்ட துயர் விலகிடவே வந்த வரம் இவனெனவே வையகத்தை உணர வைத்தாய் பரம்பொருளே. பகுத்தறிவு பூமலர பயனுடை விதையூன்றி புகுத்திடும் அவன் நெறியை புடம்போட்டு சொல்லிடவா ! பூமான் புகழ் மணக்க புறமுரைத்து  புண்ணியம் கோடி யான் ஈட்டிடவா ! அறம்பாடி இவன் வாழ்த்தி அவன் வாழ்க நீடூழியென உளமாற பரிமாற உலகுடை  நிலமனைத்தும் வளவாழ்வு இனி பெறுக என்றிட வா !  பைந்தமிழர் இனம் சிறக்க பட்டொளி கொடி பறக்க வான் மகனே என்புருக்கி எமை வாழ வைக்க வந்துதித்தான். இதயம் இயங்கும் வரை இயலும் காலம் வரை  இறுதிமுச்சோடும் உறுதியிருக்கும் வரை புதையல் அவனாக பூமகள் புன்னகைக்க இம்மை முழுமையும் செம்மையாக்கிடவே  நம்மை காக்கின்ற நன்மை பொழி மாரியென தன்னுயிரை தாரை வார்க்கும் பைம்பொன் பெட்டகமாய் பன்னாட்டிற்கமைவானே. இதை சிவனாரும் அறிவுறுத்த சித்தர்களும் அறிவாரே. சிற்றின்பமுற்றோனும் சிவனெறியை விட்டோனும் கருவமுற கற்றறிந்து காமன் கணை பட்டோனும் சினம...