பாகம் 61, 62 & 63
பாகம் 61💗
வாள் கை ஏந்தினாலும் வரகாக்கை பூண்டு அங்க நலம் பேணும் ஐங்காயம் போன்று பெருங்காயமகற்றி அருங்காயமாம் வெங்காயத்தை விண்டோடிணைத்து ஆகாயமளந்து நல்லறம் பேண நல வாழ்விற்கரணாய் தன் பொற்கையால் பூப்போல் நீணிலம் பொதிந்து நிம்மதி பெருக்க இப்பொன்னி மைந்தன் புறப்பட்டு வருவானே பூதலமே.
தோள்கொடுக்கும் நால்வருடன் தோல்விகாண நெறிவழியில் பாழுலகை மீட்டெடுத்து பாவங்களை சுட்டெரித்து மேலுலகின் ஆணைகளை மேதினியில் பிறப்பித்து வானகமே வியந்து நிற்கும்
மேன்மையுடை அரசமைக்க வந்துதிப்பான் எம்மையன் வள்ளி அரவாக வளைந்தோடும் தென்னகத்தை அள்ளி அலங்கரிக்கும் அருளன்னை தென்குமரி தேன்மடியிற் வெள்ளி முளைத்தது போல் வேண்டி வழிமொழிய வெண் பனிசடை முனிவருண்டு. பள்ளிஎழுச்சி பாடி பாசமுடை நீசனையே பந்தாடிய வல்லீசனமுதுண்ட வரசித்தர் புடை சூழும் படையமைத்து வான்கவிகள் பாட்டிசைக்க மேன்மக்கள் வாழ்த்துரைக்க மன்னுயிரே மண்டியிடும் மன்னவனைக் கண்டேனே.
கொதிக்கும் தழலுலகை கூதிர் நிலமாக்கும் கொற்றவனிவனையே அதற்குற்றவனாய் யான் கண்டேன். கற்றவரே நம்பிடுக கைவிடாதிவனை காஞ்சனமாய் காத்திடுக.
கைதவமுள்ளக் கறையுடை காமமெனும் விடமகற்ற மெய்தவம் நோற்று மேனியுடையுரித்து தெள்ளுடலகற்றும் தீரர் படை நடுங்கும் பாம்பென அயல் காயம் தனில் தாவும் பைம்பொன்னி மகவாகி பூமுனிகளேவிய புவிரசாய் மீண்டுயர்ந்து நாடு விட்டு நாடு பாய்ந்து நன்னெறி திருவாய் மொழியும் அகிலம் கண்டிராத அல்லியிதழ் பொதிந்த கைத்தலம் பெற்ற கற்பகம் கண்டேனே. புவனமுய்ய பொன்னுடலில் பூத்து செவ்வரம் பெற்ற சீர்வேளெமக்கு பெரும்பேறாய் கண்டு பிறைசுடி அருளுவதை பெருங்கண்ணால் கண்டேனே பேரொளிக்குள் மேலொளிரும் ஒப்பிலா அறனே. பாயுமொளிபொழிந்து பன்னாடுகள் தாவுமொழி வளர்பானே. இவன் தெள்ளு தமிழ்கூறு நல்லுலகமைப்பானே.
இவன் தெக்கண நன்முனையிற் திருவரங்கன் பள்ளியறை தென்னிலத்தில் முக்கண்ணன் முலையழகியமர்ந்தருளும் திருக்கண்ணன் மகிழூரில் திருமுருகன் கருங்கொடியாள் மேனிக்கருகே பூத்த பூவாய் யான் பார்த்ததை சொல் பொற்பூவே !
பாரெங்கும் தன் பங்கயப் பதமலரைப் பதிப்பவனை கண்டுலகே கீழடங்கும் நன்னாளை கண்டேனே நல்லாய் கேளாயோ.
பாகம் 62💗
முந்நீருறைந்த மூத்தகண்டமதில் மூலிகை வரை பொதிந்த பொற்கடம்பமர் செவ்வேளருள்
செம்புலமொன்றில் பொய்க்கண்ணறியா பொல்லா குலமொன்றில் ஆலம் விழுதிறக்கி அரவம் சிறிதுமின்றி அங்கம் ஒழித்தொளிரும் அன்பகத்தை ஞாலம் காணா ஞானம் துணைக்குவர காளியருளாலே கணியம் கண்டேனே. வாணி வரம்கொடுக்க வேணிவீழ்சடையோனிவன் விழி திறந்து இருள் கிழிப்பானுடன் விண்டுறை மாலன் மார்புறை மலரிருப்பாள் .
எழிலன் இடது கணுக்காலுட்புறம் ஈரெள் அகலம் கருநிற மருவொன்று கலையாய் இருந்து எதிரே அமைந்த வலக்கால் கணுவை எள்ளி நகைத்து ஏளனம் செய்யும் ஆணவம் கண்டே அடியேன் வியந்தேன் அறனே அறிவாய்.
கமலமொத்த வதனமதை கரிக்க வந்த கொடுங்கரந்தான் திரவம் எடுக்கும் திறனிலாது தீரம் தீர்ந்து போனதற்கு தெக்கண மூலை தென்முனைதேவி அரணாய் இருந்திவன் திருமுகம் காத்தாள்.
காயம் காண காயமிது. கருணை உறையும் தேகம் இது. தீயை தின்ன எவர்க்கேனும் திறனும் துணிவும் இருந்ததுண்டோ ? மாயை உண்ட மாமடையர் மனதை யானும் என் சொல்வேன்.
தேனும் கனியும் தோற்றடங்கும் தென்மொழி அரசி புகழ் ஓங்க வானும் நிலமும் ஒத்துழைத்து வணக்கம் கூறி வரவேற்கும் கோனாய் உதிக்கும் ஐயனுடன் சிவனும் உமையும் இருப்பதனை சீர்வேள் வடிவாய் யான் கண்டேன். சாவே போ என சத்தமுடன் பாரே அடங்க சூளுரைத்தேன்.
பேறு பெற்ற அனைவர்க்கும் பெரும்பிணிதான் நீங்கிடுமே. ஐயன் முகம் கண்டு அழும் நிலம் நலம்பெறுமே. அணிசேரா நடுநிலைக்குள் அடியெடுத்து வைக்கும் ஐயன் அகல்விளக்காய் ஒளிர்ந்திடுவான். அகிலெனவே மணம் பெறுவான். துளியும் நலம் பேணா துங்கனிவன் மணிமகுடம் சுட்டுகின்ற மாட்சி கண்டு மகிழ்ச்சியுற்றேன். வெண்டலையார் விழிதிறந்தால் வீண்போகாதத்தனையும். ஐயன் பண்பலையால் அகிலமினி பூத்திடுமே !
அன்பொடு அறம் பொதிந்து அனைத்துலக குடி உயர்ந்து இன்புறும் மனம் கண்டேன். என்னருள் வாக்குதான் என்றென்றும் பொய்க்காது.
பாகம் 63💗
முந்தியோர்முறை மூலவராணைக்கிணங்கி கறையிலா கன்னிக் கருவுறைந்து உந்திக் கனியாய் உதிர்ந்து உயிர்மேய்ப்பனாய் மந்தைக்கு மெய்வழியிட்டு பொல்லார் பொய்புனைய புண்பட்டு குன்றமீது குரிசில் குற்றுயிராய் மரித்தும் மரிக்காது மற்றொருநாள் உயிர்தொளிர்ந்து ஓரிறையின் மகனாய் உறைந்த மறையுடை முகனுமிவனே.
வலிமைப் படை கொண்டு வானவர் துணை நின்று புவியை அரசாண்ட பொன்மனச்செம்மலென்று நபியாய் தடம் பதித்து நன்மனம் பல வென்று விதியால் விடமுண்டு வீழ்ந்த வரலாற்றை வேதம் மறைக்காமல் வீரம் புகட்டுவதை யாரும் மறுக்கவில்லை யானும் மறக்கவில்லை.
விண்ணகம் மணக்கும் தென்னக தேவன் அறுமுகனாகி வேலொடு அன்று வினைதனை தீர்த்த நறுமுகன் மீண்டும் எம்மவனாக மண்ணில் தோன்றி விண்ணரசொன்றை மண்ணிலமைத்து வேதமறை இலக்கண முறையினை வார்த்து தெக்கணம் காக்கும் தேவதேவா முக்கண்ணா நீயிதை முன்மொழியாயோ.
அள்ளி தந்து அன்பகம் தோறும் பள்ளி கொண்டு கிடப்பானிவனே. பக்தி மழையில் நனைவானிவனே. கன்னன் பெருங்கொடைத் தருவெனவே செங்கமல கைத்தலம் கொண்டே பின்னம் வந்த தருமனினும் பேரருள் நீதி காப்பானே. தென்னகம் அருந்தும் தமிழ் தேனை பன்னகம் பருகி சுவையறிந்து பாரே போற்ற வைப்பானே.
மன்னர் மன்னன் மலர் கையுள் மயூரம் மணிமுடி தரித்ததனை இத்தரித்திரன் தவக்கண் கண்டதனை திருமால் திருமுடி என்றே யான் இப்பெருமாள் திருவடி பணிந்தேனே.
மைய கையுள் மலர்ந்திருக்கும் மயக்கும் மரைப் பூவிதழ்களெலாம் ஐயன் வைகுண்டர் சின்னமென அடியேன் கண்டேன் அரும்பொருளே.
நற்குணத்தானிவன் பொற்குணத்தான். நான்மறைக்குள்ளே பள்ளிகொண்டான் அந்நான்மறையோன் நல்லுதயம் தோன்றுமிடம் பாம்புரிக்கும் தோல் கிடக்கும் பன்னீரெனவே நீர் சுரக்கும் ஓடையொன்று புன்சிரிக்கும் கிழ்திசையில் மதம் பிடித்த தென்பொய்கை அரவணைக்கும் மண்ணொன்று மணம் கமழும் மாட்சியுடை காட்சியினை மாதவத்தால் யாமறிந்தோமிதை
மாதவனும் நன்கறிவான். ஆதவன் இம்மெய்யறிவான். ஆறுசுடி பொய்யுரையார். மாலினியே கை பொதிந்து சூலெனவே காத்ததனை வேலவனாய் வடிவெடுத்து வெற்றிகளை குவித்தவனை நல்லோரறியாமல் நாயோர் நன்கறிந்து பேயோருடன் சேர்ந்து பேரிடர் தருவாரே.
Comments
Post a Comment