பாகம் 1, 2 & 3
பாகம் 1💗
அலைகடல் பாலாய் ஆடிட்டக் கண்டோமதன் நடுவினில் ஆதி அரவம்தனை அருமெத்தையாக்கி அறிதுயில்கொள் எழிலனந்தன் திருக்கமல பாதம் வருடி திருமகள் பணியக்கண்டோம். கனிரச காப்பியம் போற்றும் கலைப்புகழுலகில் தோன்றி கலி அகற்ற வேண்டி நிதமவனை நெஞ்சிறக்கி நோற்றோர் கண்டோம். அஞ்ஞானிகளறியா வண்ணம் மெஞ்ஞானியர் பணிவிற்கிணங்கி இயலழகு சூழ் கண்டம் தன்னில் இவனெடுத்த பிறப்பிடம் இதுவாய் கண்டோம்.
மலை நாட்டோரம் நல்லரவாய் ஓடும் கால்வாய் கரையில் உயிர் வரம் பெற்றிருப்பான். பாம்பை பஞ்சணை ஆக்கி உறங்கும் அனந்தன் புரிக்கருகே இவன் பிறப்பான். இருவருறைவிட தூரமது அரை நாள் நடை பயணம்.
கன்னி ஒருத்தி கலங்கரை அருகில் மணநாளன்று தன் வரன் துறந்து காட்சி தருவாளே. இவள் மூக்குத்தி மின்னும் முத்தமிழ் அன்னை தெற்கில் வசிப்பாளே. தீரனிவன் திருமெய் காப்பாளே.
காளியுமவளே திரிசூலிமவளே கடுஞ்சினக்காரியவள். காலனைக்கூட காலால் மிதித்தவள் இவனை மதித்தாளே. இவன் துயர் கண்டு கொதித்தாளே.
தன்னடி பணிந்த தானீனா தனயனை மடியா வண்ணம் அணைத்து கொண்டாளே. இவன் பகை எரியா வண்ணம் அணைத்தும்விட்டாளே.
நீச நெசவர்களொன்றுகூடி நீதிமானிவனுயிர் பறிக்க எண்ணி பாசக்கயிறுடன் பவனி வருவாரே. இம்மாசுறு இழிமாந்தர் கைநிறை நிதியை நீவியிறைத்திடுவார்.
வடக்கே ஒரு வட்டி கும்பல் கொடியோர்க்கு குருதிப்பொன்னை மாரியென வாரிபொழிந்திடுமே.
இமயம் போன்ற இவனை நெருங்க எவருக்குமியலாதே.
ஆளும் அரசின் ஆளா மங்கை அந்தண செல்வியுடன் பிறவா தங்கை ஊழ்வினைப் பயனால் இவன் தலை கொய்ய உடன்பட்டு அழிவாளே. வாரிசிலாள் இணையான் நோய் பெற்று அழிவானே.
குழல் கொய்யும் குல மாந்தர் குணம் கெட்ட மலைநாட்டோர் கூடிவந்திவன் தலை
கொய்ய புறப்படுவார். இதன் பயனாய் மலைநாட்டின் பேரணை உடைந்து மண்ணுறங்க செல்வாரே.
தவத்தான் இவனது தங்கை ஒருத்தி தரங்கெட்டு திரிவாளே ; எதிரிக்கு உதவும் பொருள்பெண்ணாகி இவன் பொன்னடி அறியாளே.
ஈரைந்து சிரசோனின் ஈழத்து வழித்தோன்றல் மலைநாடு வந்தேறியதோர் மனிதமிலா தீயரினம் இம்மாயோன் சிரமறுக்கத்துணிந்தே, சிகையறுக்குமினமோடிணைந்தேவந்தாலும் தீங்கேதும் செயயியலாது தொடர்ந்திடுவர். பாதையெங்கும் படர்ந்திடுவர் . உயிர்வதைக்கும் இவரனைத்தும் உருக்குலைந்தே அழுகிடுவார்.
கோநிரை காத்திடவே குடைபிடிக்க மலையுயர்த்திய கோமானை கொடும் படைதான் வென்றுவிடுமோ ?
பரந்தாமன் துயில் கலைத்தானென்பதனை பாருக்கு சொல்ல வந்தேன். நனிதூய்மை நல்லோர்கள் பாரெல்லாம் அழுததனால் பாதகர்க்கு தீர்வு கட்ட பாழுலகில் பிறப்பெடுத்த இரகசியத்தை பேதைகளறியாரே. எம்போன்ற பேரருளாளனரறிவானே.
பாகம் 2 💗
மூவிரண்டு வருடமாய் தோற்றம் தரும். இரண்டாம் இலக்கம் மதிப்பற்ற எண்ணை பெறும். அவ்வருடம் இவனுக்கு சக்தி வரும். அறிந்து கொள்வாய் அவ்வாண்டை அறிவிலியே.
இவனெழா வண்ணம் தடுத்திடவே ; உறைவிடம் ஒட்டி ஓராயிரம் பகைவர் யாகங்கள் அமைத்தனரே. இவன் காலடி வீழும் பாதைகள் தோறும் பில்லி சூனியம் புதைத்தனரே.
அக்கடின காலமவனையும் கடந்து கசந்தே போனதுவே.
இனி காணும் காலம் நீணிலம் காணும் கொடிய போர்க்காலம். அதன்பின் நமக்கோ என்றென்றும் பொற்காலம்.
இவன் அங்க அடையாளம் காண அரசனும் சூழ்ச்சி செய்து கண்டிட்டான். இதில் வென்றிட்டார் கயவர் கூட்டம். ஆவணம் சேகரித்து அறிவியல் ஏவல்செய்யும்.
புருவம் சேரிவன் திருநெற்றியில் தீபமொளிரும். இடக்கமலக் கைக்குள் சங்கின் மையத்துள் சக்கரம் சுழல்வதே கருடாள்வாரருள் தோன்ற,
வலதுக்குள் திருமகள் தாமரையும் திரிசூலியினாயுதமும் மோசேயின் தாரகையும் கையுள் மின்னுமாம்.
நபிதேவன் முத்திரையும் பொன்னெழுத்தாய் ஒளிரக் கண்டோம்.
பைங்கிளியாம் பாஞ்சாலிதனை பாழ்கலை சூதில் பறித்த வாள்கலையறியா வஞ்சக சின்னமாம் சகுனி மறுமையில் கொங்குநிலம் புகுந்து கூர்தந்தத்தினமழிய ஆதி கூத்தனுக்கோர் அரும்பீடமமைத்தே அறம்கொல்வானவன் ஆலகாலவிடத்தினும் அருங்கொடியோனென்றறிந்தோம். அவனங்கு மையல்கொண்டு மஞ்சமிட்டே மயில்பீலிக் கண்ணணைத்து நெஞ்சம் மகிழ்வான். அவனும் எம்மவதார அய்யனை அழித்திட கொடியோரைக் கூராயுதமாக்கி ஏவித்தொடுத்தும் எதுவும் தீண்டா வைரச் சிலையாய் வரம்பெற்ற அய்யனாலவன் தோற்றிழிமகனாய் இசையழிந்து வசைகுவிப்பானென்பதை வாய்மொழிவேன் பரம்பொருளே.
இவன் விண்ணக வேந்தரென்று மண்ணுலக கொடியோரெல்லாம் மனதிற்குள் அதிர்ந்தே போனார்.
பாகம் 3 💗
விளைச்சலை உண்ணும் வேலி. விலை போகும் மன்னன் நீதி. தளைத்தோங்கா தருமம் தன் தலை இழக்கும் காலம் முளைத்திடும் வெள்ளியாய் முத்தமிழ் காக்க மீண்டுமிவனே வருவான்.
அநீதியை கொய்வானென இவன் மேல் ஆணையிட்டேன். இட்டார் ஆணை எல்லாம் எளிதாய் மாறலாகும். இடர்தரும் கெட்டார் இவனைச்சூழ்வர். தீதாய் இவனைதொட்டால் தொடுங்கரத்தை கொடுந்தழல் தின்னும். இவனை தொழுதால் நலம் பெருகும்.
விண்கதிர் வேள்வி செய்து மண்பயிர் கருகும் வேளை மாண்புடன் இவனே வருவான். மண்பயிர் புன்னகைக்க மண்மகளும் வளங்கொழிப்பாள்.
இவன் வலக்கரம் தன்னில் வான்தமிழ் நிலத்தின் வரைபடம் ஒன்றிருக்குமதனருகே அழகீழமும் தெளிவாகும்.
தமிழினம் தளைத்தோங்க முளைத்தவனை பூதேவி தன் பொன்மடி தவழும் மாண்புடை செல்வத்தை கண்மணியாய் காக்கின்றாள்.
முத்தூர் நெல்நகர் குமரியை மொத்தமாய் எடுத்ததோர் ஆழிக்கரையோன் கல்விசாலைகொள்
வடக்கன் நிதிபெறுவான். நெஞ்சம் வெடித்து நிற்கதியிழந்து நெடுவழிதனில் உயிர்விடுவான். அழியா தலைவன் இவனே என்று அறியா பாவியாவான்.

Comments
Post a Comment