பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 118

🌸 பிறப்பெடுத்த பின்னம் பிறைமுடித்தோன் சிறப்பறியாது சிற்றின்பச் சிறகடித்து சிறப்பிலியாய் போவதற்கு செய்த வினை காரணமே. உறுப்பிலியாய் உதித்தாலும் உமையொரு பாகனில் உறைய நல்வழியுமுண்டு. உய்யவும் வழியிலியாய் உளம் கெட்டு உதவா பொறுப்பிலியாய் போகாமல் பொன்னகத்து வெறுப்பிலியாய் வேண்டுதல் வேண்டாமையிலான் வெண்டலையானை மறந்து பொல்லார் முன் வீழாமல்

 பிறப்பிலியாய் பித்தனடி சேர்வதுவும் அவ்விறப்பிலியை அண்டி யான் இப்பிறப்பறுப்பேன். ஈசனடி மறுப்பானேன் என்னுயிரே செவிமடுப்பாய்.



       🌸 பொதிகைமலையொரு பூமணவாட்டி பேரெலெழில் கோடுயர் கொங்கைகள் தூக்கி கொட்டும் கொடையென மழையமுதூட்டி கோடியில் மன்னுயிர் நலந்தனை கூட்டும் கோலத்தமிழர் அன்னை மூதாட்டி . அவள் கொடியிடையுள்ளிலருளிற் குறையா சிவனார் உருவில் 

ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி. நீயேயறிவாய் எல்லாமருள்வாய் எமக்கே இறைவா .




   🌸  கொல்லும் வல்லோர் கொடுங்கோல் கொடியகன்று நல்லோரகம் குளிர நானிலத்திற் குலம் ஒன்றெனவே கொள்கை முழங்கும் கொடி தானெங்கும் இயங்கும் ஏற்றம் கண்டேன். இவ்வையத்தார் கண் கவர் கதிர்காமத்து மலர் முகத்தான் கரம் தழுவ மன்னாதி மன்னர்களின் கொடியனைத்தும் மண்ணில் மரணமுறும். பன்னாட்டு கொடியனைத்தும் பலிபீடம் தனிலேறும். ஐயன் புவிமீது பவழப்பூக்காம்புடை பட்டொளி வண்ணக் கொடியொன்றே வானேறும்.  




        🌸 கயமையொடு காவல் பூனை தலமை கொள்ள தருமம் தனை கொல்லும் கருமம் பெறுமே. அது கருங்கல் உள்ளமைந்து கல்வியிற் கற்றாழை கற்றோங்கி கரடுமுரடன் பணியேற்று  பொன்னாளைத் தன் பூமனத்துள் பெற்றான் பொற்றாள் பொலிவறியா பொதிகதிர் கொல்லும் குணமுற்று கடுங்கரமெடுத்திடுமே. அது காட்டாறாய் தறிகெட்டு தான்தோன்றித்தனமாகி மேன்மக்கள் நெறிகெட்டே மீண்டுமது நெய்தல்புரி தன்னில் நின்று நிலைத்திடுமே. அதன் மனைக்கொடி உறவெல்லாம் மாநகரம் பதிந்தொரு மாநாகம் மண்டையிலே மனங்கெட்டு படர்வதுடன் கனகத்துள் கண் பதித்து கைகள் நிறைத்திடுமே. கறவைப் பாலருந்தி கற்றே பன்னூலருந்தி கோளகம் குடை பிடித்த கோவிந்தன் தலை கொய்யும் குளுவக் குழுவோடு கூடும் கூட்டுப்புழுவாகி புழங்கும் பொல்லானாய் குற்றம் புரிவோர்க்கு குற்றேவல் புரிவோனாய் முற்றும் அறமுறைந்த மூலத்தை அறுத்திடுமே. மறவனுயிர் காக்கும் இறையோனுக்கெதிராக இதயம் தடுமாறி இழியோனாய் நிறமாறும் நெடுமாமரமொப்ப நெஞ்சுயர்த்தி கருமான் உருவில் கடும்போக்கு கொடியோர்க்கு கோடியராய் பணியும் படிக்கட்டெனவே படிந்து பைம்பொன் பொருள் படையல் பலகோடி பெறுமென பால் வடியும்  விடலைப்பருவத்து பாண்டியன் வாலைக்குமரியே வந்து கொள்ள அது என் வாய் வழியே நின்று சொல்ல கூத்தனே யான் கூவிச் சொன்வேன். எம் கொற்றவன்  ஆவிக்குற்றவன் நீயென கோளறு பதிகம் தந்தேன் அச்சாத்தனின் சாவுக்கு சற்றுமே தூரமில்லை.  

     🌸 அறிவார்ந்தவனியெங்கும் அமைத்த பொறிக்கண்ணகற்றியே பொழுதும் கொலை விழினும் நெறிகாக்கும் நீலகண்டன் நெற்றிக்கண்ணகலாகாது நெடுவழியன்றி கொடும்விழி கண்டு குற்றம் புரிவோனை கொத்தித் தலை கொய்யும் புற்றத்து பாம்பெனவே பொல்லாரனைவரையும் கௌவிக் காவு கொள்வான்.  வல்லானெவனையும் வாழா நரகுறைய வையும். மாளா மறுமை வெய்யரையும் விடாது வீழ்த்தும் விதியறிந்தேன் பின் பொய்யுரை யான் என் சொல்ல போதும் வரை பாடி விட்டேன்.  






பாகம் 119

🌸கண்ணனெச்சத்தை கருங்குவளைத்தேன் சொட்டும் மிச்சத்தை கருவேற்கும் எண்ணத்தில் பொல்லரவு பூவையர்கள் போட்டியிட்டு கன்னம் வைத்து கனியிதழ் சூலகத்துள் கற்பறம் தவறியே பொற்குடத்தை பொதிந்தெடுக்க பொல்லாயிரம் எழுந்தாலும் வல்வினை வளையத்தும் வாழ்வமைக்கும் வேலைக்குதவாது வீணே கலைந்துடுமே. பல் திட்டமொடு பரிதியை மடியில் கட்ட படாத பாடுபட்டு தம் பங்கய இதழ்விரித்தும் படுக்கை கொள்ளாது பாரமுகம் கொள்வான் ஏறார்ந்த எம்பெருமான். 

     🌸 கயல்விழி பற்றியே கரத்தலமாதுடன் கதிர்வேள் நின்றோங்கும் குன்றுறை நெடுவரைத் தொடையிடையுள் நீளரவக் காட்டாறுதிக்க அதை செவ்வேளணைத்த செம்மான் கொடியெனவே கொண்டாடி கொடியிடை குலமகளிர் குளிக்க காமன் கமலம் கனிந்தூறும் கள்ளெனவே வெள்ளமது விரைந்தோடி விளைநிலமே அமுதாகும் வெற்றிக்கரையோரம் பங்கயமீன்று பதுமன் புரமீன்று(அ)ங்கமெடுத்தோன் அதன் முன்னே சங்கைபிடித்தோனவன் செம்பதம் பதிக்கும் செழிநீர் தரையுள் பளிங்கு வாளொப்ப படிந்த வில்லை மேல் விரிந்த இடப்பதமடி தன்னில்  இருவிரல் நீளம் கிழித்துவிட அதன் மையத்திலுறைந்த மணிக்கோவைச்சரம் வெள்ளெரி விதையெனவே வெளிக்குவர வெறுமெட்டு தையலிட்டுமதை எளிதாய் குணப்படுத்த ஈசனருளே எம்மானை மிகைப்படுத்துமதன் மேல் கந்தராயுத முத்திரை கனல் கண்ணெனவே  வீற்றிருக்கும் வேந்தன் பாதம் விரைந்து பதப்பட பத்தே நாளெடுத்து படாதபாடுபட்டு விடா முயற்சிக்கே வெண்டலையான் வேங்கைக்கருள வெல்லும் வல்லமையொடு வேர்பதிப்பான் செம்புயத்து சீர்பதத்தான் பேரவலமோர் பெருந்திங்கள் ஓராறின் முன்னம் ஜயனணைக்கும் அம்மம் மணக்கும் ஐய்பசி திங்களென அடியேனுணர்வேன் அரவமணிந்த அறனேயுரைப்பாய்.

       🌸 வாடை வரும் வடம் விட்டு வலம் வந்த வகையொன்று மேடையேறும் மிளகுதிரும் மேனாட்டில் மாயோன் பேரை மண்ணிலேற்று மனமிருண்ட மாந்தரவர் தேடிவந்து தென்றல் தீண்டும் திசையுறைந்து மாடு உண்டு மனம் மரத்து வந்தேறி பெயரேற்று வஞ்சகமாய் வேர் பதித்து வாழ்வோர் வளம் சுரண்டும் வீணர் குழுக்கென்ற வெறியர் குணங்கொண்ட நரியர் இனமொன்று வருவர் இடம் பெயர்ந்து . ஈயார் கரங்கொண்டு ஈசன் நெறி ஏற்கா இடையன் நெறி ஏற்று எளிதாய் அறம் கொன்று நாட்டோர் சவமென்று நடுங்கித் தொகுக்கத் தகும் நாயோருறைவது நாரணன் பள்ளிகொண்டு( நதிமூன்றும்) வெள்ளம் சூழ்ந்து நாமம் போல் வட்டமிட அங்காதியில் அறிதுயிலும் அழகெழில் குழலுடை குந்தன் கொலுவிற்கு குணக்கில் துவங்கி கொண்டல்வண்ணனுறையா கொற்றவனாய் அரவம் படமெடுத்து  அரசாளும் ஆலயத்தின் குடக்கே முடியும் இடைக்கண்டமதிலுறைந்து இருளிலுழலும் ஈடிலா பாவியர் தம் உதிரம் கொட்டி உயிரிழக்கும் தருணம் கொள தாளாத காலமதை யான் தலைசாயும் முன்னே காண்பேன். அது பொன்மகள் வரன் புவிக்குள்ளே எழும் நாள் எழும் போது அவன் கொண்ட வளவாழ்வை அடியொற்றி சிதைப்பதற்கும்  அகமகிழ்ந்து களிப்பதற்கும் யுகம் தோறும் பெறும் ஊழ்வினையால் வருமவன் தடம் கண்டு தாமரையாள் தருவெனவே மலர்ந்தாலும் கருவறுத்து கைப்பற்றி காதோரம் பொய்யூட்டி கலைத்தோட்டும் கொடுந்திட்டம் கயவரவர் வகுப்பாரே. ஆங்கே வெய்யர்கள் பலர் நின்று வெற்றியில் மிதப்பாரே. நறுசந்தனம் நடு இருக்க நாய்மக்கள் சூழ்ந்திருக்க நலமெங்கு அங்குதிக்கும். இதை விதி எழுதி சதி செய்து வினை விதைத்தோன் எவனென்று என்போன்றோர் நன்கறிவர். அவன் ஈசனையே துணைக்கழைத்து எம்மையும் அலைக்கழித்து எழுதியதை யான் அறிவேன். இதை இருவிழியை நகலாக்கி சுழுமுனையை அசலாக்கும்  சூத்திரத்தார் நன்குணர்வர். 




    🌸 சிவனார் சூடிய செம்பிறையை   செவ்வான் அனுப்பிய தாமரையை தின்ற ஓநாய் ஒன்றையுமே உய்ய விடாது உலகாள்வன் உயிர் வதை புரிவான் உரைப்பேன் கேள். தென்கயிலை  தீக்கண்ணன் திருவாய்மொழியை திரட்டியே பார்கடலான் பதிவேற்ற யான் பாடல் வடிவில் புதிரமைத்தேன். பகலவன் பட்டொளியாய் இதில் பார்வை பதித்து சுழுமுனை இதன் பொருள் பெறுமே. திண்ணப்பன் எச்சிலையே தீஞ்சுவை அமுதென ஏற்றெடுத்து வாரியணைத்து வலம் அமர்த்தி வானோர் வாழ்த்தும் வரம் அமைத்த அம்மையப்பன் அனுப்பியதோர் அம்மதி தானுள்ளுண்ட உயர்குடி நரிகள்  ஊட்டியதோர் ஊமத்தம் விருந்தின் உதவாத இரசமிறங்க தலைகிறங்கி சரிந்திடவே மயிலணிந்து மானம் காத்த துகிலுரித்து துச்சாதனரும் சிதைத்தழிக்க துணிந்தனரே. மெய்யணிந்த மேற்கவசம் மெல்லிடையாளின் பொற்கவசமதைப் புண்ணீரொழுக கிழித்தவர்கள். பற்குறி ஏறி பாழாகி பொச்சிதழ் கெட்டு புண்ணான பொற்கிளி பொந்தில் பூத்துதிர்ந்த  பொல்லாத கடைமக்கள். பிறைமகன் அனுப்பிய பெண்மரையின் பிறந்த மேனி மலர்மீது கொழுந்தாய் எரிந்த காமத்தை கொள்ள அதற்கு வலுவற்றும் கொன்று போட்ட அது எந்தன் கொன்றை வேந்தன் கிளிப்பிள்ளை. இதை வானோர் நெஞ்சம் தாங்கிடுனும் அவ்வல்லூரினத்தின் வல்லுறவை மானார் காக்கும் மலர்மன்னன் மனதால் துளியும் தாங்காது தென்னவன் தினந்தினம் அதை நினைந்து தீ பட்ட நெய்போல் உருகுவதை சிவனாரளித்த  செவ்வரத்தாலென் செவ்விழிதிறக்க காட்சி கொண்டேன். அன்றவன் முன்னே சாட்சி சொல்ல மண்ணை ஆளும் தருணத்தில் மன்னவராயினும் தவறாது மரணக்கொடையால் தலை கொய்வான். பிறப்புறுப்பின் வழி வந்த பேய்நாய்கள் அங்கவளின் சிறப்புறுப்பனைத்தையுமே சிதைத்த பின்னர் ஒரு சேர கபடமுறைந்த பூனைக்கு கைநிறைய் கருவாட்டை கௌவிக்கொள்ள தீனி போட்டு காட்சி முழுமையும் மாற்றினாலும் அப்பாதக பூனைகள் யானறிவேன். பாகை சூடிய பாவைப் பூனையும் உள்ளடங்கும். கொடுங்கோலேற்று கொலை புரியும் பயங்கர சேனை பாதகரை பார்த்தும் பாராதிருக்கும் அப்பங்கய முகத்தான் பதுங்கியிருப்பது பாய்ச்சலுக்கே.  பரமனையடைந்த அவ்வுயிரினையே பறித்து வந்து காயத்துள் மீள் சேர்க்கை புரிவதற்கு மேவிய வரமொன்றும் எமக்கு  இல்லெனினும் கண்ட காட்சியால் புதைந்தேன் யான். கண்ணீரோடு உறைந்தேன் யான். சின்னம் சிதைத்தது மட்டுமின்றி அதன் சிறுநீர் மலமுடை மலரிதழை மென்னீரூற்றி கழுவியதை மேலோர் கண்டு உருகியதை யாரும் காணாதிருந்தங்கு கூகை பெண்டிரிருவருமே அக்குறியினை துடைத்து அழித்தனரே. ஆம்பல் பூவிற்காடைகளை அரைகுறையாய் அணியவைத்து உயரேயிருந்து உதிர்ந்து போல் புதினம் வரைந்து ஏய்த்தாலும் பொய்யா மொழியினை யான் தருவேன் பூதலம் நிறைந்த பரம்பொருளே. நீ பொய்க்கு உதவாது புவியின் நல்லறம் காப்பாயோ.


பாகம் 120🌸

🌸 பொற்றாமரையொத்த பூமுக நெற்றியிற் அரவம் நிறைந்த அறநெறி வழுவா அரம்பையரொப்ப பெண்டிர் பாதம் பற்றியுரைத்தே பாடல் தருவேன். அவர் முக்தியடைய முன்னுரையருள்வேன். சித்தன் யாரென சிவனைப் பணிந்து என் சுற்றம் துறந்து சுழுமுனை திறந்தேன். பற்றும் பாதம் பரமனின் பாதம். பார்க்கடலானும் சிவனது பாதம் பற்றி பணிந்தே போரை முடித்து பாரை கடந்தானென வெற்றி முரசு கொட்டு விதியே எம் வேந்தன் வருவான் விண்மீதாணை. ஒட்டி அவனது இருப்பிடம் அறிந்தே ஓங்கிய மலைகளுக்கிடையே அமர்ந்தே ஒட்டிய வயிறுடன் வற்றிய உதிரம் வரண்ட நாவுடன் வாழாது இங்கு சோராதெந்தன் சூழுமுனை குவித்து தவமே கிடந்தேன். இகமே துயராய் எம்மையறியும் எம்மானறிவேன். வெட்டிவேராய் மண்ணில் புதைந்த வெற்றி வேளெனும் பட்டுப்புழுவை பகுத்து அறிந்தேன். தொட்டு தூக்கி தூண்டி விடுவேன். தூண்டில் தூக்கா தூங்கா மீனென மீண்டும் அவனே மீண்டு வரவே மீட்பனை தீண்டி மேதினி அறிய யாண்டும் இடும்பை இனியில மானே. என்னருள் வாக்கு இனிதாய் மலர எல்லாம் வல்ல இறையோனருள்வான். புனிதம் பூத்து மனிதம் காக்கும் பொற்புடை பெருமானவனது விதியை அவனே வகுத்து அவனே தொகுத்து அகிலம் இணைத்து அரசை அமைப்பான். இது அருள்வாக்கல்ல அறிவாய் இனமே. ஆதி சிவனே ஆமோதித்து என் அகத்துள் அமர்ந்து பொறிவாக்காக்கி பொய்யாதாக்கி அறிவார்க்கரிதாய் அறிவிலிக்கென்றும் புரியா புதிராய் புதையல் போன்றது இத்திருவாக்கு. இயக்கிய என்னை அன்னை உமையாள்  அகலாதென்னில் அறமாயிருந்து எல்லாமுரைப்பதும் சொல்லின் செல்வமாம் யானே அவளின் அருள் நாக்கு. யான் சொல்லி மாளுமோ சுந்தரன் புகழை என்றும் மணக்கும் ஈசனுறைந்த இதழாய் எனது இதயம் கொண்டேன் அதை நோக்கு.

      



      🌸பள்ளியில் படித்த காலம் பாலகன் கடந்து வாழும் பசுவினை மேய்த்தவாறும் புல்பூண்டுகளறுத்து நாளும்  புசிக்க அதற்கு கொடுத்தவாறும் மறவனின் மறவோன் நாட்கள் மறவாதோர் வசந்தமாகும். திறவோனாய் ஆன பின்னம் அத்தேவதையை காணோம் யானும். அது கருணையிலா கைமாறி கண்காணா கண்டமாறி மெய்யறுபட்டு பிறர் மென்றுதின்னும் பண்டமாகி மேனியை இழந்திடுமே. அவன் நலம்பேண பாடுபட்ட அக்குலமகள் கோமாதா கொண்ட  விதி அதுவேயாகும். உறவுபோல் உறைந்த அவ்வுற்றதோர் அம்மையினை விற்றது பெற்றோரன்றோ. அலைமகளான அவளை விலைமகளாக்கியதாலே விண்டுவே அழுதது போல் என் வேந்தனும் கலங்குவானே.

அய்யனே காட்சி கண்ட அமுத கலசம் கொண்ட தேவதை வடிவெடுத்த தெய்வமே அது என்பேனே. பிரிதொரு காமதேனு அவன் பிறவியில் தோன்றவில்லை . பிறரது காமதேனு பின்பெலாம் பால் பொழிய இளமையைக் கடந்த பின்னர் இதிலும் ஓர் நாட்டமில்லை . 

       🌸 வேற்றுவர் தோப்பில் நின்ற விண்தொடும் பனைகளேறி பதநீர் குடித்த காலம் வாழ்வெலாம் நினைக்க தோன்றும். வானவர் கொண்டதொரு வசந்தமே அங்கு தோற்கும். அனகனின் அல்லி விரல்கள் மூன்றும் அழுத்திய தடயம் கொண்ட அணில்களை அடித்துக்கொன்று அவ்வூர் சிறுவருடன் ஆக்கி தின்ற அகவையோர் அறியாப்பருவம்.  




          🌸தீரனவன் திருவீட்டிற்கெதிர் வீட்டில் தென்னோக்கி தீயோனொருவன் தேளாய் தெரிய எருமைகளிணைந்து இடிமுழக்கியோடும் இருகோட்டுறை இரும்பு வடம் பார்த்து இருநூறு முழம் தொலைவில் இருமாப்புடன் எழுந்து நிற்கும் எம்மேழைக்காவலன் இல்லமதன் இருசுவரொட்டி கல்லுள்ளங் கொண்ட கடைமகன்கள் கீழ்மேலென கிடைப்பரிருவரே. இதிலொருவன் நிதிவிதைத்து நிதியறுப்பான் நெஞ்சற்றோனின்னொருவன் நெய்த துகிலை நித்தம் மலையாக்கி நிறையுடை பொருள் குவிப்பானுடன் பொல்லாரை குடியமர்த்தி பொழுதெல்லாம் பாவம் படைப்பானவன் பெயரின் முதற் சீரே நாணித்துவங்கும் நற்பெருமாளீன்ற பீடை மைந்தனவன் பெரும் நஞ்சுடை  வஞ்சகன் நம் நாதன் தலையறுக்க நாய்களை ஏவிடினும் வேதம் பொதிந்து விழுதாய் பதித்தோனை யாரும் அசைப்பரோ ? அவன் அண்டை அடுக்கு கட்டி அரவக் குடியமர்த்தி அரசன் கொடியறுக்கும் கொடியோர் பலரிணைத்து கூடி சதியமைத்து கொல்லத் துணிந்தவனே குரலொடுங்கி குற்றுயிராவானே. மற்றவரனைவருமே மரணக்கயிற்றுள்ளே விட்டு தலைதூங்கும் விதியை யானயறிவேன். 

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.