பாகம் 4, 5 & 6

 பாகம் 4. 💗


       கழுகுக்கண் கணை துளைக்க கயவர்கள் சூழ்ந்திருக்க பிணம் தின்னும் கொடுநாய்கள் இவன் காலடி மண்ணெல்லாம் மறைந்தொழுகும். இம்மூதறிஞன் மூன்றாம் கண் திறக்கும் வரை இவனைச் சுற்றியே மூன்றாம் கண் இயங்கும் காண்பாய். மூன்றாம் கண் கெட்டு முடமான கபோதிகள் மாண்ட பின்னர் புகுவது மாநரகமென்பதை மட்டிகள் அறியாரே எம்மனமுறைந்த பரம்பொருளே.


        வட்டிப் பாவியர் மலை நாட்டு சூனியர் கட்டித்தழுவியுடன் இவனடையாளம் கண்டு அதிர்ந்துபோவாரே. அழுக்காவி ஏவி இவ்வாத்மாவை அழிக்க கொடுஞ்செயல் புரிந்தும் ; அவ் ஆவிகள் அழுதே சொன்னது கேளாய்..! 

     பாம்பில் பள்ளிகொள் பார்க்கடல் தேவனின் பிறப்பின் ரகசியம் தனை சொல்லியே மறைந்ததுவே. நடுங்கிய வடமண் வணிகரும் அவரை அழித்தால் நாமழிவோம் என்று ஒடுங்கியே பதுங்கலானர். பின்னிவன் உலாவிற்கு பொன்னை விரையம் செய்தார்.  

          இருகால் புரவியில் இளம் நரிகள் ஏராளம் நெறிகெட்டலைந்தே நீதிமானை வட்டமிட பரியற்ற தேர்படையை பாதகர் ஏவிடுவார். நிசியெலாம் படை சூழ இவன் மீது விழி பதிப்பர். 

       ஆநிரை மேய்ப்பன் வகையினமொன்று ஆழிவேடுவருடன் கரம் சேர்த்திவ்வய்யனைச்சூழ்ந்தே வல்லூறாய் வட்டமிட்டிவன் எதிரிக்கு தகவலீந்து இழிபொருள் சேர்ப்பரென்பதனை நெஞ்சாரக்கண்டேன். அக்கொடியோர் சந்ததிகளனைவருமே பாவத்தின் சின்னமாகி படும்பாட்டை பரிதாபமாய் கண்டேனே பரம்பொருளே. இவனில்லம் சூழ்ந்திருக்கும் இல்லத்தாரனைவருமே குருதி விடமோடும் கொடியோராய் 

 இவன் சங்கறுக்கும் சாவாலை ஏற்றவரின் சங்கமத்தில் இணைந்ததனால் சங்கமதில் புற்றுவைத்தே அழிகிடுவர் என்பதனை யாமறிந்தோம் பரம்பொருளே.

       உத்தமனுறைவிடம் சுற்றி இரு காலரவுகள் உள்ளமெலாம்  உயிர் பறிக்கும் விடமூற கள்ளம் கபடமுடனிவன் மார்பணைத்து தழுவியதை இவனறியாது போனாலுமிதை யாம் அறிவோம் பரம்பொருளே.  


பாகம் 5 💗


கங்கைக்கரைக் காவல் பூனைகளாதரவளித்தும் 

மங்கைக்கெள்ளளவும் மயங்காத சிங்க மைந்தனிவன் 

சிரசரியத் திரிந்தாலுமதற்கு பாசக்கயிறுடை

நமனெங்கே உடன்படுவான் என்பதை 

யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே.

கொலை செய எண்ணிய கொடுங்கயவர் குழுமம் 

தோற்றுத் துவண்டதனை தொய்விலாதுரைக்கின்றேன்

தூயோரை காத்தருள துரிதமாகும் பரம்பொருளே.

கங்கை மூலம் இறங்கி தன்  பங்கம் தீர்த்தானை 

அங்கன்றே கொல்ல வந்தும் அப்படியே தோற்றுப்போனார்.

வடநிலத்திலிவன் பாதம் முத்தமிட்ட பாகமெங்கும் 

கொடுநோய்தான் கொல்லாமல் கொல்லுமன்றோ.

சினங்கொண்டாள் இயலன்னை என்பதறியாயோ. 

சீரிளம் கலைமணியிவனை பூதங்கள் சிரம் தாழ்த்தும் 

புண்ணியவானிவனை தேவரும் காக்க கொதித்து எழுந்தனரே. 

இன்று நிலமகள் வெடிப்பும் நெருப்பும் நீரும்

கொடும்புயலும் கோரதாண்டவமாட இக் கொடுஞ் செயல் காரணமே.

நீதிதேவதைக்கெதிராய் வாதியை வதம் செய்ய வாதிடும் வல்லூறுகள்

வல்லோனிவனைக் கொல்ல பெருநிதி பெற்றிடுவர்.

மூத்தோன் முத்திரைக்கொடியுடை மூதேவி மகவுகளும்

இக்கொடுஞ்செயல் புரிந்திவனையொழிக்க

பின்னணியிருப்பாரென்பதை பெரிதாய் 

பிறரறியாது போனாலும் யாமறிவோம் பரம்பொருளே !

இயக்கமும் அவனே, எழுத்தும் அவனே, இசையும் அவனே தான். 

எல்லாம் விண்ணில் எழுதிய நெடுங்கதை என்பதை யாரறிவர் ? 

இதில் நடிப்பவர் கோடிகள்.

ஞானிகளே இதை அறிந்தனரென்பதை அறிவோம் பரம்பொருளே !

அவனாணை வரும்வரை அணுவும் துயில்கொளும் என்பதை அறி மனமே.

பிணமாய் விழுமுன் பெருமாளெனும் மணாளன்

திருவடி அறிந்தால் விடுதலை நிச்சயமே. 

அவன் திருவீடடைந்தால் பேரருள் கிட்டிடுமே.  

      


பாகம் 6💗

  


தாமரை அன்ன முழு வீச்சும் இலைத் தாமரை அன்ன இல்லறமும்

செந்தாமரை அன்ன ஒளி முகமும் வந்தாரை வணக்கும் 

குண நலமும் கொண்டவனிவனைக் குறித்துக் கொள்.

கோடியுறும் இவன் வருகை புரிந்துகொள். 

குலம் விளங்கும் இவன் சேர்க்கை அறிந்துகொள். 

இவனீவுகள் இரண்டாயிருப்பினும் எல்லோரையும்

செல்வமாக ஏற்றெடுப்பான் அறியாயோ.

அவனழகு நாமப்பெயரைச் சொல்வேன் கேளாய் கண்மணியே.

ஆழியில் துயிலும் விழிஎழிலன் 

பாதியை கொண்ட காதலியை 

ஆதியில் நாமமாய் பெற்றிருப்பான்.  

அம்மணமடையா மாயோனை பிரிந்தாளவள் நாமம் முதல் நாமம். 

பின்னரே இவன் நாமம் சேர்ந்தொலிக்குமே கேளாய் ! 

அம்மையப்பனையறிய ஆன்மீக விழிதிறந்தாலன்றி 

அவனை அறியாய் அறிவிலியே

வேள்வி மலையில் மயிலகவ வேடுவன் வடிவில் 

குறத்தியை மணந்தாங்கே

குன்று காப்பான் வீற்றிருப்பானவன் முன்னிலிவன்

திருமகனாய் காளி அருள மணம் புரிவான்.

கங்கைக்கரைத் திருமார்பரை கரைசேர்த்த 

தோணியோட்டி நின்றருளும் குமரன்கோவில் இங்கே

இக்கோமான் துணைமணம் புரிந்தானிவனை ஆழி வேடுவர் 

அழிக்க எண்ணி ஆர்ப்பரித்தடங்கிடுவர். 

மொட்டுக்களிரண்டரும்ப முல்லை நிலம் விட்டு 

தமிழ் பரப்பின் தலைப்பதியாம் 

நெய்தல் நிலம் பெயர்ந்தான் இத்தவமகன். 

அங்கே முன்னூறு திங்களுறைந்தே 

மன்னுயிர் நலம் பேணும் இன்னுயிர் 

நன்னோக்கில் பிணி தவிர்க்கும் பணியொன்றால்

பிறர் குடிகாப்பானே எம்பெருமான்

என்பதனை எமையல்லால் யாரறிவர் பரம்பொருளே.

முத்துநகரின் தென்மேற்கே முல்லைநில நதியோரம் 

பித்தனருளுடன் பிறப்பெடுப்பான்

இவ்வருமருந்துவனென்ற தேவவாக்கினை

இட்டு உடைத்தேன் பிறரறிந்திடவே. 

பின்னரேன் நின்னிலடங்கி ஒடுங்கிய 

எம் போன்றோரிதை மறைக்கும் மனம் பெற்றார் பரம்பொருளே.

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.