பாகம் 67, 68 & 69

    பாகம் 67💗

பாரேற்க வரும் ஐயன் பதினைந்தாம் வயதில் பரந்தாமன் பூசைக்கு பன்னீர் மலர் மாலை கொணர தினம் தோறும் மனமுவந்து திருப்பணி புரிவான். 

அது போன்றொரு நாள் அரிபக்தி கொண்டு மிதிவண்டி ஏறி மின்னலாய்  பறக்க  நெடுஞ்சாலை தன்னில் வரும்பரி மோதி தரைவீழ்ந்த போது நெடுங்கம்பி குத்தி ஒரு காயம் கொண்ட தொடையுண்டுகண்டேன். அது இடமென்று அடியேன் அகம் கொண்டறிவேன்.



     நாற்பதின் நடுவே நெய்தல் பெருநில நெடுஞ்சாலை தன்னில் பரியோட்டும் போழ்ந்து சதிசெய்வர் கயவர். நிலம் வீழ்ந்து ஐயன் சிறுகாயம் கொள்வான். அது தரை வெட்டிய போது அதில் கிட்டிய காயம்  விரலகலம் கொண்ட வடுவாய் கொண்டு தாடிக்குள் புதைந்த தாடையின் நடுவே நின்று மொழியுமே மெய்யை. அக்காவியத் தலைவன் வரவே கைகூப்பி நிற்கும் எம் நிலமே. ஏவிய வினைகள் எல்லாம் எதிரிடாதழியும் திடமே. எந்த பாவியும் மீள்வதும் இலமே  பக்தி மெய்யோர் வீழ்வதும் இலமே. பாதகர் ஏவிய கணைகள் படுதோல்வியில் முடியும் தினமே

மேவிய ஐயன் வரவே நல்லாவியர் நிற்பது கண்டேன். அவர் முப்புறம் உப்புடை வங்க கற்பக அன்னை அருளடி தெற்கே  நீருறை நீணிலம் தன்னில் நின்றுலாவிடும் முன்னவரென்றே எம்மூதரறிவே அதைச் சொல்ல தித்திக்கும் திருமுகனை காண அத்திக்கிலே கைகூப்பி நிற்பேன். பொற்புடை தேவனே வருக. யாம் புண்ணியம் புரிந்தோமே வருக.

         விண்மீனை அம்படித்து விழ்த்தும் திறன் கொண்டதொரு வில்லாளிக்குற்ற தரு உம்மை நட்புக்கு உள்மெய் திறந்தானிவன் இம்மையிலே எள்ளவும் பொன்னுமில்லை இல்லறத்தானிவனிடத்தில் எள்ளளவும்  பொருளுமில்லை. மறுமைதரும்  மாவீடுடை எம்மையன் இம்மையிலே இல்லமின்றி ஏழ்மையிலலைவானே. எம் பொன்னையன் உடமையாக புவிபரப்பில் உரிமை கொள்ள ஊசி ஊன்ற நிலமுமில்லை புலமுமில்லை. மெய்யய்யன் மெய்யினிலே கந்தலன்றி கசக்கிக் கட்ட மீதமேதும் மிச்சமில்லை. கைகாசில் சொச்சமில்லை இதை காணுகின்றேன் கண்மணியே. கண்ணீர் சேதி சொல்வேன்.  

         ஆயின் வருமெம் வளநாளில் இருள் சூழிவ்வுலகில் இரவியென எழுவானே. இம்மாமன்னன் தயை இன்னலகன்ற நல்லோரெல்லோரும் மண்வீழ்ந்து மண்டியிடக்கண்டேன். விண்ணகமே  பணிந்தனுப்ப மண்ணுலகம் வினை முற்றி மாந்தரிங்கு அல்லலுற்று கனகன் கால்மரைக்காய் கண்பதித்து காத்திருந்தேனிவனை கயிலையன் கரம்பிடித்து கன்னிக்குமரி மயிலையும் காவல் வைத்தவளை அன்னையென அற்பணித்து

உயிலெழுதி உலகளித்தானிதை கண்விழித்தோரறிவாரே. பீலிக்குய்ய பெண்விழியில் வீழ்ந்த பீடைக்குறியோரிவனை பிறவியுலும் உணராரே. 

பாகம் 68💗

பைம்பொன் கறுக்காது. பாழுடல்காக்கும்  பட்டிளமை நிலைக்காது. வேழப்பால் தன் இன்சுவையிழக்காது. வைரம் போல் காத்த வளக்கட்டை தனை செங்கனல் கௌவி தின்னும் முன்னம் சித்தம் நீ தெளிந்து சிவனடி சேராது முக்திக்கு வழியேது மூடர்கூடமே.

 நேசக்கரங்களுமே நிலையில்லை இங்குனக்கு. நீசக்கரம் நிறைந்த நீளுலகில் வந்தமைக்கு வேசக்கரங்களாகி விரைந்து மாறிடுமே.

மருந்தும் மேலுறைய மருந்துக்கும் உதவாது. மாமருந்துண்டோர்க்கே மறுமையிலா செழுமையுண்டு. அவ்வருந்தேனமுதை யான் அறிந்தேனவன்



 தீர்த்தக்கரைமண்ணில் தில்லைக்கு தென்மேற்கே ஏழைந்து காதம் நிலம் கடந்து முல்லைக்கு பேர்போன முப்பாட்டன் புலம் தாண்டி முன்னறிந்த சேரனெல்லைப்புறத்தில் திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் வட்டாற்றின் தெற்கில் இப்பெருமானிறங்கும் பொற்தலம் தென்பட்டதெம் கண்ணிலொரு  மையக்கோடடுத்த மான் கோடிடையில் இவன் விரியும் வனமிருக்குமென விண்ணறிய வாக்கிசைத்தேன்.  இனியான் வீழும் விழும்பில் வருமுன்னம் வெண்டலையான் திருவடியை பற்றி பயனடைவேன். ஈன எமனுக்கு இம்மையில் வேலையில்லை என்றே வேலனை வரவழைத்தே என்னுள்ளில் விருந்து வைத்தேன்.



        தந்தசூகம் ஆடும் நீல கண்டங்கருத்தோன் அங்கென் துணையிருக்க இங்கென் புருவம் இணையும் பூங்கண் திறந்தே கண்டேனிவன் நின்றுலாவிய நெடுவரை அருகே நன்னீருறை பூவிழிகள் நிறை காதல் ததும்ப வெண்மதியொளிரும் பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் அனந்தன்புரிக்கே அரசன் புணரப் புகுந்த பதுமமுதித்த நாபன் புரமே.

         வீழ்ந்த விதை புவிதனில் வீரியமுளை தள்ள வான் வரம்பெற்று வாழ்த்த வருவானே. விளைபயிர்கள் உரமின்றி தானாக எழும் தேனே. வாட்டிய கொடுங்காலம் வளவேள் வருகையுடன் நிறைவு பெறுமே. அதன் பின்னறங்கொண்டு அகனமர்ந்து மகிழ்வுடனே வாழ்வோமே. வான்மழையும் பொய்க்காது. வன்புயலும் வீசாது. ஏன் என கேட்காது இன்னல்கள் பறந்திடுமே. கானுண்ணம் கதிரிலில்லை. கண்ணுடையோர்க்கிது புதிரில்லை. கனல்கக்கி நிலமுருக்கி நெருப்புமிழும் எரிமலைகள் நின்றுறங்க கண்டேனே. இவையனைத்தும் ஐயன் எழுந்த பின்னர் ஆரவாரமில்லாது அடங்குவதை அறனே நானறிந்தேனே. 

          

பாகம் 69 💗

பஞ்சமனொருவன் குளக்கரையில் பைம்பொழில் தாலாட்டும் தென்மேட்டில் பணிக்கன் விளாகத்து புத்தம் வீட்டில் அஞ்சா நெஞ்சர் குலந்தன்னில் அரிபரந்தாமன் அவதரிப்பான். 

      நஞ்சை சூழ்ந்த நந்தவனம் நஞ்சுறை நெஞ்சர் நிறைந்திருக்கும் நாணயம் நீதி கொன்ற வானம் என்றேயறிந்தும் எம்பெருமான் இறங்கி உதித்த இடமென்று யாரும் அறியாதிருந்தாலும் யாமே அறிவோம் பரம்பொருளே.

       சேற்றில் விரிந்த செங்கமலம் அச்சேற்றின் நாற்றம் பெற்றிடுமோ ? ஆற்றுநீர்தான் வீழ்ந்தாலும் அதன் ஆழ்நிலம் அள்ளி அருந்தத் தரும் போற்றும் ஈகை குணக்குன்றான் இப்புவியில் வரமாய் கிடைத்தானே. ஊற்றுக்கண்ணை யான் கண்டேன். அதில் உலவும் செம்மீன் இது என்றேன். உவர்நீருறைந்த ஆழிக்குள் ஓடிடும் விண்மீன் ஏதென்று யாவரும் காண்கிலர் ஆனாலும் தேடிய நாதன் தாமரையை என் திருவிழிகாண திகைத்து நின்றேன். 

      கடுமலங்கழித்து கைத்தலம் துறந்து காமனை வென்றவனிவனன்றோ. நெடுமரம் நடுவில் நேர் மகன் உருவில் ஒளி மரமாகி நாவாய் ஒதுங்க அருள்செய்வான். நெய்தல் அலையுள் மூழ்கா வண்ணம் நெஞ்சோடணைத்து கரைசேர்பான். 

        ஈசனின் படைக்கெதிர் எப்படை வரினும் முப்புரமெரித்த அப்படை கொண்டு ஆண்டிடுவானென அறிந்தேன் அமுதே அரும்பொருளே. தீது கௌவா தேவரனைய தெள்ளகம் கொண்ட நல்லோர் கொண்டு மெய்வழியமைப்பான் மேதினியில். தாயகமுடையோன் தயைகொண்டோன். தக்க நேரம் கைகொடுத்து பாரெல்லாம் இணைய பாடுபட்டு பரம் செல உலகே பதம் தொழுமே. தை மலரொன்று தானே விரிய தழலாய் துளிர்க்க தவறானெம் தவமகனே.  மெய்யாய் கண்டேன். மேதினி துயரருற வெய்யர் விதைத்த தீவினையே விளைச்சலை கொண்டு குவித்ததுவே.

         ஐயன் கால்தடம் நன்கறிந்த அரசுப் பூனைகள் துப்பளித்து தீயேருடனே சேர்ந்திருக்கும். பாயும் சட்டம் துணைபோக ஏவல் பூனைகள் இடைமறித்து ஐயன் குரலை பதிவெடுத்து பேயோருக்கு பணிந்தனுப்பும். காவிப்பொய்யர் நன்கறியும் நாளும் ஐயன் நகர்விடத்தை. கன்னிக்குமரி கைத்தலம் பொதிந்த காஞ்சனத்தை அரசவைக் கயவரும் அறிவாரே. ஆளுமரசனும் இணைவானே. 


        விடங்கொண்ட பாம்புகள் இடனறியும். வீரியம் தாக்கா வேங்கை மகன் திறனுக்கு ஈடிணை இல்லையன்றோ தேவர் தேவனே பணிவானே. காசினை பெற்று கண்ணிழிந்த வேசிகள் கூட இடை மறிப்பர். தூசாய் நினைந்து தடை தகர்த்து இத்தூயோன் துள்ளி வருவானே.

         துருக்கர் இனத்து கருநெஞ்சர் தொல்லைகள் ஐயனுக்களிப்பாரே. நபியின் நன்நெறி பயிலாமல் சிலர் நாயினும் கிழோரானாதனால் உத்தமன் உதிரம் உண்பதற்கே ஓநாய் வடிவில் அலைவாரே.

       சிலுவைகளணிந்த சிற்றினமும் சேவையர் வேடம் பூண்டுநிதம் ஐயன் உறைவிடம் அருகினிலே அருளகம் அமைத்து சதிப்பாரே.

       தீர்த்தங்கரனார் மரபினரும் திருமகன் தலைக்கு குறிவைத்து பார்ப்பனர் கூட்டத்துடனிணைந்து பாவம் குவிக்கும் இச்செயலால் பாதக பொறியுள் விழுவாரே.

      காவியன் கைவிட்ட பாவியனை காவியமெனவே ஏற்றெடுத்த கரியமர் பீதகனருளாலே இவன் காசினியாள வருவானே . 


Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.