பாகம் 115, 116 & 117 நாசிக் காற்றை நன்றாய் இழுத்து ஓசை எழுப்பும் ஒருவித பழக்கம் உதித்த அவனின் மழலையில் துவங்கி அவன் உறங்கி உறையும் தருண வரைக்கும் உற்ற நண்பனாய் விட்டபாடின்றி வேண்டாது வருமே. கண் விழித்திருக்கும் கணப் பொழுதுதான் அவ்வோசையை அவனிடம் கேட்டேன்.

 பாகம் 115  

🌸 புகழீட்டா பூமுகம் பூத்து பொன்னுடலேற்று பகலவன் நீ வரும் வரையுள் யான் வன்மம் தீண்டியும் வஞ்சம் தீர்க்கா வஞ்சி நிலப் பொறை பூண்டு வாளாதிருப்பேன். பழவம் போர்த்தி பருமம் தூக்கி பொதிகை மலையாள் மயங்கும் கதிரை முயங்க அழைக்கும் பொருநை குறியுள் பொங்கும் பன்னீர் பருகிபடியே பணிந்து நின்று பல்லுடலூர்ந்து  பாயுமொளியாய் பதுங்கி யானுயிர்ப்பேன். ஆங்கு ஒங்காரம் ஓதும் உற்ற நாவுடன் உன்னடி வீழும் இம்மண்ணடியில் எனை எவரும் அறியா வண்ணம் நீள்வரையை ஈன்ற என் தாயெனவே நெஞ்சணைத்து நெடுதுயில் கொள்வதை நீயறியாது யாரறிவார் நிலம் மீட்க வந்த கலியுக காவலே !  


       🌸 ஊக்கமுடை உலகளந்தான் உயர்வானிற் ஆக்கம் அன்னையாய் அடிவருட அனந்தனாய் அங்குறைந்தாலும் அவனெம் ஐயனாய் அவனியில் அடியெடுத்தால் இங்கிறையோன் எழில் அணங்கனை ஏற்று வணங்குதல் மாண்புடை எம்மாலுக்கே உரித்தான  செருக்கிலா சீர்பெருங்குணமென அவனடியார் அறியாது போயினும் எம்போற் சிவனடியார் அறிவது சீர்மிகு ஞானமே !



     🌸 உழைப்போர் குறைந்தே உண்மை கொன்று புதைப்போர் நிறைந்தே வன்மையோங்க பிழைப்போர் பெரிதாய் தோன்றி பேயுறக் காணின் பிறப்பெடுத்தெம்மான் பீரிட்டெழும் நிலையை சிறப்பற காட்டும் தெய்வக்குறியாய் காணுக என்றும் வெய்யரினமே வெந்து மடியுமே. ஐயம் இல்லையே இதற்கவனருளே அல்லல் தடுக்கும் அறத்தின் எல்லையே !


     🌸 பைங்கிளிகள் இடமமர்ந்து பால்சுரக்கும் பருவமுற்று கைங்கர்யம் செய்கையியே கருணாமூர்த்தியும் கண்மூடி முகஞ்சுளிக்க களவியல் கரைபுரள களியாடும் சிலுவையர் சிற்றவைகள் இவன் சீர்மிகு இருபிடத்தில் புற்றீசல் போலவே பூத்திடவே திக்கெட்டும் தேன் சுரக்க தீந்தமிழை வான் சுமக்க செவியினிக்க பாடலூட்டும் திருச்சபைக்கு பொன் கொட்டி பாதிரியை பாவியாக்கும் பொல்லாத பங்கயத்தார் பாடுபட்டும் பார்த்திபனின் காயமது காயமுறா கமலமென காத்ததெந்தன் அரவணிந்தோன் அடியாரை அணைப்பது போல் அரவணைத்தான்.  அன்பகத்தான் துயரறுக்க தூக்கமற  துணையிருந்தான். காகுத்தன் காலூன்றும் கரை முற்றும் கார் வண்ணன் கைவிட்டான் ஆயிடினும் அம்பிகையின் ஆலயமும் அச்சமூட்டும் அணங்கெனவே கண்முறைக்கும் காளிவாழ் கற்குடிலும் பற்பலவாய் பற்கடிக்க பயமூட்டும் பதிகளை யான் பக்தியுற பார்த்திருந்தேன் பரம்பொருளே.




   🌸 பெருவணிகர் தலையேற்று பேராண்மை தனையற்று கருநாக முகம்பெற்று காரிருண்ட கல்நெஞ்சக் கடைமகனோர் வீரவேந்தின் வெற்றிப் பேருடையோன். வெஞ்சின நெஞ்சில் விரியம் நின்ற வஞ்சகனொரு வளவன் வேடமேற்ற வகை இழிஞனவன் கொற்கையர் முற்றத்து கோன் அழகு முத்து பதியருகே மூதேவி ஈன்று முலைப்பால் அருந்தியே ஆளான நாள் முதலாய் அறவோரழுத அடும் பொருளால் அங்கம் மிளிர்ந்த வண்ணம் பங்கமுற்றுப் பாழ்வழிக்கஞ்சா தீவழி முண்டு தென்னிலத்து தெருவணிகரை தேர்ந்தெடுத்து உறு பாவ அறுவடையிற் ஓயாதுழன்றே நாணயமற்று நாணயம் பெற்றோனாய்  நம்மையன் நல்லகத்தை நன்கறியா இழிமகனாய் ஏறொப்ப எழும் தலையகற்ற ஆளொப்ப ஆரவார நெய்தல் நகரினிலே அடியேனறிய வரைபிடித்து குடையாக்கி வான்பசு நிரைதன்னை வாழ்வாங்கு காத்த மாயோனை வாளிறக்கி மாய்ப்பதற்கு மன்னுயிர் மதிப்பறியா மாநிரை மேய்ப்பானே.   




    🌸 அறவேளழகன் அறுகோண உடுமீன் கொடியுடை குறு நாட்டிற்கிடதாய் எம்மதமும் சம்மதமாய் கடல் தொட்ட கரை நாட்டின் வலக்கரமாய் வடக்மைந்த சீரியதோர் சிறுநாட்டில் சிதறிய சில்வண்டோசையுடன் மாநிரை போற் மன்நிரை மடிந்து வீழ்வதனை மண்ணாளும் மன்னர்களே மனமிரங்காராயிடினும் கண்கலங்கும் கருணைக் கடலிவன் பெருமை சொல்லி பிறைசூடி தன் பெண்டுடனே பாட்டிசைக்க அதை பின்பற்றி அடியேனும் கேட்டிசைப்பேன். அதன் பாருலக ரேகைகளை பாகையிற் மூன்றுடன் ஐந்தணைத்து முத்தமிட படுக்கையை பங்கு போட்டு முப்பத்தொன்பதனை கீழ் கிடத்தியதை உடுக்கையடி ஓசையுடன் ஓங்கியே பாடுகின்றேன். அங்கு கருகிடும் சருகுககள் போல் சிதறுகின்ற அரபுலக அரும்புகளை துரும்புகளாய் ஒதுக்கிவிட தூய நெஞ்சத் திருமகன் துணியாது தேய்பிறைபோல் தேய்வானே. பிறை நோக்கி அறம் உடைப்போர் பெரிதாக வாழுகின்ற தணலெனவே மணல் கொதிக்கும் தலைப்பாகை கட்டியதோர் தங்கமூறும் சிங்க நாட்டில் தலை கொய்து தரம் தாழும் மனம் பட்ட மாந்தர்கள் பிற இனத்தை வேர் அறுக்கும் பெரும் பிணி தொற்றி பெருந்துயரப்படுவாரே .





பாகம் 116

🌸 மன்னவர்க்குரிய மலர் முகக்கூறு இம்மாமன்னனுக்குற்ற மலர்ச்சியை கண்டேன். அச்சின்னமெலாம் இவ்வண்ணலின் மேனியில் சீருற ஒருங்கே கண்டேன். செம்மொழித்தாயின் சேவடி தழுவிய மலைமொழி மணக்கும் மண்ணுறை மாந்தர்  நிறமது கண்டேனது மடந்தையரரிவையர் மயங்கும் மரைப்பூவினும் மென்னிறமவன் மேனியிலுறைய மேலுலகு தம்மெய்மறக்கும் முக்கடல் பாலலை முக்கண்ணன் காதலி பாதம் வருடி பெருங்கடலுடுத்த பேரண்ட நாயகி நின்ற ஒப்பிலா கண்டத்து கோலக்குமரி முதல் கோடுயர்த்திய கோனுறங்க வானிறங்கி வரம் பொழியும் வட்டாற்றிற்கிடையில் வருகை தரும் அவன் வாசம் முகர்ந்தேன்.

    🌸 நாசிக் காற்றை நன்றாய் இழுத்து ஓசை எழுப்பும் ஒருவித பழக்கம் உதித்த அவனின் மழலையில் துவங்கி அவன் உறங்கி உறையும் தருண வரைக்கும் உற்ற நண்பனாய் விட்டபாடின்றி வேண்டாது வருமே. கண் விழித்திருக்கும் கணப் பொழுதுதான் அவ்வோசையை அவனிடம் கேட்டேன்.



   

     🌸 சீர் புயச்செவ்வேளங்க சிறுநீர் சேரும் குவளையொத்த கொள்ளிடம் தன்னில் குப்பி ஒன்றரை நின்றிடும். ஆழாக்கில் யானதை சொல்லிட மென்னீரளவீடு ஆறென வந்திடுமது கோடியிலொன்றாய் கொண்டிடுமறிவாய். அவனாய்ந்தணைந்த அல்லியமிதழ்கள் புணர்ந்துணர்ந்த பூங்குவளை மொட்டில் சொட்டும் சூலுறை விந்துயிர் பால்மணம் வீசும் பங்கயம் தானென கோளரி மீதமர் கோமகள் குறியுள் குறியுடை கூவிளஞ்சூடியே கூறிட அதை வானவரறிய அடங்கியே வாக்குரைத்தேன் வணங்கியே.

         🌸  திரைக்கடல் கூடிடும் தென்னகம் பொதிந்த பொன்னகத்தானை பூஞ்சை தீண்டி பொன்முகம் பூண்ட பூவிழியிடது பழுதடைந்து எம்மான்விழியணையும் தருணம் இளமைத்துயர இதயமே இடியால் தாக்க புதுமை ஔடதம் பொழிந்த பண்பால் பொலிந்த நலம் பெற்று போர் கண்ட வீரனாய் மீண்டெழும் வெற்றியின் மாட்சிக்குரியவன் மாதொரு பாகன் மாண்பினை யான் மறவாது சாற்றுவேன்.  ஏழ்பிறப்பும் இதயமூன்றி எம்மானிடரகற்றி உறும் எம் ஊழகற்றி பிறவா வீடளித்து பேறருளும் பரம்பொருளே.  




     🌸 பதின்மம் கடந்தும் பவளமொப்ப விரல் நகம் தனை வெறுமனே கடிக்கும் வீணர் வழக்கம் வீழ்ந்து வந்ததும் பருவப் பாழ் செயலகற்றி பக்குவப்பட்டு பாரறியும் பண்புடன் எழுவானென்பதும் எமக்கு வானோரளித்த வாக்கேயன்றி வையமுரைத்த வாக்கே அல்ல  .

       🌸 கண்டம் கறுக்க கட்செவி விடமுறையாதுண்டமுதம் காத்து கமலக்கருமாலகம் நிறைந்த கழற்செல்வன் கரம் பற்ற காத்திருந்த கன்னியொருத்தி தன் கனிந்த மணக்கோலம் நின்றே போக நித்தம் தவம் செய்யும் நீணிலம் தன்னில் கணியன் பெயருடை கமலவாவி ததும்பிய வாடை தென்றலை வாரி சுழற்றும் எம்மான் இல்லத்து கீழ்திசையில் வங்கத்தில் வாழ்ந்து வான்வரதை வணங்கி ஆங்கே மேன்மகன் தன் சிங்கமொத்த சீடனை கண்டம் கடந்து கடமைக்கனுப்பி பொங்கும் பக்தியை முழங்கவிட்டோனுடன் பூண்ட இல்லாள் வாழ்ந்தும் வாழாது வாடா துறவை சூடிய பாரதி பிறிதொரு பெயரில் பூமாதர் மடமொன்று புன்னகைக்கும் இடமொன்று கண்டேனப்பெருவழி முன்னம் கால்வாயாகி சிற்றோடையொன்று செயற்கையாயோடி செழுநிலமாக்கிய சேதியை சொல்வேன்..

       🌸 நன்மாந்தர் நலங்கெட்டு நலியும் தருணம் தன் புன்கணீர் பூக்கா வன்பார் வகை மனம் வாழாது வீழும். எம்மானென்றும் ஈர மனமுடை மென்மான் போலவே பொன்மனப் பண்புடன் வன்பாலையும் துளிர்விடும் வரமளிப்பானென வானோர் சொன்னதாய் சொன்ன வாக்கையே யான் உருவாக்கியே யாக்கையும் துறந்து ஈசனையடைந்து என்னுயிரையளந்து என்னையுமறிந்தேன்.



பாகம் 117

🌸 நேர்த்தியுடை உயர்வொடு நேரெதிராம் கூன்முதுகு குறுமையில்லை. அவன் மாட்சி சொல்லும் மாண்புடை மடலுக்கு ஏதெல்லை. வான்புகழ்ச்சி சொல்லின் வார்தைகள் மாளாது வாய் வலிக்கும். வையமே வரம் பெற்ற வைரநெஞ்செழுப்பி தலை வீழா திமிர் நடையுடை நேர்வரையாமவன் நீதிக்குத்தான் வளைவான் என்றென்றும்.

      🌸 நெடுக்கமில்லை. நடுக்கமில்லை நறுவிரல்கள் குறுக்கமில்லை. குறைவின்றி நிறைவு பெற்ற கொவ்வைக்கனியெனவே குழையா மெது விரல்கள் மலர்ந்த குவழையிதழ்கள் கொண்டு வேய்ந்த வேந்தன் கைத்தலம் கொட்டும் ஓவியமொத்த உயிர்மெய்யெழுத்தினை கண்ட கண் பேறடையுமதை கண்கவர் முத்தென கன்னியர் கனியிதழ் முத்தமழை பொழிய இதுவே மூவுலகை மூர்ச்சையாக்குமதுவே முத்தமிழ் சாறுறையுமிதுவே சித்தர்களின் வாக்குத்தத்தமுயிரே சிவனது நாக்குரைக்கும் அமுதே .  

     🌸 கற்குன்றில் கணக்கூன்றி கைநிறையா பொருளீட்டி பொற்குன்றமேறியதாய் பூவிழிகள் கனா கண்டு பொல்லார் குழுமத்துள் புகுந்துள்ளும் புண்பட்டு வெல்லாது வாழ்வமைக்கும் வல்லானொரு வறிஞனாய் உழலும் தருணம் வில்லை வீழ்ந்தாங்கே வெட்டிய விபத்துக்கு விருந்தான விரலது பெருமிடதில் பெயர்ந்த நகக்கண் நில்லாது குருதி கொட்டி நெஞ்சுறை வருத்தம் கக்கி நல்லோர் கண் பூத்து நகுமொரு நற்காலம் நாடி நலம் புரிய மொத்தம் முழுமையும் திங்கள் பத்தாய் தேறிடும் வித்தாய் ஐயன் திண்மையை அறவே சிதைத்து தீண்டிய அரவாய் தீந்துயரளித்து வேண்டிய எண்ணம் வெறுமனே தளர்ந்து தாண்டிய கடலோ தரணியில் பெரிது. தரம் கெட்ட வாழ்வால் தவம் பெற்ற நிலைபோல் ஞானியர் நாடும் நாடா நிலையை நாயகன் தொட்டான் நானதை அறிவேன். ஏனிதை யானும் இன்னமும் சொல்ல. எல்லோர் நெஞ்சையும் இடருற கிள்ள.    வானிதையறியும் எம்மானுற்ற வலியையும் இயலும் எம்மால் செப்ப. நீதீயும் நெறியும் தவறாதுறைந்து நிறைவு தருவான் நீதி தவறான்.  

       🌸 நீந்தியோடி நீராடி நின்றொளித்து விளையாடி நெஞ்சினிக்கும் நண்பருடன் செஞ்சேல் குஞ்செனவே சென்ற இடம் இல்லம் மேல் வள்ளியொப்ப நாகமொன்று வளைந்தோடி நெளிந்தாடி நுரைதள்ளும் வானமுதுள் நுழைந்து செல்லும் போதினிலே நிலைதவறி வீழ்ந்தபோது விளிம்புப் பாறை வெட்டியதால்  வீரவேளின் வலத்தொடைதான் வந்து செப்பு சேரும் சிறு பள்ளத்தில் சுட்டுவிரலகலத்தில் வாங்கியவன் வலிதாங்க வந்துதிரம் கொட்டியதும் எட்டகவை எட்டியதும் ஏற்பட்ட காயமது பொற்தகட்டில் பதித்ததொரு புண்பட்ட பதக்கமென பொட்டு கட்டி விட்டது போல் இன்றளவும் ஒளிர்ந்திடுமே இருபால் இறையன்பே.

      🌸 எம்மையின் இடப்பாத எழில்கமலப் பூவிரியும் கடைக்கட்டை இதழ் விரலில் கண்ட இடம் கொண்டதோர் காயமது காளையாய் களித்த காலம் கல்வெட்டி கொடையான மாலன் கொண்ட மாயமதை மனக்கண் இமை திறந்து மற்றொரு பொறி திறந்து கனல் கண்ணால் யான் கண்டேன். கங்கையெனும் புனல் சூடி கருஞ்சடையில் திங்களெனும் பிறைசூடி சங்கமதில் சரடெனவே சாகா அரவமதை பொங்கிவரும் மாலையாக்கி பூம்பாதம் நடம்புரிய  எங்களுயிர் தில்லையிலே எழுந்தாளும் திருவிளக்கே.  

          🌸 பதருறையா பங்கயமொத்த புதர்மறைக்கா பூமுகமுழுமையும் பொலிவாய் மழித்து சிவத்தின் சின்னமாய் செவ்வென அமைத்து செம்பணியொன்றை சிறப்புறயாத்து சிறுத்தைகள் உலவும் தலைப்புறம் பெயர்ந்து தென்னக தீபமாய் மருதம் விட்டு மாநகர நெய்தல் புகுந்து நெஞ்சமேங்க  நேரிழை வீசிய செய்வினை வலையில் சிக்கிய மானாய் மெய்யற துடித்து மீண்டுமுயிர்த்து எட்டு திக்கிலும் எதிரியை விதைத்து ஏழ்மை சிதைக்க இன்னலே புதைத்து ஏழிசை குழலொலி இருகரமிசைத்து இன்னிசை எழுப்ப அவன் ஈரிதழ் இருந்தும் இறவா வரம் பெற திறவா கதவை தேடித் திரிந்து ஈற்றில் அவனோ எல்லாம் துறந்து ஈசனடியார் சடை முடி தரித்து இளநரையொளிரும் கிழமென திரிந்து கிடக்கும் தாடி பழமென முதிர்ந்து வலம் வரும் எம்மை வான்வரை செல்லும் இமயம் துவங்கி இறை மலையெங்கும் புதையல் தேடி புக்கும் வெறியன் பொன்னவா ஒத்த பக்தனெனவே பதியும் மன்னவன் பதமலர் தொழுதே பங்கயம் நிறைப்பேன். பாழுமுலகில் பற்றினையறுப்பேன். கோளில் ஒளியில் நீளும் அறனே. கொண்ட மேனியில் கொங்கையெழிலுடை எம்மம்மை உறைந்தொரு முலையுடை சிவனே. 

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.