பாகம் 49, 50 & 51
பாகம்49💗
நெருங்கிய நாட்டோரம் நிலைகுலைந்தழுவோர் கண்டேன். அங்கே கருங்கொடி கண்டத்தில் கண்ணீர் ஆறாகி பெருந்துயர் மாறாது கண் இமைக்கும் நேரத்தில் கருணையை ஓரங்கட்டி கவின் நிலம் குலுக்கி உண்ணுமாம் கோடிகளை அள்ளி. இவர் மனுநீதி கொன்று மன்வேட்டையாடிதால் நிலத்தாயே எழுந்து நெஞ்சம் சீறிக்கொதித்து தலைகள் பல குறைத்து தலைநிமிர்ந்து நிற்பாளாம்.
கொடியோர் தலை உருள கொடுங்கோன் தலை தெறிக்க பொதுப் பொன் கையாடி பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்காதரவாய் பாவம் குவித்தோரும் பாழாகி அழும் காலம் அகலாது நழுவாது வருவதை யான் கண்டேன். ஐயன் வரவறிந்து அறங்கொன்றோர் அனைவருமே அச்சம் மேலிட உதித்த நிலமறந்து ஊர்குருவியாகி ஆகாய முகில் கடந்து அரக்க பருந்தமர்ந்து அயல் நாட்டிலகடைக்கலம் புகுந்தாலும் அவ்வடிமைகளை இழுத்துக் கொணரும் ஈடிலா ஐயன் பேராணை கண்டு பெருநிலமே வியக்கக்கண்டேன் பரம்பொருளே.
பகுப்பாரறிவிலாது பாழாய் போனதால் வகுப்பாய் தொகுத்து மன்னுயிரை வதம் செய்வாரொடு நஞ்சர் கூட்டம் பதவிப் பொருளடைவரென்பதனை தொகுத்துரைத்தேன்.
நீங்கா துயர்துடைத்து நீடுவாழும் நீதிபெற்று நிலமெல்லாம் நலம்காணும் நிம்மதிபெரும் பேற்றை அருளுக பரம்பொருளே. அகமுறை இருளகற்றி அகிலம் காக்க அறந்தாங்கி வரும் எம்மெழில் வோளுக்கு அருள் புரிக.
அவமான சின்னமாய் அவதாரம் தானென்று அற்பர்களாய் புரளியள்ளி பூரிக்கும் புள்ளிகளை ஒருக்காலும் மறக்க எம்மையனுடன்படானென்பதனை அறுதியிட்டு பாட்டமைத்தேன். இறுதியொடு எச்சரித்து இயம்புவது என்னவெனில் கயவர்களாய் வாழ்வு தந்து கடும்பலன் காண்பவர் பெரும் பதராய் கருதியே வேதைதரும் சிறை அனுப்பி வாதைபெற வழிவகுப்பான். தனை வாழ்த்தும் நல்லோர்க்கு வானவர் வரம் கொண்டு எம் மேன்மகனொளிகொடுப்பான்.
பாகம் 50💗
புறம் பேசாதாரில்லா புவி கொண்டாய் பூமளே. துறைதோறும் பொல்லார் விதைதூவி பொன்நெஞ்சில் வேரிறக்கி ஆளும் அரசுடன் ஆணவ கரம் பிணைத்து கொண்டாடுவோரிருக்க நீ கூனிகுறுகி கோழையானாய் மண்மகளே. இறைக்கெதிரென்றறிந்தும் அப்பனும் மகனும் இணைந்தே அறம் கொல்ல நிறைசெய்தாய் பொறைமகளே.
மறைக்கு எதிர் என்றறிந்தும் மகளும் தாயும் பிணைந்தே குறியொன்றில் இல்லுறவாட இடமளித்தியங்கலாமோ மேன்மகளே. சிறைக்கு அருகதையான சிற்றினத்தோரெல்லாம் மறை ஓத புறப்படவா மண்ணே நீ இடம் கொடுத்தாய்.
குருதிகொட்டும் கொலைகளமாய் கோவிலாளும் அந்தணரே அரம்பைப் பொருள் மகளை கருவறைக்குள் கலவிசெய்தரவணைக்க காவல் புரியலாமோ கற்புக்கடம் கொண்ட பொற்புடை பூரணியே நீ நல்லோரகம் குளிர நாடெல்லாம் தாங்குவதில் வியப்பு இல்லை. அதை விடுத்து தீயோர் அனைவரையும் தினம்தினம் இயங்க வைத்து இழிசெயல் குவிய ஏன்தான் வழிவகுத்தாய் .
பாகம் 51💗
தவழ்வோர் போலே தளிர்மனம் கொண்டோர் தரவோராகி தரணியில் வாழ்வோர் உள்வெளி மாறா உண்மை தந்தோர் ஊடகம் போலே உள்ளம் கொண்டோர் புகலிடம் புகுந்த அறத்தால் விளைந்த அன்பர்கள் எல்லாம் ஐயன் அகத்துள் வீழ்வது மிக்க எளிதென கண்டேன். இகழ்வோரில்லா இனிய மருந்தாய் புகழூரெல்லாம் பொறித்த ஐயன் முகத்தை அளவிட மறந்தேன். எங்குமலர்ந்த இதழ்கள் தோறும் என்றுமாறா புன்னகை கண்டேன்.
மெல்லூர் விழுந்து மேலூர் விரிந்து சொல்வளச் செல்வனாய் சூதற திரிந்து வெல்லரும் கலைபயின்று வல்லூறு வட்டமிடும் வல்லூராம் நெய்தல் பெரூரில் நிலம் பெயர்ந்து நேரிய சீமான்போல் நிமிர்ந்து நாடாளும் கோமானாய் உயர்ந்து கொல்லாரும் இயலா இறைமகனிவனை வெல்லாருமிலா விந்தை கண்டேன். தமிழ் கூறும் நல்லோர் எல்லோரும் நயந்து நாடறிய தீதறியா தாயோனாய் சிறந்து தரணியை தன்பின்னே சுமந்து பரணிபாடிவருவானே பரம்பொருளே. இவன் வேருக்கு வரமளித்துவேண்டுவதை கொடைசெய் பரம்பொருளே.
ஐயன் அகத்துள் ஒளிபாய்ச்சி அகிலத்தின் அழுக்ககற்றி போகா புனிதத்தை புவியெங்கும் நீ போர்த்தி வேகமாய் வீச்செடுக்கும் வெல் வினையை நீ தொடுப்பாய் வல்வினையை வேரறுக்கும்
வெண்டலை பூண்ட விரிசடையோனே விதிமாற்றும் மதியமைத்து விந்தை செய சிந்தை செய்வாய் பதிபோற்றும் பரம்பொருளே.
மறை மறுக்கும் நரையுடை பழமொருவன் ஐயன் வடகுடக்கே பாயுமிரு ஓடைக்கிடையே முத்தாய் உதித்து முரண் கொள்கை விதைத்து பித்தனாய் பெயரெடுத்து சித்தனாய் மடிவானே. காலங்கடந்தாலும் அக்கண்காணா செம்மலின் கருத்தில் சிலகாலம் கண்ணூன்றி பிறவிக்கறைபடிந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் இயங்கியே சிலகாலமிருந்தே இவ்வேள் திரிவானே.
Comments
Post a Comment