பாகம் 70, 71 & 72

பாகம் 70💗











எழுமலை எழில் மேவும் எம்பிரான் அருள்பொழி தென்மாயோன் நறுமலை நம்பிராயர் நாடும் நல்கூத்தன் மலையுறை திருப்பரப்பினருகே மாலனாய் அறிதுயிலும் ஆதிராயனுக்கு அருவித்தறியில் ஆர்ப்பரித்து ஆடை வெள்ளியாய் அழகுற நெய்யும் நெடுவழி நெறியர் நன்னிலங்கீழ் திரிபுணரி வாலைக்குமரியை எட்டிடும் முன்னம் வையத்து வான்மகன் தென்படுவான். யானே வணங்கும் எண்திக்கு அணங்கு கோடிட்டு காத்த எம்பிரானாய் கண்டு தொழும் மாந்தர் துயரறுக்க துவழாதெழும் வான் நம்பிரான். 



        மெய்த்தலம் வலதின் கைத்தலத்துள் கேகய அலகின் மேற்பரப்பில் மறையோன் மலையின் கீழடியில் தோகை மீனாள் கண்ணெழிலாய் தொட்டு இணையாய் இருந்தாலும் கயல்வாலமைப்பு பங்கயத்தின் கனியிதழ் உருவில் காட்சிகண்டு கற்றதை கொண்டே பாட்டிசைத்தேன்.

      வெள்ளி பனியும் இங்கு வழிவதில்லை. வேந்தர் வேந்தனே இங்கு இருப்பான். அரியை அணைக்கும் ஆலயங்கள் அள்ளி அணைத்திட காண்கிலையே. பள்ளி தலங்கள் பல இருந்தும் பள்ளி கொள்ளாது படுத்திருப்பான். பாதையோரம் பசிதீர்க்க பகலவன் உருக்க யாசிப்பான். முள்ளின் மீது நடந்தாலும் முள்ளாய் உள்ளம் காணவில்லை. நம் உள்ளில் உறைய வருகின்றான். உலகேநிறைய உவகையூட்டி பெருவளங்கூட்டி பேரரசமைத்து அறனார் இயக்க அமைவானே.   

       கண்ணாளன் கனிமுகம் காணா காரிகையொப்ப கார் காத்து காடுகள் மெலிய கூந்தலில் வெள்ளி பூக்காது கூதிர் இழந்த கைம்பெண் குன்றுகள் விண்தொடுமே. வேண்டுதலேதும் பயனின்றி வெம்பும் சுடுவனமாவதனால் தென்றல் வீசும் திங்கள் கூட தீயில் குளித்து திணறிடுமே.

      போரெழும் சூழலை புறந்தள்ளி பூக்கும் அமைதியை கொண்டு வந்து பாரழா வண்ணம் பார்ப்பானே. பைந்தமிழ் நாடன் காப்பானே. ஆலையைக் கூட அரை நொடிக்குள் ஆலிலைக்குள்ளே கொண்டுவரும் வேலை கற்றவன் இவ்வேலன் விரும்பும் செயலை யானறிவேன். பாறையயைக் கூட கூழாக்கும் பக்குவமறிந்த மாமேதை பார்க்க கோழைய் இருப்பானே. மாலைகள் மலையென குவிந்திட்டே மறைத்த மரைமுகம் காணாது வானவர் கூட அழுக்காற்றில் வந்து குளித்ததை கண்டேனே. 

       குறிஞ்சி காக்கும் குறவஞ்சி செவ்வேளிறங்க மருதம் செழிக்கும் மாநிலம் கொழிக்கும் வருணன் மதிக்கும் வான் மகன் இவனே என்றருணன் கூட ஆரத்தழுவி நலமே புரியும் நிறை நிலம் அமைய நெஞ்சே இவனை தரணி புகழ்த்தும் தருணம் வருமே. 








        நான்முகன் நன்மகன் நாத வீணை. மேன்மகன் நபியார் இன் வழி பாதை வேதமொழியும் திருப்புகழ் மேதை விண்ணொளி இறக்கிய நெறிமானாகி மண்மீதிவன் பொன்னடி பதித்த மண்ணடியது







படமெடுத்தாடும்  பாம்பணி நாதருக்கு   சாமரம் வீசும் தென்னல் பூக்கும் திக்கில் இருந்தே வன்புயல் வடிவில் வானதி பொய்க்கா தேன்புகழூரின் தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் வல்லாண்மை மிக்கொரு தீதறுக்கும் திறனை கண்டு தேவர் திருவாய் தெவிட்டாது புகழும்.



      வேதம் அழைத்து விளைவித்த அந்நாதனுலவும் நகர்புறத்தின் நான்காம் உருமலர் தோற்றம் என் ஞானக்கண்ணுள் உறையகண்டேன். நெறிநிலமுள்ளில் நிலை கொள் யௌவனர் அதிலொளிர புதையல் புரியென சொல்லாமலதை புண்ணிய பொதியென சொல்வேனே.  

          நெடுங்களிறொன்று நிலத்தில் பாய்ந்து ஐயன் நிலத்தையும் அலுக்காது மேய்ந்து அது விடும்நிலமாக சிறுகுறுநிலம் மிஞ்சும். அந்நிலம் ஆங்கு கதிர் எழும் கழனி என்றே அடியேன் அன்றேயறிந்தேன் எந்தன்அறனே.  

          பாகம் 71🌺


திருநெல் காத்த தெய்வப் பொருநை பெற்றோர் பிறைசூடனுடன் நற்றுணை தருமதியன்னை தவப்பேரருள் பெற்றோனை யான் கண்டேனிவன் வளவன் சேரனாண்ட வரை சித்தரகத்திய வான்புகழ் தென்னிலம் தனில் உலவுமிடமது மூவா முகுந்தன் மூவாயிற் தோறும் மும்மேனியொளிர தாயாருடன் தக்கருள் பாலித்து எம்மாலாய் உறங்கும் சீரார் மாசுணம் கண்டேனங்கு மார்த்தாண்டக் கதிர்காமன் மறுபிறப்புற்று மன்னில் வேரூன்றி யார் கண்ணும் படாப் புதிராய் வினைவெல்ல விதித்த கடனென யானறிவேன் பேரின்பப்பெரும்பொருளே.  







        பரந்தாமா நின் பவளத் திருமார்பில் திருமகளுறைந்த சேதி மெய்யெனில் நின் புகழ்ஓங்கும் பொற்பாதம் தனில் யாமுறைந்தது இயல்லெனில் நின் வட்டாற்றிற்கருகே வந்துதித்த எம்மானை வெட்டெனவே வெளியிட்டு வேண்டும் வரம் உடனளித்து நட்டாற்றில் விடாமல் இந்நன்மகனுக்கருள் புரிவாய். நம்பியுன்னை நாடுகின்றேன் நம்பிநாதாவுன் நற்குறுங்குடி தென்னவனை நன்னெஞ்சர் ஏங்குகின்ற மன்னவனை பொற்கிளி பொதி திறந்து புவியாள நலம் செய்வாய் பூவுக்குள் பூவான பூநெஞ்சே. 

          வானவரே ஏங்குகின்ற வரம் வாங்கி வந்ததவனின் பூமுகம் தனை காண புண்ணியர்கள் ஏங்குவதால் அப்பூமானின் வதனத்தை புடம்போட்டு புறங்காட்டு. மலை மாடம் நீ கொண்டு நின் நெடும்பாத மலர் வருட நேரிழையுன் திருவமர எம் உடுமான் உதித்த ஊருன் அருகிருக்க பெருமானே இவன் பெயரறிந்தேனது நின் துணையாள் ஒருபிறப்பில் தோளில் அணையாது பிரிந்த பேருடன் மாயோனுன்  மறுபேரிணைத்த மாதவனுன் மேதகு பேரிணைந்திடுமே. 

    ஆழிசூழ் அழகுலகில் எம்மை அரவணைத்து அரவணை மேல் துயில்கின்ற அருளாளா நின் புகழூர்க்கு புகழ் கூட்ட எம்மான் பூப்பது வெறும் வீண்கனவாய் போகாமல் கடைக்கண் காணும் கனிவுக்காய் பணிவுடனே கோருகின்றேன்.

          பூமானுறை பொன்மன திருமார்பன் தனை பணிந்தே யாமேனோ யாசித்து எம் ஈசனையே கேட்டேனவன் யோசித்தே பகர்ந்ததையே உம்முன்னர் பகருகின்றேன். மாசில் மகனிவன் மலர் முகத்தில் நாசி கூராய் நற்குவளைக் கண்ளொளிர ஏறு நெற்றியுடை எம்மையன் சோரா மனமுடையோன். சூடும் மாலையுடன் வீறு நடை போடும்  வீழா எம்மையன் ஏறொப்ப வீரியக் கதிருக்கு ஊறு செய ஒருவரும் வேண்டும் வரம் பெறவில்லை. இவனிற்கு முடிவு கட்ட எவனும் இவ்வையத்தே யாண்டும்  உதிப்பதில்லை. படிந்த காது பங்கய இதழாய் தோன்ற பணிந்த நெஞ்சு உடையோன் பாருக்குள் துணிந்த தோளுரம் கொண்டவனை அணிந்த நிலமகளை அடியேன் வாழ்த்துகிறேன். கனிவுக்கு இணையிலா கற்பகத் தருவாயிவன் கைத்தல செம்மை கண்டேன்.

     பாரெங்கும் தேடியே பல்லாண்டு தவம் பயின்று ஈறில் சீரேருழவர் கழனி சூழ் செம்புலம் நடுவே இவன் ஊருறங்கும் ஓசையினை ஒருவகையாய் அறிந்தேனது முத்துடை சிப்பி போல முகுந்தன் புகழ் பாடும் முறையோர் குல நடுவில் மூழ்கிய பொன்னாகி மூலவனாய் யாம் தொழும் முக்கண்ணன் தூண்டும்  திருவிளக்காய் தீதறுக்க மீண்டுமிவன் உதிப்பானென முன்னம் யானுரைத்தேன். மூடர்களே அறிந்திடுக. 

      பாகம் 72🌺

 வான்மதிசூடி வரமருள் வருணி மலரிவனை வேணி வாழ்த்துரைக்க வானக வாணனை வையமிறக்கி கோனென கோலோச்சும் காவிய பேரரசின் கௌரவமேவி வாதை தீண்டிய வறிநிலம் மாற்றி கோதையர் புன்னகை கொற்கை மீட்கும் பொற்கை புண்ணிய பூமான் வரவால் சோதனையெல்லாம் சுருண்டு விழுமே. சொல்லி விளக்கிட என்னால் இயன்றள்ளிய தமிழால் ஆய்ந்த கவிபொழி தெள்ளாய் திரளும் தீஞ்சுழை ரசத்தை செவியார் கொள்ள துள்ளும் ஓசை சந்தம் கொண்டு ஐயன் தோளுக்கு நல்கிடத்தானே சூட்டிடடு பண்புடை அறனே உன் பள்ளி எழுச்சி பாடிடும் மனமே. 

      தென்னரசாய் இவனை தெரிந்தே விடுத்த வீரதீரர் விளைந்த பூமியாய் கெண்டை கயல்கள் கடல்தளம் கீறி கேடிலா மண்டை காட்டும் மண்புகழ் சூலியாடிட செண்டை யடி நாதம் செவிக்கினிமை சேர்க்கும் அண்டை கம்படி அன்னை தேவிக்கரை காதம் தொலைவிற் வடக்கே ஓடும் குடக்கில் குணங்காய் சேரும்  கூட்டுச்சாலைக்கு இடம் கடந்து ஒடிவில் வடம் பிரிந்தோடும் நீருக்கருகில் ஒட்டிய சோலையுள்ளில் வானவர் கொட்டிய வாஞ்சை குமுதம் வரமற்று வற்றிய மேனியாய் கொட்டியாய் ஒளிர்வதை கூர்ந்து யான் கவனித்தோனது அகம் நோக்கும் ஆழத்தில் அம்முகம் எம்முகம் நோக்கக்கண்டேனதை எங்ஙனம் எடுத்துரைப்பேன். கண்டேன் கனகவேள் கண்மணியை முத்தோயம் முத்தும் கரைக்கு முக்கால் காதத்திற் முப்பெரு மூர்த்தியர் பொற்பாதம் வணங்கி முன்னேறும் இருகாதம் தொலைவே முல்லை நிலமென முகர்ந்தேயறிந்தேன்.



         காஞ்சனக் கோவிலொன்று கண்பறிக்கும் வட நாட்டில் வாஞ்சையுடன் வரும் பக்தர் நேச நெஞ்சை கொள்ளையிட வாசம் செய்வோர் பலர் கண்டேன். நீராழி பொய்கை சூழ் நெடுமண்டபம் அங்கிருக்க அலைமோதும் மாந்தர் கூட்டம் ஆங்கு நித்தம் கொண்டாடும் பெருவிழா தனை காண உருமாலை உடையணிந்தோர் ஓயாமல் குவியும் வண்ணம் படையெடுக்கும் மாந்தரோடு உள்ளுறைந்த எம்மையன் படுத்துறங்கும் யாமத்திலே உள்ளொருவன் வந்தாங்கே  அடையாளம் காணும் முன்னர் ஐயன் முதுகிலேயே அறைந்த காலோடு அகமகிழ்ந்து விரைந்தானே. அவனை அனுப்பிய கயவர்களை அடியேன் நன்கறிவேன். ஆனையேறி அழிந்த விதி அவனை தின்றதுவே.

         தென்னில வேங்கை வடநிலம் பாய்ந்து தின்னும் அமுதைத் தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன். கண்ணீர் பெருக கனலாய் கொதித்தேன். பகலவன் உருக்கும் பாலை கடந்தே காதம் பலநூறு காலால் நடந்தே காவியம் போகிடக் கண்டேனுயிரே.  மண்ணின் முன்னம் மறைந்துறங்கும் மாபெரும் புண்ணியர் கோடி பூச்சொரிந்து மண்டியிட்டு மண்ணை வணங்கியே என்று காப்பாய் இப்புவியை என்றே இன்முகத்தாலே யாசகம் செய்ததை யானே கண்டேன் மாசில் மறையே மறையாப்பொருளே. 

     எவரும் அறியா இரகசியம் தன்னை எல்லோரறியும் அகசியம் ஆக்கி பாகரும் தருணம் வந்ததை எண்ணி பாரே வியக்கும் நாளிகை  கண்டு நல்லோர் நாளை உய்வது திடமே. நாதன் உள்ளம் கொள்ளை கொண்ட அந்நன்னன் வெண்டக வண்ணம் காண்டு நாடே வீழ்வது உறுதி அறனே. நன்னூலொத்த என்னூலே மொழிமோ. 





Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.