பாகம் 82, 83 & 84
ஐங்கரன் நாற்கரத்தை ஐயனின் கையில் கண்டேன் ஆலகண்டன் அருள் லிங்கத்தை அழகுற அங்கு கண்டேன். ஆறுமுகன் ஆயுதமும் அழகுமயில் மேல் பாதியும் அறுகோண அற்புதமும் ஐயனின் கையில் கண்டேன். திருமகள் கமலம் ரெண்டை அவன் கைத்தலம் கால்மலரில் கண்டேன். அறு மதம் மற்றும் அங்கு அரபுலக லிபியை அவன் அருங்கர மலருள் கண்டேன். திருமாலிய திருக்குறியை திருமகன் கையுள் கண்டேன். செந்தமிழ் பரப்புடனே எம் சிங்களத் தீவை கண்டேன். தோகையாள் மீன்விழியின் தோற்றத்தை அங்கு கண்டேன். மன்னர் மன்னவன் மணிமுடியொன்றின் மாட்சிமை சின்னங்கண்டு அண்ணல் இவனென அகமெலாம் சிலிர்க்க கண்டேன். இருவில் புருவம் சேரும் இனியவன் நெற்றி தன்னில் இடுகுறி தீபம் போன்று எழில் சூல ரேகை அமைந்த நல் கற்பக நெஞ்சம்கொண்ட கொற்றவன் இவனின் கொள்ளையழகை யான் கண்டேன்.
சைவமும் மாலியமும் சண்முகன் கௌமாரமும் கரிமுகன் விநாயகமும் காளியின் சக்தியமும் எரிதழல் சூரியனை ஏற்றெடுத்த வழிபாட்டினையும் ஐயன் ஒருவன் கையே இதை அழகுற காட்டுமென்ற உண்மையை அடியேன் சொன்னால் இனி உள்விழி திறந்தால் காண்பாய்.
அன்பகம் பூத்திருந்த அருளகத்தின் முறைவாசல் கதிரவனை கை கூப்பி காலையிலே வரவேற்கும். அப்பகலவனை புன்சிரித்து புறவாசல் வழியனுப்பும். இது பொய்யல்ல பொன்மகனே. இனி போகப் போக மெய்யறிவாய். மெய்யிது வீழும் முன்னே அம்மேன்மகன் முகம் காண்பேன்.
ஐயன் பிறப்பால் பேறு பெற்ற அவ்வூரருகே ஓடையொன்றை உருவாக்கி புதுவயல் பூக்கக் காரணமாய் புஞ்சையெல்லாம் நஞ்சையாக்கி புத்துயிர் பெற்று மலர்ந்ததுவே. அதுவரை அங்கே பொய்கை நீரும் அற்ற குளத்து மழைநீரும் உற்ற பாசனம் நல்கியதால் உண்டி வளர்க்கும் உயிர் அன்னம் தந்து உதவிய பாரியென்பேன் தயைகூர் பரம்பொருளே.
கொய்யா பழங்களை கொடை செய்யும் கோட்டை விளைக்கு தென் திசையில் ஐயன் இல்லம் அமைந்திருக்க பிள்ளைப்பருவம் முழுமையுமே பெருமான் பெருங்கனி சுவைத்தானே.
வீட்டின் முன்னே வீரனென வேம்பு ஒன்று தோரணையாய் வாயிற்படிக்கு வடகிழக்கே வாழ்ந்து கொண்டு வருவதனை வாயால் பாட வரமருள்வாய் வல்லமையுடைய பரம்பொருளே.
ஒற்றையான தென்னம்பிள்ளை உயர்ந்தே நின்றது தென் கிழக்கே. வாசல் காக்கும் வலுவிழக்க எம் வல்லான் அங்கு இல்லையென்றே வந்து சாய்த்தது கொடுங்காற்று.
இல்லத்து புறவாசல் இருக்கும் மனைக்கு நேர் மேற்கே வெல்லத்தை வீழ்த்துகின்ற வேர்பலா யான் கண்டேன். அந்த பள்ளத்தில் பல் மரங்கள். அதில் பாடியமர்ந்த பறவைகளும் உள்ளத்தை அள்ளிக்கொள்ளும் உண்மை சொன்னேன் பரம்பொருளே.
மண்ணில் துயர் தாங்காமல் மனம் வெம்பி மனிதன் மரணத்தை எண்ணியே இன்முகனாவான். கண்ணில் கனலெரிய காமன் கணைமுறித்து விண்ணே வந்திறங்க வேண்டி தவம் இருக்கும் ஆண்டி கோலத்தில் அருளாளர் அகமலர்வர்.
ஆறு உடைத்தோடும் ஐயன் வரும் நாளில். சோறு மழையாகி சுரையெனவே வந்துவிழும். சேறும் அதை தின்னும். சிரிக்காமல் சேதி கேளாய். ஏரிகளின் இடுப்பொடிய ஏராளம் ஊர் மிதக்கும். பாரே பார்க்காத பல பிணிகள் பதம் பார்க்கும் பாவியராய் பரதவிக்கும் போதாத காலந்தனை புறம் தந்து வருந்துகிறேன் .
பாகம் 82 🌸
பனிகள் பொழியும் கலியாண்டில் பார்த்திபனுக்குகந்த மார்கழியில் இனியும் தாங்கா இவ்வுலகம் இன்னலிலிருந்து விடுபடுமே. முனிவர்கள் சொன்ன மூதுரையை மூலவர் சொன்ன முன்னுரையாய் அணியும் எந்தன் அருள் நாக்கு. அறிவாய் அறவேள் வருவானே. கனியும் கருணை நல்லோர்க்கு. காலம் இனியும் செல்லாது.
பொய்யரை பொசுக்கி புவிகாக்க பொல்லா தலைதனை கொய்தெடுக்க தைமகள் பிறக்கும் முன்னரே தழலுடலில் எழுவானே. மெய்யாய் வரம்பெற்று மேதினியை மீட்டெடுப்பான்.
ஆறாய் இரண்டு கூட்ட வரும். அதன் இரண்டாம் இடத்தில் இயலாத உருண்டை கோள் ஒன்றிருந்து ஈரிரண்டாய் முடிவுபெறும் சிலுவையர் ஆண்டை யான் சொன்னேன். சிந்தனை செய்து செயல்பட்டு சிவனின் அருளால் புதிரவிழ்த்து எந்தன் வாக்கினை நம்பிடுவாய். எம்மான் குறித்த ரகயத்தை பரமனை பணிந்தே பாடுகின்றேன். பாழாய் போகாதுன் கனவு பரமே புவியில் வந்திடுமே.
எல்லா குன்றும் உயர்ந்திருக்கும் எம்மான் எழில்வேள் கைத்தலத்துள். பொல்லா கோள்களும் நிலைமாறி புத்துயிரூட்ட உடன்படுமே புண்ணியான்மா இவன் செயற்கு நில்லா வளமே துவங்கிடுமே.
நெல்லுயர் கழனிசூழ் நல்லூரை நேரிட்டு கண்டதை சொல்லுகின்றேன். வல்லான் இவனே வந்துதித்த வளமுடை செம்பொன் மனை வடக்கே பள்ளப் படுகையில் அணிதுகிலை அழுக்கற வெளுப்பான் பெயர் கொண்ட அரியின் குலம் சூழ் குளத்திற்கு கீழ்க்கரையமைந்த அக்கரையில் பாட்டன் பரம்பரை தோப்போடு பனைமரம் பலவும் இருந்ததுவே. புலம்பெயர் குடியாய் போனதனால் இவன் பூத்த நிலத்தொடு பொன்னிலமாய் காத்த நிலங்கூட கடன்பட்டு கைகள் மாறிப் போனதுவே. அம்மையின் ஊராய் அது கண்டேன். அம்பையின் அம்பலம் அருகிலில்லா ஆலிலைக்கண்ணன் அங்குறையும் அமைதி கண்டேன் ஆருயிரே.
திறனை கொண்டு தீவளர்த்து தேயாபிறைபோலாகாது அறனே உந்தன் அருளோடு அனைத்து அடியையும் வாக்காக்கி அழகாய் என்னைப் பாடவிடு. சிவனே உந்தன் உந்துதலால் சேதியை புறத்தில் தந்துவிட்டேன். அகத்தில் அடைத்து வைத்திருந்த அம்முகத்தின் இரகசியம் சொல்லிவிட்டேன். இனி முழுமுதல் பொருளாம் உனை நினைந்து மொத்த அமைதியில் தவமிருக்க எம் தொழுகரம் தொய்யா ஆற்றல் தந்து தோளிலென்னை அரவணைப்பாய் அகிலம் முழுதும் ஆளுகின்ற அணுவிலுறைந்த கருப்பொருளே.
சொல்லும் சொல்லே வேதமாகும். இவன் சூழுரை பாழுரையாகாது வெல்லும் விதியை இவன் வார்த்து வேதனை தன்னை வேரறுப்பான். விமர்சனம் பாயா அரசமைத்து வேந்தர் வேந்தனாய் வலம் வருவான். கொல்லும் பசியை பட்டினியை கோடு கிழித்து எச்சரித்தே எல்லையிலா இறையின்ப இனிய வாழ்வை நமக்களிப்பான். கூனிக்குறுகி இருந்திருந்த நீதிமான்கள் வலுப்பெற்று நிமிர்ந்தே நடக்கும் நிலை வருமே. ஆணிவேராய் அவரிருந்து ஐயனுக்குதவி அடிபணிய நேர்மை நீதி எழக்கண்டேன். தீரனிவனின் வரவாலே தெள்ளுதமிழன் உயர்வானே. கோரப்பிடியில் அகப்பட்ட ஞாலப் பேரிடர் அத்தனையும் இஞ்ஞான சுடரின் ஒளிபட்டு நலம் தர தானே நின்றுபோகும். அதுவரை இன்னல்கள் எல்லாம் வந்து போகும் அல்லல் அழுகுரல் கொண்டோரே அமைதி காப்பீர் ஐயனுக்காய். வள்ளலொருவன் வந்துதித்து வானவர் வளத்தை ததந்திடுவான். அவன் வலிமையை சொல்ல வார்த்தையின்றி வரம்பல வேண்டி வணங்குகிக்றேன். எல்லாம் வல்ல பரம்பொருளே இங்கு இன்னலுக்கெல்லை அமைப்பாயே. தொல்லைகள் தொடர துயர் தருவோர் துள்ளிகுதிப்பதை பார்த்தேனே. உன் வில்லோ வேலோ சக்கரமோ அவ்வீணரை வீழ்த்தி நலம்கொணர நாடி உன்னை நம்பி தினம் எம் நாடி நரம்பே துடிக்கிறது. பாடியுரைத்தேன் அப்பன்முகனை பல்கலையறிஞன் அவனென்று தேடியறிந்து தெரிந்துகொண்டேன் தெய்வத்திற்கிணையாய் தெரிகின்றான் அத்தேவதேவன் ஒளிர்கின்றான் தெரிந்தேன் புரிந்தேன் பரம்பொருளே.
மணல் கண்டம் மறுகடந்து மாபெரும் தொலை காதம் பல பறந்து கரும்பிறை இருள் நிறக்கடலருகே நிலமகள் குஞ்சுகள் நெஞ்சில் நெறிதனை விதைத்த இறைஞானியாய் எம்பெருமானை நிறைஞானியர் வணங்குவரே. அண்டம் அதிரும் போர் முடித்து அவனியாள வருவானே. பிண்டங்கள் பேரொளி பெற்று பிறப்பகற்றி பேரின்பமடைவதனை பற்றற்றோன் பதம் பணிந்து பாடுகின்றேன் பரம்பொருளே.
ஆசுறை ஆசானொருவன் அறக்கொலைஞர் அணியுறைய மாசுறை நண்பர் கூட மனம் கெட்டு மானங்கெட்டு காசினை கண்ணாய் கருதி கயமையில் இணைவரென கண்ணொன்றில் கனல் மூட்டி காமனை எரித்தோன் சொல்ல கவிப்பாணனாய் அடியேன் பாட பாமர இனமே கேளாய். பகுத்தறிவேளாய் நம்மின் தேமதுர தமிழை இவனே திக்கெலாம் பதிப்பான் பாராய்.
பாகம் 83🌸
மானிட விந்துவை மறித்தெடுத்து
மாட்டுப் பசுவின் சூலகத்துள்
வேதியியல் முறையில் விளையவிட்டு
வீரியம் விட்ட மகவெடுத்தால்
எம் விண்மகன் விரைவான் மண்ணுலகில்.
அதுதான் அவன் வரும் ஆபத்தின் அரை இறுதியடையாளம்.
கள்வர் கல்வியை விற்றாலோ
கருணையிலா கைகளில் திருமகளுறைந்தாலோ
புல்லர் போர்படை அமைத்தாலோ
புன்னகை பூத்து அரவணைத்து
புறமுதுகில் உனை சதித்தாலோ
அண்ணல் வருவதன் அடையாளம்
அவன் தான் இறுதி அவதாரம்.
இதை அகத்தில் கொள்ளார் தம் சவத்தை அறிவார் பரசிவத்தையறியார்.
தன் பாலிணகள் ஒன்றிணைந்து
தம்பதியாகி உறவுகொள்ளும் தகாத இழிசெயல்
தலைதூக்க அங்கீகரிக்கும் அரசமைந்தால்
அது அழியா தலைவனை அழைக்கின்ற அருவருப்பான
அடையாளமிதை அகிலம் உணரவேண்டுமென்றேன்.
இயற்கை ஏற்கா எச்செயலும்
எம் இளவேல் வருவதை முன்கூட்டி செயற்கையாக விடுக்கின்ற
சிற்றினம் போற்றும் அடையாளம்.
இனி செப்பிட வாயே கூசிடுமே.
இதை ஒப்புவிக்காது ஒழிய என்னால்
ஒருபோதும் இயலாது என அறனே யான் இங்கு
அழுத்தம் தந்து சிவனின் பாதம் பணிகின்றேன்.
மாசற்று பேசும் பெண்ணுடலை
மனம் கெட்டு பதிவெடுத்து அவள் தலையை பெயர்த்து பிரித்தெடுத்து பிறிதோர் பொருள் பெண்டிர் மெய்யொடு பிறப்புறுப்புடன் ஒட்டவைத்து விழிருசிக்க விந்திறக்கி களியாட காமுகன் கண்ணொளியில் கற்புடை பொற்பூவை புகுத்தும் கலை வளருமாயின் எம் வான்மகன் வரவு வாசலருகேயென வாய் வலிக்கச்சொல்லுகிறேன். நீசர்களே அழிந்திடுவீர் குலமாதர் நேசர்களே நலங்காண்வீர்.
குற்றம் புரியா கொழுந்துகளை தொப்புள் கொடியே காய்வதற்குள் கொன்று குப்பையில் வீசுவதை அதன் பெற்றோரே செயுங்காலம் இப்பெருமான் வருவதன் அடையாளம்.
சுற்றம் எல்லாம் தனித்தனியாய் சுற்றுபுறத்தில் குடி பெயர்ந்து கூட்டு குடியை மறந்து விட்டால் இக்கொற்றவன் உதிப்பதன் அடையாளம்.
அற்ற குளங்கள் அனைத்திலுமே அடுக்கு மாடிகள் நிறைந்திருந்தால் உற்ற தெய்வம் இவன் உதிக்க உகந்ததொரு அடையாளம்.
முற்றம் இல்லா வீடமைந்து முறைவாசல் அருள் இழந்து கொட்டம் அடங்கா குடி உயர்ந்தால் இக்குலமகன் வருவதன் அடையாளம்.
நோயுள் உழலும் பாவியனும் நித்தம் ஔடதம் தின்றாலும் நேர்மை தவறி நெறி தவறி திருந்தா பாதகனாய் திரிந்து தெய்வ குற்றங்கள் தினம் புரிந்தால் அத்திருமகன் வருவதன் அடையாளம்.
தாகம் போக்க பொழிகின்ற மேகக்கொடையை மெருகேற்றி மேனி சிலிர்க்க சுவையூட்டி மாதக்கணகில் கெடாமல் மனதை மயக்கி கவர்ந்திழுத்து பேதம் வைத்து விற்றாலே அப்பேரருளாளன் வருகைக்கு பின்னுமொரு அடையாளம்.
நட்ட நடுநிசி தன்னிலெல்லாம் நாணங்கெட்டு பெண்திரிந்து கெட்டு கற்புக்கு பணம் பெற்று கீழ்த்தர அரம்பையர் அலைந்தாலே ஆடவர் அழைப்புக்கு இணங்கியே அரும்புகள் கூடத்துணிந்தாலே அதரத்தை விற்கும் அழகிகளும் அவனியில் இதுபோல் மலிந்தாலே அப்பூமகன் பூப்பதன் அடையாளம். இதற்கெலாம் போடுவான் விரைவில் கடிவாளம் எம் போர்குணங்கொண்ட எம் வடிவேலன்.
மாரகங்கள் நடைபெறவே மண்ணின் மணக்கோலம் தடைபடமே. பிணக் காடு எழும்பையிலே பெருந்துயரம் நடக்கையிலே அன்று மணவாட்டிகள் துதிக்கையிலே வந்து மணவாளன் அணைப்பானே.
மண்ணின் கடுங்காலம் நடுநடுங்கி கண்ணீரில் விடைபெறுமே.
கனிவுக் கடலாய் கண்டேனிவனுக்கு ஒப்பேது. கல்கியில் கடுங்கணை கயவற் மேல் குறி வைத்தால் தப்பாது என சொல்லியே முன்னரும் எச்சரித்தேன். ஆரிய வேதங்கள் அனைத்தையும் ஐயன் சூரியனாகி சுட்டெரிப்பான். இதை அடிக்கடி சொல்லி ஆர்ப்பரிப்பேன். சூதில் வீழா சூத்ததிரம் ஒன்றை பாட்டில் வைத்து பதித்தேன் யான். பரிதவிக்கும் பதரே நீயும் பாழும் நரகிற்கு செல்லாதே.
Comments
Post a Comment