பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.
பாகம் 133
அகிலத்தின் அன்பனென அருளாளன் பெயருற்று அறம் மாறா ஏழ்முனிக்குள் அவனொரு ஞானியுமாய் முடி துறந்த அரசனவன் முற்றுணர்ந்த முனிவனுமாய் அரம்பையுடன் அன்றிணைந்து அழகுடை பூமழலை அலரக் காரணமாய் மாகவிஞன் காவியத்தில் மறதியுறம் சாபமுற்ற நீள் கூந்தல் நேரிழைக்கு நெறிபிறழா தாதையவன் முன் வந்த முதுகுத்தண்டுவடம் சிதைந்த முடவனொருவன் முறை தவறி காமன் கண்ணாயிரம் கரமோங்கும் உலகுறைய உடன்பட்டும் உள்ளுறைய விடாது உம்பர்கோன் மறுத்ததனால் ஆரம்பையருலகமொன்றை அவனுக்காய் அமைத்ததொரு பிரமமுனியை பெயர் சொலாது நீயறிவாய் ! அம்மாமுனிவன் அருமகள் மறவன் குலம் தோன்றி மாலனுறங்கும் மண்டபம் மேற்கே மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே. முதல்மலர் வலுப்பெற்று வானவர் வரமுற்று வரைமுடியில் சுடராகி கோள்கள் அனைத்துமே கும்பிட்டு தலை வணங்கும். எம்கொற்றவன் கிழிக்கும் கோட்டினை இவன் மிறாது குறையொன்றுமில்லாது நிறை கீர்த்தி நில்லாது குவிந்திடவே நித்தம் நலம் செயவே அஞ்சா நெஞ்சுடை எம்மண்ணல் நெஞ்சுறைந்திடுவான். வானரசே வந்தமைக்கும் வல்லரசு விரிந்தபடி பரதத்தின் பக்கமெல்லாம் பன்னாடு இணைந்திடுமே. பைந்தமிழர் பண்பாடு பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே. அன்று மும்மை வடிவுடை மூலவர் தலைமேல் முள்முடி தாங்கி எம்மை மீட்க்க ஈனச்சிலுவையை இனிதாய் அவன் சுமக்க இறையென்றறியாது இருள்மாந்தர் கொக்கரிக்க மண்ணை விடுத்து மாலன் உலகுறைய உம்மையிற் உயிர்த்த உத்தம மைந்தன் பின்னம் உதித்தது இம்மையிற் இவனெழுமிடமது ஈரேழு உலகே வணங்கும் பெண் மயிலன்னையின் பேரருள் வேண்டி எண்டிசை ஏங்கும் எம்மானிறைவியாய் இலங்கும் இயற்கன்னிக்குமரியின் காலடி மலரே.
அணுவுக்குள் அணுவாகி அகிலத்தை அச்சுறுத்தும் ஆட்கொல்லி அரவம் கொன்று அங்கத்தின் ஆயுள் காக்க அனைவரும் உடன்பட்டும், அயராது ஆயுதமேந்தி ஆர்ப்பரிக்கும் வீரர்களை உதிரத்துள் உறையவிட்டு உயிர் காக்கும் பொருட்டுக்கு ஒருநாளும் உடன்படான். வேதைகளும் வாதைகளும் எவ்வீரனையும் வெற்றி கொள்ளும். வேந்தனவன் வேரறுக்க இங்கு யாவர்க்கும் வரமுல்லை. வீழ்த்தி இம்மண்ணில் சாய்க்க மும்மண்ணில் கூட எவருமில்லை.
பட்டம் வாங்காமல் பட்டயம் வாங்கிடத்தான் பத்தில் அவன் பெற்ற பாராட்டு பத்திரமாய் உற்ற மதிப்பெண்ணாலுற்ற விழுக்காடோ ஏழை இரட்டையராய் இணைத்து பொட்டு வைத்து இரண்டை வலம் பெற்று மொத்தம் மூன்றடுத்து முத்தும் எட்டுடனே ஒட்டும் ஆறிணைந்து உறவு நடத்தியதால் எளிதில் அவன் நுழைந்து எட்டிய கூடத்தில் எட்டுடை சுன்னத்தில் கற்றிட கதவுகளை கலைமகள் திறந்தபடி பெம்மான் அகனமர்ந்து பெருங்கனவுள் உறைந்தபடி வேந்தர்கள் எண்ணிக்கை வெளிப்படும் வருடம் வரை மூலத்தமிழ் விடுத்து முறையற்ற மொழியான பரங்கியர் வழியெடுத்து படாத பாடுபட்டு மொத்த ஆண்டுகளை முடித்து வெளிவந்தும் பெற்ற காகிதத்தின் பீடை பட்டியலில் பிறழுற்று போனதுதான் அனைத்து சித்தர்களில் அகத்தியர் நீங்கலாக கிட்டும் எண்ணம் வரும் கீழ் வீழ்ந்த இதழ்கள் கூட கிட்டாது உருகினாலும் ஐயன் தலைவிதியை அமரர் எழுதாது அவனே எழுதியதே.
சிலுவையுள் முளைவிட்டு சிவவழிதனை மனம் தொட்டு கொடுமனம் மாறாமல் குழுவுக்குள் புழுவாகி கொத்தும் பாம்பெனவே முற்றும் புதைந்திருந்து முகுந்தன் கொடி அறுக்க அரக்கருடனிருந்து அகங்கள் பல கவர்த்து சித்தன் தோலுடுத்தி சிறப்பாய் தெரிவானே. அவன் தென்திரை தொட்டபடி தீயோர் உற்றபடி பல்கலை பெற்றிருப்பான். பாடலை அள்ளித்தரும் அருள் பாக்களை போலியென்று என் சேய்களை திசை திருப்பி உறுபேய்களை உடனமர்த்தி மன நோய்க்கு மருந்தெடுக்கா நாய்களை துணையிருத்தி என் நாதனை நாறடித்து அவன் நாமத்தின் புகழ் கெடுப்பான். கற்கிக்குற்றவரை கையில் எடுத்தபடி மெய்யுள் விடமுறைந்து மீண்டும் மாற்றானாய் மன்னுயிர் மலரும் வரை மன்னவன் எழும் தோறும் மறுபடி பிறப்பமைப்பான். அவன் கண்ணன் இசைவோடு கயவன் பாத்திரத்தை முன்பும் எடுத்தது போல் இங்கும் பிறப்பெடுத்து இழிய நிதி குவித்து ஐயன் கையாலே அழிய கண்டேனே.
Comments
Post a Comment