பாகம்130, 131 & 132 ஐயனுதித்த ஆதிசிவனொளி பதிந்த அருளில்லத் திருவாயிற்படிக்கு தெரியும் கிழக்கே தீங்கிழைக்கா எம்மானுறவு அம்மான் முறை வரும் அறவோன் ஒருவனின் பொழிற்பொதி புத்தன் வீட்டு முற்றமுறைந்த பத்தடி கேணியுள் பாரில் பிறந்தே அறுமதி கடந்த இளம் மறி மழலை அவனுடன் வந்து மறுகடக்க அறியாததன் கால் இடறி கண் முன் வீழ்ந்து நீரில் மிதக்க நெஞ்சம் பதைக்க கருணைக் கடலாம் கனிவின் பெருமான் தன்றுயர் நோக்கா தக்க பொழுதிற் ஈரேழகவையுள் நீருள் பாய்ந்து ஈரநெஞ்சோடணைத்து ஆட்டை மீட்டு ஆருயிர் காத்த அரும்பெருஞ்செயலை அனைவரும் போற்ற ஆகாயம் வந்து அமரர் அரம்பையருடன் அடியேனும் வாழ்த்த சேதாரம் இல்லா செவ்வேள் பண்பினை ஆதாரமோடும் அவனடிதொழுது ஆதாயம் இன்றி அருள்வாக்காய் உரைத்தேன்.
பாகம்130
அம்பாள் துணை இருக்க ஆதி சிவனுடனிருக்க அருட்பண்பன் கிடைத்தானே பரம்பொருளே. அண்டமெலாம் பெரும்பேறு பெற்றதற்கு அலகிலா நன்றி சொல்வேன் பரம்பொருளே. வெண்டலையான் அருளாலே கொண்ட துயர் விலகிடவே வந்த வரம் இவனெனவே வையகத்தை உணர வைத்தாய் பரம்பொருளே. பகுத்தறிவு பூமலர பயனுடை விதையூன்றி புகுத்திடும் அவன் நெறியை புடம்போட்டு சொல்லிடவா ! பூமான் புகழ் மணக்க புறமுரைத்து புண்ணியம் கோடி யான் ஈட்டிடவா ! அறம்பாடி இவன் வாழ்த்தி அவன் வாழ்க நீடூழியென உளமாற பரிமாற உலகுடை நிலமனைத்தும் வளவாழ்வு இனி பெறுக என்றிட வா ! பைந்தமிழர் இனம் சிறக்க பட்டொளி கொடி பறக்க வான் மகனே என்புருக்கி எமை வாழ வைக்க வந்துதித்தான். இதயம் இயங்கும் வரை இயலும் காலம் வரை இறுதிமுச்சோடும் உறுதியிருக்கும் வரை புதையல் அவனாக பூமகள் புன்னகைக்க இம்மை முழுமையும் செம்மையாக்கிடவே நம்மை காக்கின்ற நன்மை பொழி மாரியென தன்னுயிரை தாரை வார்க்கும் பைம்பொன் பெட்டகமாய் பன்னாட்டிற்கமைவானே. இதை சிவனாரும் அறிவுறுத்த சித்தர்களும் அறிவாரே. சிற்றின்பமுற்றோனும் சிவனெறியை விட்டோனும் கருவமுற கற்றறிந்து காமன் கணை பட்டோனும் சினமோங்கி மனங்கெட்டு சிரம் தாழ்த்தா கொற்றோனும் சிறிதளவும் அறியானே. பேரின்பமறிந்தாற்போல் பெருங்கூத்தமைப்போனும் காரிருள் உள்ளத்தால் கண்ணொளி இழந்தோனும் இம்மேன்மகனொளி முகத்தின் மென்மையினை அறியானே.
கைத்தலம் அகத்தே கமலம் மpலர்ந்து காந்தமெனவே கண்ணைக்கவர அரவம் நெளியும் அண்ணல் கரத்தின் புறத்தே நரம்பென தெரியும் நாதன் மேனியில் நற்புயமோங்கும் நறுங்காயமதன் நலம் சொலின் முருக்கேறிய முருகின் முற்றிய வைரக்கட்டை மெய்யாயுறைந்து மையலுற சித்தம் கவர்ந்தே சேயிழை பலரும் பித்தமடைவர் பெருமான் நடப்பின்.
ஔடதன் ஆயுதம் யாதுமே ஐயன் ஆருடல் தீண்டிட வரம் பெறாது அவன் அங்கம் மிளிரும். சிவன் ஆயுதம் காத்திடும் சரவணன் எந்திரம் வாய்த்திடும் கைத்தலமுற்ற கைங்கரியம் செய்யும் எம்மான் முகமெழில் நோக்கிடின் எமனாயுதமே ஆயினும் எதிர்த்தெழ இயலாது உயிரற்றே தலைகவிழும்.
உச்சி வகுந்தெடுக்கா உயர்வுள்ளும் உத்தமனிவன் ஊழ்வினை சொல்வேனவன் கச்சியே கம்பன் கையுறை உடுக்கை இடுப்பெடுத்து ஒய்யாரம் கொண்டிருப்பான். அடிவயறு தொங்கா ஆணழகன் அங்கம் கொண்ட அரிமா நடையை அன்றாடம் யான் கண்டேன். படுக்கையை பாம்பணையிலிட்டவன் எனை துடிக்க விடாது துணையிருப்பான் என்ற உடன்படிக்கையொடு உலகிறங்கியே உத்தமரை அச்சுறுத்தும் உறுபகைக்கஞ்சாது அருந்தமிழர் பண்பாட்டு மரபையெல்லாம் பத்திரமாய் பாதுகாக்க முத்திரை பதிப்பானவன் மூத்தவரை மதிப்பானவன். சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழவன் நாப்பழக்கம் என அத்தனை அறிவரையும் அலங்கார மாலையாக்கி அறிவுக்களஞ்சியமே அவனமைப்பானென ஓம்காரம் உலகதிர பூங்காதில் இதையுரைத்தான் இறையோனென பெயரெடுத்தான்.
ஐயனுதித்த ஆதிசிவனொளி பதிந்த அருளில்லத் திருவாயிற்படிக்கு தெரியும் கிழக்கே தீங்கிழைக்கா எம்மானுறவு அம்மான் முறை வரும் அறவோன் ஒருவனின் பொழிற்பொதி புத்தன் வீட்டு முற்றமுறைந்த பத்தடி கேணியுள் பாரில் பிறந்தே அறுமதி கடந்த இளம் மறி மழலை அவனுடன் வந்து மறுகடக்க அறியாததன் கால் இடறி கண் முன் வீழ்ந்து நீரில் மிதக்க நெஞ்சம் பதைக்க கருணைக் கடலாம் கனிவின் பெருமான் தன்றுயர் நோக்கா தக்க பொழுதிற் ஈரேழகவையுள் நீருள் பாய்ந்து ஈரநெஞ்சோடணைத்து ஆட்டை மீட்டு ஆருயிர் காத்த அரும்பெருஞ்செயலை அனைவரும் போற்ற ஆகாயம் வந்து அமரர் அரம்பையருடன் அடியேனும் வாழ்த்த சேதாரம் இல்லா செவ்வேள் பண்பினை ஆதாரமோடும் அவனடிதொழுது ஆதாயம் இன்றி அருள்வாக்காய் உரைத்தேன்.பாகம்131
ஓயா பிணிகள் உலகையே தாக்கி ஆறா வடுவை அமைத்து செல்லும். வடக்கர் தெற்கின் வளம் பல சுரண்டி வன்மம் ஓங்கும் நெஞ்சம் பூண்டு வஞ்சம் தீர்க்கும் நஞ்சம் கொண்டு நினைவால் உயர்ந்தோரென்றே நீசருள்ளின் நீலம் கொண்டு வாழ்வில் கொழுத்து வாலை ஆட்டும். நிதியை வழித்து நெருக்கடியளித்து விதியை அவர்க்கு வேண்டி யமைத்தும் வெய்யர் கூட்டம் வேதமோதி மோதும் மூடரின் முடை வீசும் மதத்தின் பெயரால் மண்ணை சிதைத்தும் மாண்புடை மாந்தரின் எண்ணம் மறுத்தும் நரியார் பலபேர் நன்னிலம் ஏய்த்தும் நாட்டோரனைவரும் துயருறும் வேளை தென்னிலம் ஈன்ற தேவனொருவன் வன்னிலமமைத்து வாய்க்குள் இட்ட அரியெனும் வரியை வாதம் எழுப்பி வதங்கள் செய்து அந்த வானம் தொட்ட வரையையும் மீட்டு ஞாலம் தொட்டு நன்னெறி படுத்தி நல்லுரை சொல்லும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் கனவினை இங்கீடேற்றி பூமகள் காக்கும் மேன்மகனவனே ! பொன்னியில் பூத்து பொருநை யூறும் பொதிகை வரையுள் பொறிமலர் பறக்க புயலாய் சிறக்கும் முல்லையிலுதித்த முக்கண் முதல்வனின் முண்டக முகனே !
ஓடுமீன் நடுவிற் உறுமீன் வடிவெடுத்து பாதகனை சிதைத்து வேதம் மீட்டு விதி எழுதும் நான்முகற்கே மீண்டும் ஒப்படைத்த மாதவப்பெருந்கையுமிவனே. அமுதெடுக்கும் ஆயத்தம் பெற்று ஆழியுறை ஆகாயம் தொடும் நெடுமலையின் நிறை சாய நிறையாப்பணி ஓய கருங்கமடம் உருவெடுத்து கார் வண்ணன் கடல் புகுந்து கீழுறை கிடை மலை நிமிர்த்தி கிடைக்கரிய அமுதம் விளம்பி ஆனையூர்தி குலத்திற்கு
ஆருயிரளித்து அமரர்க்கே அத்தனுமாயினன் இவனே.
கூரேனம் வடிவெடுத்து குளிர் நீராழியுள் குதித்து பாரெடுத்து பதித்தோனும் இவனே.
குறளாய் தனை குறுக்கி கொற்றவன் முற்றம் வந்து குறை கோரி கொடையாய் மூவடி இரந்துப் பெற்று மூன்றாம் அடியாம் மணி முடிக்கு உற்றவனும் இவனே ! பக்தனை காக்க பாதி மெய்யுடலில் பாரியின் மேலுடலெடுத்து பாரதிர கோளதிர பதினான்கு உலகதிர சிங்கப்பெருமாளாய் சிரமுதறி சீறியே அந்தரத்தில் அரண்மனை வாயிற்படியில் அரக்கனலற குடலுருவி கொன்று அகிலத்திற்கு உற்ற
அறங்காவலனுமிவனே. அவனே அனைத்து அரக்கரும் ஒருங்கே பெற்ற அழியா வரமனைத்துமுற்று உலகிறங்கிஓயாது சிவனை நினைந்து சிதறா சிந்தை கொண்டு குமரனை நோக்கும் குலமாந்தர்க்கு கதிர் காமனாய் கோவிந்தனை நோக்கும் நலமாந்தர்க்கு குறைதீர்க்கும் கொதிக்கும் கற்கியாய் மந்தையோடு மந்தையுள் கலந்து மண்ணிலுதித்ததை எவன் சிந்தையும் உணராது போயினும் இவன் சிந்தையுள் சிக்காது போவானோ அச்சிங்காரச் செவ்வேளவன் சேதி சொல்வேன் பரம்பொருளே.
முதல் நோக்கம் முகுந்தன் ஏங்கும் மூவைந்தில் முப்புரமுறைந்து உள்ளூர் அடுத்து அறிவரங்கம் தன்னில் அமர்ந்து அவரவர் உள்ளரங்கம் திருடி ஒலிக்காதொழுகும் வாய்மொழிகள் முடங்கி நால்விழிகள் பேசியும் பூக்கா இதழொடு அவளது பேதை துவங்கும் பைங்கிள்ளைப் பருவம் பகருமவள் பெயரது முகமென பட்டத்தரசியின் பாங்குடை சொல்லாய் பந்திக்கு முந்திச்செல்லும் அது பன்னாடேற்கும் பரங்கியர் மொழியில் துவங்கிய பின்னம் பொன்னை இடையில் புகுத்தி பூக்கும் பூவின் நுனியில் விண்மீன் பெயரது விளைந்தே காக்கும் பெருமான் சிவனின் பேரருள் பொழியும் காலடி வீழ்ந்து சீருறு வாக்கியம் வாயில் வருவதை சிந்தை ஊன்றி செவ்வனே கேளாய்.
கடைநோக்கம் கற்கிக்கமைவது கன்னிக்கனியன்னையெனும் கற்புடை மாதின் பொற்புடை புதல்வனுதித்த பொய்யா திருக்குடி பெயரமைந்த தேவனாலயமுற்றமிருப்பது திருமாலழகுறு தீரப்பிறப்பெடுத்து சனகிக்கு இணை சேர்ந்தோன் சார்ந்த புதுப்பதியது அம்மை அழகுறு வாலை குமரி பாதம் தழுவும் கடலடிக்கு காதமொரு தூரம் குடக்கேயமையுமாங்கே ஐயன் தன்னின் அல்லல் பொழுதை மெல்ல போக்க நுழைந்த போழ்து மேய்ப்பனை தொழும் பொருட்டு மீட்பனாயன் திருத்தலமமர்ந்த பூவிழி இரண்டொடு பொழிந்த கணையால் ஐயனிருவிழி ஆங்கவளிதயம் ஈர்க்க இணைய இயலாதேங்கும் எம்மானுருகிய நாளை உள்ளூர உள்ளி உமையொரு பாகன் ஒளிர் பதம் வருடி எமையொரு அடிமை இழியோனென்றே என்றும் எண்ணி சுமையினை தளர்த்தி சொல்லும் சொல்லில் அவன் விதி முடிந்த காதலை சொன்னேனதை அறியாதகன்றாலது அடியேன் பிழையோ ? முதலும் கடையுமாய் முகுந்தன் உடலிணையாவது முடியா காதலொடு முடிந்த கனவின் கருச்சிதைந்தது கர்த்தரின் முத்திரையணிந்த முண்டக முகமலர் பேதையொன்றும் பின்னம் வருபவள் பேரானந்த வாழ்வுள் புகுந்தங்கொருவனுக்கு புணர்முத்தம் கொடுத்ததன் பயனாய் பெண் முத்தீன்றும் பொற்சரடறுத்தும் கண் கொத்தி ஈர்க்கும் கனிகளை யொத்த கவின் முலை நிற்க பேரிளமடுத்த பெண்மயிலொருத்தி என்பதை யானும் இளம்பிறை சூடி இணைபிரியாது எமையும் உமையும் இமையென காக்கும் பித்தன் பெருவிழி எடுத்தே எம்மானவன் பீடைக்காலமதை பெரும்பாடுபட்டறிந்தேன் மேலும் அவ்வரும்பாடறியாய் அறனே. பாகம் 132
சேரமான் பரித்த செழுநிலத்தில் ஆரந்தாழ் அழகெழில் அனந்தனுறங்கும் பாம்பணையான் பக்தி பதியுறை பணில முகத்திற்கெதிராய் கதிரவனெழும் கவின்திசையை கால் வைத்தளந்து முக்காதம் தொலைவிற் முந்திச்சென்று மூவேந்தர் முதல்வேந்தன் முற்றத்தில் ஆழ்வாரோதும் அரவணை மாலனுறங்கும் மாமண் குணக்கே மரகதன் மண்டியிடும் மலர்மகள் பிறப்பாம் மைதிலி மன்னன் பைம்பதி தன்னில் திருக்குடி ஆயன் செவ்வரமொத்த அருட்பெரும் அறிவாலயம் உள்ளில் அகவை பதினான்கு அடியெடுத்து வைத்த ஒன்பான் நிலையுள் உண்டு உறைவிடமுற்று நன்று பயின்றும் நாதன் தேறாது நலமற அவனவலம் கண்டேனங்கு கண்ணும் கருத்துமின்றி காலிடறி கற்கி நிலை உயராது கலைமகளே கைவிட்டு ஊழ்வழி கெட்டு ஒருவருட.ம் பாழான விடலைப் பருவம் விரும்பாது வருந்தி திறவோன் திணறி தேவனை அழைத்தும் பயிலகம் சேர்க்க பாதிரி மறுத்தும் ஏளனம் செய்து எவரும் வெறுத்தும் பின்னரவனே பின்வாங்கி சென்று கவிழ்நத தலையுடன் கற்றே சிறந்து பிறந்த ஊருள் பெயர்ந்து வந்து பத்தாம் நிலையில் புத்தொளிவீசி பைம்பொன்னாகி பல்கலை முன்னம் பட்டயம் நாடி பாம்பரசன் பாவம் தீர்க்கும் பட்டணம் சேர்ந்து பயின்ற ஆண்டொரு மூன்றும் முடிந்தும் முடியா முடமுற்ற பருவம் முறிந்தும் படுமரம் போலே மின்னியல் உருவம் முடங்கிய பொறியின் படிவம் சிதைத்தான் .
பூமகள் முதல் மலராய் பொறையுடன் அமைவாளே. அவள் புத்தக அறிவோடு பட்டமே எட்டாமல் சித்தர்கள் அருளோடு சிட்டென வீட்டிற்குள் சிறப்புற விளங்கியே விளக்கொளியேற்றிடும் குலமகளாவாளே. அவள் அக்குடி ஒன்றியே ஐயனின் ஆருயிர் தொப்புள் கொடியினை தொடங்கிய பொற்கொடி துயருற்று வீழ்ந்ததும் துவளா தொண்டுடை புண்புரையோடிடும் புழுதியை அள்ளியே மெய்ப்பணியேற்பாளே. பின்னம் வருகின்ற பிறிதொரு பொன்மகள் ஆறிரண்டாண்டுகள் ஐயன் நினைவுடன் அவளுடல் பிரிந்தாலும் அவனுலகெழுந்ததும் அருளொடு அவனியில் புகழொளி பொழித்ததும் கனிக்கொடியிறக்கியே காலம் கடந்தவள் கண்ணீர் வலுவின்றி கைத்தலம் தருவாளே. இவள் கண்ணன் கோவில் கவின்மிகு மாடத்தில் கருங்கொடியோன் கைபட்டு கற்பகம் கலங்கியே பேரொளி பாய்ந்ததும் பிறவிப்பயனொடு ஊழ்வினை அறிந்தபின் உத்தமன் காலடி ஒன்றியே சேர்ந்ததும் மறுப்பவர் பணிந்தபின் மரகதப் பொலிவுறும் மணமுடை பொன்னேட்டில் புகழ்வீசும் வரலாற்றில் இவள் முகம் நிலைகொளும் ஈடிலா திறனோடு பாராளும் வல்லமை பன்முகம் பெற்றிருப்பாள். வான்மகன் ஆளுமைக்கு இம்மேன்மகள் பாங்கொரு பெரும்பங்காற்றிடும் அருந்தொண்டின் மாட்சி சொலின் மிகையாகி போகாது மேதகு பண்புடன் மீண்டு வந்த வான்மரைக்கு இப்பூதலமே கைகூப்பி புகழ்பாடும் தினந்தோறும். அன்று மாயோனுடன் மலர்ந்து மற்றோர் காயம் மணந்து மாளாக்காயமுற்று மங்கைக்குரிய பூரா கடன் தீர்த்து பொன்வண்ணன் பூவிதழ் முத்தும் குழலோசை கேட்டு மீளா துயலுற்ற மென்மயிலுமிவளே.
அறிவுப்பண்ணையாம் அருட்பெரும் திருத்துவத் திண்ணையில் முன்னம் பயின்ற முறைப்பள்ளி தன்னில் அன்னம் போன்றே அறனுக்கஞ்சும் ஐயன் அறவே செய்யா பாவம் சுமந்து புறங்காட்டாது பூநெஞ்சுருக புண்பட்டொரு பெரும் பழியேற்பான். ஆங்கு ஆராயாது அந்தண ஆசான் அவைதனிலமர்ந்து பிரம்படி கொடுத்ததை பெற்ற நம் பெருமகன் கண்ணீர் பெருக கதறித்துடித்த அக்கருநாள் தந்த கனிவிலா துயரின் கடும் அலகை எவன் கண் அளக்காவிடினும் அக்கனல் கண்ணன் அளந்ததை கண்டு செப்பிட என்னிரு சவக்கண் அயர்ந்தென் அகக்கண்ணுற்றதை கண்டோரெவருளர் கதிர்வேலனுடன் உளேன். அன்றைய்யனுடன் பயின்ற அகமுறை விடம் கொண்ட அருங்கயமையின் சின்னமாய் கண்டேனொருவன் அன்று கர்த்தர் கனியுமுன்னம் கணவாய் புகுந்து கண்டம் வடக்கை கைவசப்படுத்திய பின்னம் கொண்டவனுக்கே கொடையளித்த குணக்கோன் கொண்ட பெயரை கொண்டவனாவான். அவன் எம்மானேற்ற இதழ் கையேடொன்றின் கற்பகத் தமிழ் வரைந்த காகித ஓலையுள் பாரே மயங்கும் பாவையர்க்குரிய பங்கய குறியை பதமாய் குறிக்கும் அருவருப்புடைய அச்சொல்லெழுதி ஐயனின் தலைமேல் அபாண்டம் சுமத்தி அவ்வெய்யனளித்த வெட்கக்கேடுடை வேதனை செயலை ஊழ்வினையென்று உதறியதை உலகேயறியா. சிவனார் மானம் சீரழிந்தது போல செம்மகனிவனின் சீர்மலர் மனத்துள் மாளா வடுவாகி ஆலாய் விழுதூன்றி அங்கே நின்று நிலைத்து நெடுநாள் நினைவை சுட்டு வந்ததையறிந்தே வானவர் அழாது வருந்தி நெருடலுற்றதை யானறிந்திடத்தான் துஞ்சாது துதித்தபடி தூயாதி தூயவனை கெஞ்சாமல் கெஞ்சியே கீழுருண்டு மெய்சிவக்க மிஞ்சியதை மண்குடிக்க நஞ்சுண்ட நீல கண்டன் நாடறிய செய்யாது நானறிய செய்திடவே பஞ்சொத்த என் காதில் பதமாய் ஓதியதை பதமாக்கி சுரம் சேர்த்து பாடலாய் புறம் தந்தேன் பாவியர் அல்லாரறிவதற்கே.
Comments
Post a Comment