பாகம் 7, 8 & 9
பாகம் 7💗.
கொத்துக் கொத்தாய் உடல்கள் வீழும்.
கூக்குரல்கள் விண்ணை கீறும்.
சொத்துக்களாய் காத்த நம் கால்நடைகள்
மாண்டுவீழ மண்மீது கொடு நோய் பல பரவுமங்கே.
வித்துக்கள் முளைத்தால் கூட வேதனைதான் அறுவடையே.
பத்தையும் விற்றுவிட்டு பசி நமக்கு பாடை கட்டும்.
பரிதாப பஞ்சங்கமெங்கும் பெரிதாக ஆட்டம் போடும்.
உறங்காத ஊர்கள் கூட உறங்கும் காலம் வந்தே தீரும்.
தலைப்பாகையர் நாடுகளில் தங்கம் ஊறும் கேணிகளில்
இரை தரும் கிணறு எல்லாம் இரையாகும் தழலுக்கே.
அணு வீழ்ந்தங்கெலாம் புல்பூண்டும் கரியாகும்.
இதனால் பரிவோடா புரியாக பலவூர்கள் பரிதவிக்கும்.
ஓய்வறியாதோடும் தேர் படையும் பசியோடு
தீனிகேட்டு படுத்துறங்கும் காட்சி தரும்.
நரி படைகள் நெடு வழியில் நெறிகட்டு சூறையாடும்.
இணைந்திருக்கும் இதயம் கூட நானீஎன்றே எரிந்து விழும்.
பழுதுபடாதிருந்தாலும் படை ஊர்தி
பாழ் பட்டு பாதையோரம் படுத்துறங்கும் .
உணுணவு ஒன்றுமின்றி உயர்குடியே திண்டாடும்.
இல்லாதோர் நிலை கூட இன்னமும்
இன்னலுற்று இழிவடைய காண்பாயே.
கண்டதெல்லாம் உணவாக கண்ணீர் பெருகி ஓட
மன்னிறைச்சி உண்ணக்கூட மானிடர்கள் தயாராகி
மனிதம் கூட மரித்துப் போகும்.
அப்பொழுதே அவன் வந்து அகிலத்தை ஏற்றெடுப்பான்.
பின் எப்பொழுதும் ஏறுமுகம்
பின்னடைவே இல்லாது பொன் பொருளை
விளைவிக்க புதுவசந்தம் பூத்துவரும்.
இவை அனைத்தும் நடக்கும் என்றால் ஏற்க மனம் மறுத்திடுமே.
பகலிரவாய் பாருறங்கும் பாழுங்காலம்
பாய்ந்தே வர தவக்கோலம் பூண்டவர்கள்
தனைக் காத்தெமையடைவர்.
விண்ணண்ணல் வெகு விரைவாய் வெளிச்சம்பட வந்தே தீரும்.
அதுவரை மரண ஓலம் கேட்பதை யார் தடுக்க இயலும் மண்ணுலகில்.
அந்நேரம் சித்தர்கள் பாதம் தேடி சில மாந்தர் சென்றுவிடுவார்.
சென்றிட்ட மாந்தருக்குள் சீர் வளவன் இவனுமுண்டு.
உண்டியை மறந்திவன் ஒருதிங்கள் வனவாசம்
கொண்டவனை வந்துகாண்பானிவனாசான்.
கொண்ட சீடனுக்கு கற்றதனைத்தையும் கடலளவாய் கற்பிக்க
இக்கொற்றவன் அருள்க்கொடையால்
கரைசேர்ப்பான் இன்னலுறும் இவ்வுலகை.
துவரை இவன் வருவான் என்றே சித்தர்களும் தவம் இருப்பார்.
இவன் வந்த பூரிப்பில் இவனுக்கு தீட்சை தந்தே
கலையனைத்தும் கற்றுத் தந்தார்.
ஈரேழுலகாளும் எண்பெரும் சித்தி கூட
இவனடிக்குள் தஞ்சம் புக
நாமுள்ளும் செயலெல்லாம்
நலமாகும் இவன் தயவில்.
பாகம் 8💗
மின்னல் மாண்ட ஊர்களாகி
மெழுகோடு கொழுப்பெரியுமிதை
கண் கூட காண்பாயே கண்மணியே.
தோரணமாய் தொங்கும் மின்மினியும் மங்கிப் போகும்.
புனலனலும் பொறியணுவும் புழங்குமிடம்
பூக்காத நிலம்போலே தரிசாய் போகும்.
ஊரடங்கும் நாடடங்கும்.
ஓலமிட்டே ஓநாய்கள் சீருடையில் உலவி வரும்.
கருணையில்லா கண்களுடன் கௌவிக்குதறும் காலம் வரும்.
அதுவரை இனமெல்லாமிவனையொதுக்கி வைக்கும்.
குலம் எல்லாமிவனைக் குறையாய் காண
வையத்துப்பாவைகட்க்கு இவன் வருகை புரியாது.
நாசி இல்லா மானிடர்களிவன் வாசனையை நுகர்வாரோ?
பெண்டிரை இழுக்கும் ராசி இப்பெருமானின் முகராசி.
அழுக்காறு ஆடவர்கள் அவா கொள்வர் இவன் அறிவழகை.
பண்பாட்டை புதுப்பித்து பகுத்தறிவை சிறப்பித்து
நம் பாட்டை அவனேற்பான் அகிலமே
ஐயனை வரவேற்று அரவணைத்துப் புன்சிரிக்கும்.
அலையலையாய் பிணம் குவியும்.
அரங்கின் வெளியே விறகாய் உடலெரியும்.
உலகை கரியாக்க ஒரு நொடி போதும் என்று வல்லரசு வாய் கொட்டும்.
ஆனாலும் அணுவளவு பகைவர்களால் அவ்வரசே வீழ்த்தலாகும்.
பாரி போலும் படர் வல்வில் ஓரி போலும்
வாரித் தரும் மாரி போலும் அமைப்பான் அரசை புவியில்.
புல்லினமும் புள்ளினமும் புலி கரடி வல்லினமும்
மெல்லினமாய் மாறிவிட இவன் நன்னெறியை வகுப்பானே.
வகுத்த பின்னர் வல்லறிவர் துணையோடு தொகுப்பானே துறைகளையே.
பாகம் 9💗
புத்தியைக் கொண்டே புரிந்திடும் வல்லமை பெற்றவன் இவனன்றோ..!
கன்னியைக் கொண்டு கண்கணை விடுத்து காமன் துணையுடனே பின்னிய வலையில் சிக்கிடுமோ எம் செம்மொழி தமிழ் வேங்கை.
மண்ணின் இடர்கள் தொடரும் படரும் இம்மன்னன் எழும்வரைக்கும்.
விண்ணும் அதிர்ந்து வெறிசெயல்புரியும் இந்த வேந்தன் வரும்வரைக்கும்.
இவ்வினியவன் வரும்வரை எல்லா மண்ணிலும் கலகமே வெடிக்குமப்பா.
கடும் போர்களும் மூளுமப்பா. இவனே வந்தால் இன்னல்களெல்லாம் தானாய் தீருமப்பா.
அந்த இனிய காலம் வருவது திண்ணம். இது விண்ணவர் ஆணையப்பா. இம்மண் மீது ஆணையப்பா.
தென்னக்தே ஓரு நன்னிலம் அங்கு தேவ அரவின் ஆலயம்.
நிதம் நகர்வலம் வருவான் நடுநிசியிலும் ஆழி வண்ணன் அருளிலும்.
விண்ணை விட்டு இவ்வேந்தனை குளிர்விக்க கூடு எடுத்தவராய்,
மண்ணில் தோன்றிய கந்தர்வராயிரம் இவன் மனதின் குயில்களன்றோ.
இவன் குறிக்கோள் அடையுமுன் இக்கூட்டை விட்டு குருவிகள் பறந்திடுமே.
வாலிபம் முழுவதும் கேளிக்கை தந்தவர்கள் இவன் அழைப்பை ஏற்று சுகம்தர வந்தனரென்பது உண்மையப்பா
மும்மை ஊழின் முடிச்சவிழ்க்க எம்மையிலும் இவன் கடன்படுவோராயிரமே.இம்மை முழுதும் இவனை தொடர்வார் என்பதை அறியாரே.
Comments
Post a Comment