Posts

Showing posts from September, 2022

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

Image
பாகம்124   பாகம் 124   🌸  கண்ணுக்ககப்படா  அணுவுக்குள் கருவானாய். உன் காலடியில் கரம் குவிக்க காலமெலாம் தருவானாய். உள்ளது உள்ளபடி ஒப்பற்ற வடிவாகி உண்மையே உருவானாய். உன் ஒப்புதல்க்கு சிரம் தாழ்த்தி உனை துதித்தேன் வாக்காவாய்.  ஒப்பரியோன் அவன் உள்ளங்கையுள்ளில் ஓம்கார முத்திரைதான் கைத்தலம் வலதில் கதிர் வீசி கண்கவர அப்பெருமாள் அனைத்தும் ஒரு சேரும் வார்ப்பாய் ஒன்பது பிறவிகளின் உயரியதோர் நோக்காய் ஒருவனே தாங்கி வித்தகன் வடிவில் விரிவதை சித்தர்கள் மட்டுமே சிந்தனையுன்றி சிதறாதறிவர்.  உன் சேவடியறியா வஞ்சக வைதிகர் வரம்பிலா நிந்தனை செய்வர். வானவர் அவனை வாழ்த்தி வணங்கி வந்தனை செய்வர். சிவபக்தரும் புரியா புதிராய் பத்தாம் பிறப்போ பாவைப்பொன்னிதழ் வழி வித்தாய் விளைந்து முத்தாய் ஒளிரும் முற்றுமுணர்ந்த சித்தை சுமந்து  முலவராணைக்கிணைங்கியே   முத்தமிழ் சொத்தை சுமந்து மூதறிவு சூத்திரமறிந்து சுடரொளி பாத்திரமேற்று பங்கய இதழ் குறி நெற்றியில் தாங்கி பாராள வருவானே. சக்கரதாரியாய் சங்கை வலக்கையுள்ளில் தாங்கி எங்கும் நிறைந்தோன் இங்கோர் உடலுடன் இறுதிப்பிறப்பெடுத்து பொங்கும் ...

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

Image
பாகம் 118 🌸 பிறப்பெடுத்த பின்னம் பிறைமுடித்தோன் சிறப்பறியாது சிற்றின்பச் சிறகடித்து சிறப்பிலியாய் போவதற்கு செய்த வினை காரணமே. உறுப்பிலியாய் உதித்தாலும் உமையொரு பாகனில் உறைய நல்வழியுமுண்டு. உய்யவும் வழியிலியாய் உளம் கெட்டு உதவா பொறுப்பிலியாய் போகாமல் பொன்னகத்து வெறுப்பிலியாய் வேண்டுதல் வேண்டாமையிலான் வெண்டலையானை மறந்து பொல்லார் முன் வீழாமல்  பிறப்பிலியாய் பித்தனடி சேர்வதுவும் அவ்விறப்பிலியை அண்டி யான் இப்பிறப்பறுப்பேன். ஈசனடி மறுப்பானேன் என்னுயிரே செவிமடுப்பாய்.        🌸 பொதிகைமலையொரு பூமணவாட்டி பேரெலெழில் கோடுயர் கொங்கைகள் தூக்கி கொட்டும் கொடையென மழையமுதூட்டி கோடியில் மன்னுயிர் நலந்தனை கூட்டும் கோலத்தமிழர் அன்னை மூதாட்டி . அவள் கொடியிடையுள்ளிலருளிற் குறையா சிவனார் உருவில்  ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி. நீயேயறிவாய் எல்லாமருள்வாய் எமக்கே இறைவா .    🌸 ...

பாகம் 121, 122 & 123 அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார்

Image
 பாகம் 121 🌸 அன்னை நிலம் அழிவடையும் அகிலமெலாம் சிதைவடையும் கூற்றுவன் மனமகிழ்ந்து கொல்லும் போர் படையாலே கொண்ட நம் இமைகூட குத்திக்கொள்ள கூர்விழியும் குருடாகும்.   நாதனுயிர் குடியிருக்கும் நட்டவுடல் நலிவடையும். வேந்தர்களே நெறிமறந்து வீணர்களாய் அறம் மறந்து வாழும் காலம் தலை தூக்கி வந்துசேரும் வல்வினைகள் மாந்தர்களை நாளெல்லாம் மனம் குமுற செய்தபடி மேய்ப்பனுக்காய் ஏங்கிடுமே. விண் நோக்கி கரம் குவித்தும் வேண்டும் ஏதும் விளையாது விழலுக்கே வாழ்வளிக்கும் வினையாகி விழிவழியும் . குலம் தளைக்கும் விளைச்சலின்றி கொலைக்கருவி விளைச்சலாலே கூக்குரல்கள் வலுவடைய குற்றுயிர்களறுவடையாம். வாக்குகளின் விலையழிந்து வாடும் இனம் வழியழிந்து வகை வகையாய் இன்னல் வரும். வரம்பிலாமல் எல்லை மீறி இயலன்னை இரக்கமற்று உரக்க சீறும் அரக்கியாகி ஓய்வெடுத்த பின்னரொரு குடைகீழ் உலகு வந்து ஒருவனுக்கே உரிமையாகும். அக்குமரன் வந்தமரும் தருணம் வரை கொண்ட நிதிகுறைவதோடு பன்னாடும் தலைகுனிய பாரதமும் நிலைகுலையும். அன்னமேற்கும் திருவோடு அரசன் கைக்கே வருவதோடு அனைவர் கையும் காலியாகும். தேடியோரனைவரையும் திகைப்பிலாழ்ந்தி தென்முனை ஈன்றதொரு ...

பாகம் 112, 113 & 114 முப்பார்க்கும் மூலவனாய் முத்தமிழ் காவலனாய் எப்பார்க்கும் தொண்டு செய்யும் எம்மான் மனம் சிதைத்தால் எப்பயனும் இல்லையென்று இறையனார் என்மூலம் எச்சரிக்க உறுதியாய் வாக்குரைக்க உலகே நீ செவி மடுப்பாய். இதை அறுதியிட்டடியேனும் அகிலத்து அன்பரெலாம் அறிந்திடட்டும் என்றே அகம் கொதித்தாடுகின்றேன்.

Image
 பாகம்112 🌸  ஐந்தாறு அரவங்கள் அங்கமூர்ந்து ஆர்ப்பரிக்கும். அணங்குடை அருநிலத்தில்  அறுவடைக்கு அல்லலெழா வழிவகுத்து பருவங்கள் பொய்க்காது பயிர் வளர்த்து பாருக்கே அமுதூட்டும் பண்புடை புவியாய் வளம் கொழிக்கும் பைந்தரையை சேர்ந்ததொரு கடல் பாகை கட்டியதோர் கடன் பட்ட கிழமொருவன் செல்வப்பூ மலரும் செழுங்கலையறிந்த சிந்தனை பழமொருவன்  அறிவார்ந்தோர் திறம் பயின்று முண்டகத்துள் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியருள் காஞ்சனாத்தாள் பாலருந்தி கற்பூர மதியுடுத்தி கனக அமைச்சாகி பின்னம் கண்ணிய பேரவையுள் காவியம் படைத்தோனின் அரியணையிற் நேரெதிராய் நீதிகொன்று நிலையுயர்ந்த தற்குறிதான் தலைதூக்கி தானாளும் தருநிலத்தின் தரம் கெடுத்து கொக்கரிப்பான். செய்யாளை புறம்போக்கி செழுநிலத்து செல்வத்தை சீரழித்து வாய் ருசிக்காய் வாழ்திடுமே பேயாளீன்ற பெருந்துயர்கள். பேராண்மை தனை மறந்து நாட்டவரை நாயாக்கி நடுத்தெருவிற் விடுகின்ற வெந்துயரை யானுணர்ந்தேன். வெய்யரெல்லாம் அவை நடுவே வீற்றிருக்கும் நெடுமரம்போற் வெறுமனே அமர்வதனை சாபமாய் பெற்றது தான் பாவத்திற் பாவமாகும். பரந்தாமா கண் திறவாய். பொய்யர் பூக்கும்  வையத்து வன்னாட...

பாகம் 115, 116 & 117 நாசிக் காற்றை நன்றாய் இழுத்து ஓசை எழுப்பும் ஒருவித பழக்கம் உதித்த அவனின் மழலையில் துவங்கி அவன் உறங்கி உறையும் தருண வரைக்கும் உற்ற நண்பனாய் விட்டபாடின்றி வேண்டாது வருமே. கண் விழித்திருக்கும் கணப் பொழுதுதான் அவ்வோசையை அவனிடம் கேட்டேன்.

Image
 பாகம் 115   🌸 புகழீட்டா பூமுகம் பூத்து பொன்னுடலேற்று பகலவன் நீ வரும் வரையுள் யான் வன்மம் தீண்டியும் வஞ்சம் தீர்க்கா வஞ்சி நிலப் பொறை பூண்டு வாளாதிருப்பேன். பழவம் போர்த்தி பருமம் தூக்கி பொதிகை மலையாள் மயங்கும் கதிரை முயங்க அழைக்கும் பொருநை குறியுள் பொங்கும் பன்னீர் பருகிபடியே பணிந்து நின்று பல்லுடலூர்ந்து  பாயுமொளியாய் பதுங்கி யானுயிர்ப்பேன். ஆங்கு ஒங்காரம் ஓதும் உற்ற நாவுடன் உன்னடி வீழும் இம்மண்ணடியில் எனை எவரும் அறியா வண்ணம் நீள்வரையை ஈன்ற என் தாயெனவே நெஞ்சணைத்து நெடுதுயில் கொள்வதை நீயறியாது யாரறிவார் நிலம் மீட்க வந்த கலியுக காவலே !          🌸 ஊக்கமுடை உலகளந்தான் உயர்வானிற் ஆக்கம் அன்னையாய் அடிவருட அனந்தனாய் அங்குறைந்தாலும் அவனெம் ஐயனாய் அவனியில் அடியெடுத்தால் இங்கிறையோன் எழில் அணங்கனை ஏற்று வணங்குதல் மாண்புடை எம்மாலுக்கே உரித்தான  செருக்கிலா சீர்பெருங்குணமென அவனடியார் அறியாது போயினும் எம்போற் சிவனடியார் அறிவது சீர்மிகு ஞானமே !      🌸 உழைப்போர் குறைந்தே உண்மை கொன்று புதைப்போர் நிறைந்தே வன்மையோங்க பிழைப்போர் பெரித...

பாகம் 109, 110 & 111 தேவநகரியின் திருச்சொல் ஓமென்றமைய உயிர்மெய்யிணைந்த உறவிலி கரம்பிடி உடுக்கையும் மைத்துறைய உடையாளீன்ற செவ்வேள் உடுமீன் அறுமுனை அம்போருகமுள் அழகுறு இருக்கையும் திருமால் கையுள் திடமாயுறைந்த திவ்விய சங்கமும் தெளிவாய் தெரிய அவன் திருவழி மரபினர் நெற்றிகுறியென நெடுங்கொடி போன்ற திரிகோடுயர தெக்கண ஒவிய தென்னில பாகமும் ஆலய தீபமாய் அழகுறு ஈழமும் அருகினில் அமைய அனைத்தையுமொன்றாய் அன்பாயணைக்கும் ஆருயிர் தாயென தாமரை தாங்கும் கைத்தலங்கொண்ட எம்மானவனே

Image
 பாகம் 109 🌸 மன்னனெழும் முன் மண்ணிலுறைந்திடுமவன் மனையுடை மறைவெண் அடியேன் அறிவேன். அது எம்மன்னை மலைமகள் அழகு பெயருடை மற்றொரு புரத்தில் குற்றம்புரிவோர் கூடிவாழும் கோற்கொடியடியில்   வஞ்சகர் குலமே வளைத்துக்கொண்டு இவன் வாழ வழிவிட மறுக்கும் வண்ணம் விடுப்பு கைதி போல் விடுதலை கொடுத்து வெளிவரும் வாயில் வரும் எண் சொல்வேன். அங்கு மறை எண் கொண்டு மன்னவனுறங்கும் முரசு கட்டிலின் கீழே உமையொரு பாகனுறைந்த எண்ணுடன் திருவுடை செல்வம் சேரும் எண்ணுடன் துரைமொழி தந்த மூன்றாம் எழுத்துடன் சுவைபொழி எண்ணும் அண்டி அருகிலமைய அதை அவிழ்க்க இயலும் புதிரென பொதிந்து பூ போலுன்னிடம் தந்தேன். வானில் மீனை இயக்கி வந்து வாஞ்சையில் கோனாய் அமர்ந்தவனொருனாள் குற்றுயிரிழந்து குண்டால் சிதைந்து  அவனெழிலுடலறியா வண்ணம் அழிந்தவன் இரு பெயர் சொல்லும் சிற்றூரொன்று பேரூரென்னும் பெரும்பாம்பொன்றின் அரசனமர்ந்த ஆலயமுள்ளில் அருள்பெற கண்டேன் அறனே அறிவாய்.       🌸 மண்மகள் மார்பு கச்சையுள் மயங்கியே மறப்பாலருந்தும் மரகத மைந்தனவன் மைத்துனனிருவர் மரண வியாபாரக் குற்றேவல் புரிவோரென குறிப்பிட்டு கொன்றை வேந்தன் தன் கன்ற...