பாகம் 88, 89 & 90 சிவனின் சினத்தாலே சிதையும் கொடும்பரப்பை இங்கு இனி எவனும் மீட்கத்தான் இயலுமோ எம்மவரே. அவன் மகனின் மலராட்சி மண்மீது மணம் வீசி அறனின் நற்பயனால் அத்தனையும் தழைத்தோங்கி திறனார் ஒன்றிணையும் தேவ சேதி வெளியிட்டு பறையை அறைந்திவேன் பண்பாளர் பகர்ந்திடவே அன்பாளும் அரும்பொருளே.
பாகம்88🌸
முக்கண்ணன் முறைமகனின் முழு ஊர் சுற்றியே மூலை முடுக்கெலாம் மூடர்களின் முக்கண் மூடா இமையுடன் முழுநாளும் விழித்து இருக்குமென முத்தி நாதன் எனக்குச் சொல்ல அதை பாவிகள் பொய்யென்று பகுத்தறிவில்லாமல் பட்டென்று மறுதலிப்பர். உறுதியுரை யானளிப்பேன். அவ்விறுதி நாள் எழும் போது இன்னல்கள் கொல்லும் போது உறு கயவர்களனைவருமே இவனுற்றாருடன் ஒன்றுகூடி உயிர் பறிக்கும் நோக்கினிலே இமைப் பொழுதும் நீங்காமல் இவனுறைந்த இடம் தன்னில் அடையாளம் அரவமின்றி அங்கிங்கெனாதபடி அரணமைத்து இயங்குவரே.
🌸 அமைதியாய் அவனிருந்து அத்தனையும் அசைபோட்டு விசையுறு புயல் போலே வீசுவது தென்னில ஈற்று திருநாட்டு கன்னி தவமேற்க முப்புறம் கடலுறை கவினுறு சென்னிலமே.
🌸 சிறைகாக்கும் கறை நெஞ்சோர் சீற்றமுடன் அறை கொணர்ந்து இறையோனிவன் கதை முடிக்க இரையுள்ளே விடம் விதைத்து கொடும்விருந்தே கொடுத்தாலும் கொற்றவன் இன்னுயிரை காக்கும் கடும் பொறுப்பாய் பெற்ற காளியே பிள்ளையென பேரருள் பாய்ச்சி போர்த்திடுவாள் என்பதனை ஊராரறிந்திடவே உண்மை சொன்னேன். அக்கொடியோர்கள் தலையையெல்லாம் கொய்தெடுத்து கூறுபோட்டு மலையெனவே மண்மேட்டில் மாந்தர்களின் மனமகிழ குவித்திடுவான் மன்னனிவன் தலைமீது மணிமுடிதான் ஏறியதும்.
🌸கண்ணன் கருவறையை கண்ணியமாய் திறந்து நிதம் கமல பாதம் தொழும் நேரம் கயவர் கூட்டம் எழுந்திடுமே கார்வண்ணன் ஆபரண திருவறையை திருடும் நோக்கில் திறந்து பார்க்க திரும்பும் திசைகெலாம் தீமை எழுந்திடுமே. திறந்தவனும் அழிவானே திணித்தவனும் அழுவானே. முற்றும் துறந்தவனாய் எம் மூலவனிவன் திருவனந்தன் உறைவிடத்தில் தேவ ஒளி வீச திருநடையுள் புகுந்த பின்னர் ஆட்டி படைக்கின்ற அடுநோய்கள் அத்தனையும் அடியோடு மாய்ந்திடுமே அருளாளன் மாட்சிமையை உத்தமனே கேளாயோ உலகத்தின் விதி இதுவே.
🌸 வேராழம் விட்டதொரு வேட்கைமிகு போராளி புயலொத்த ராஜாளி பெரும்பறவை போராலே வீழாமல் சூதாலே வீழ்த்திடுமே. எலிகளுக்கோர் காலம் வந்து மணிமுடிகள் தரித்திடவே புலிகளெல்லாம் பதுங்கிடுமே போதாத காலமென்று. பழியொரு பக்கமாக படுபாவியர் தப்பிடவே சிறை செல்லும் பறவைகளின் சிறகொடிந்த அவலமெலாம் சிலகாலம் நிலைகொளுமே. நெடுநாள் நிலம் வேண்டும் நலம் தன்னை நிறைவேற்றி நெஞ்சார அருள் புரிவான். நிறம் மாறும் மாந்தர்களின் நிறமறியும் நெறியாளன் நேர்மையினை நேரிட்டு யான் கண்டு திகைத்திடவே காட்சி தந்தாய் பரம்பொருளே.
🌸 இனத்துக்கே எதிராகி ஏராளம் ஓநாய்கள் பேய்நாய் மன்னனுக்கு பேருதவி செய்திடுமே. எம்மான் வருமுன்னம் இந்நிலத்தை ஆளுகின்ற பொய்யன் தளபதிகள் ஒவ்வொன்றாய் உண்டிடுவாள் நிலம் காக்கும் கொடுங்காளி . மலைமகள் தங்கையிவள் மகவுகளை கொன்றதனால் தளபதிகளனைவரையும் தமிழ்ப் பரப்பில் வரவைத்து தன் தாளாத பசி தீர்க்க தழல் மூட்டிப்புசிப்பாளே. இதை கொண்டாடி பூதேவி அகங்குளிர சிரிப்பாளே.
🌸மெழுகாய் மேனியுருக்கி இமையாய் உடன் மலர்ந்த இளவல்களை உயிராய் காத்து உயர்த்திய அண்ணல் சருகாய் சாயும் காலம் அவர்க்கு சற்றுமுதவாத சண்டாளர் பெருகும் காலம் நில்லாமல் உடன் வருவான் வில்லாளன் விட்டதொரு விசையம்பு வீரியத்தில் விரைந்தைய்யன் வருவானே .
பாகம் 89
🌸 நளினியின் நடு இதழ் மேல் நாரணன் திலகம் தாங்கி அகிலம் திரட்டியே அறமாய் ஆன்மீகம் செழிக்க அண்ணல் அரும்பணி முடித்த பின்னம் உதித்தது பதிற்றுபதினொன்றுடன் மூன்று கூடும் பின்பனி முதல் திங்களாண்டின் பிறைவளர் பதினொன்றாம் திங்களொன்றில் தவமகனாய் பொன்னிதழ் விரிய புடம் போட்ட தேவ குணந்தனில் பூத்து புவனம் மீட்க வந்த புதையலை புல்லரறியாததை என் சொல்வேன் அண்டம் முழுமையும் அடக்கியாளும் பரம்பொருளே.
🌸 முத்தாய் குட்டியிட பின் முழு ஞானம் பெற்றெழுந்தருளி சொத்தாய் பதியமைக்க அங்கு சூழ்ச்சி செய்யும் வேடர் சிலர் சொத்தையாய் விளைந்தனரே. அம் முல்லைவனத்தில் விரிந்த சில மூடர்களும் சீடர்களாய் கருணையின்றி காரிருளிலில் ஐயன் கால்தடத்தை மறைத்ததனை அருகில் அமர்ந்து யான் கண்டேன். ஐயன் தலையெடுக்க வந்த ஆலகால அரவுகளும் விரித்த படத்துடன் வீரியமாய் பின்தொடர வீதியோரம் உடனமர்ந்து அவர் விதியை நினைந்து யான் சிரித்தேன். புகுந்தது செவ்வேள் பொன்னுயிரே இதை பொல்லார் யாரும் அறியாரே. பயின்றது ஈசன் பாசறையில் இதை அறியா நீசர்கள் அழிவாரே என்ற அடித்தள உண்மையை உரைத்தேன் யான்.
உன் பொன்னுரை படித்த பொல்லாரனைவரும் மீளா துயருற்று தேறா பூங்காய்களொடும் மீளா நரகுறைவரென மீண்டும் சொல்வேனே. எம் வேந்தனை மறுக்கும் யாவரையும் அவ்விண்டுவே மறுக்க பாவக்கடலுள் உறைவரே. தெற்கிலுதித்த திருமேனி இன்று தெய்வத்தாயின் பார்வையிலே உப்பு நீருறைக் கரையோரம் உடல்நலமுடனே ஒளிர்வானே. அவன் வெல்லும் நிலம் காண யாம் இரு விழியுடையோனாய் அவன் சொல்லும் சொல் கேட்க இருசெவி கொண்டேனே. அல்லும் பகலும் அயராது அரும்பணிசெய்யும் வல்லானிவன் வருகைக்கு எம் வாழ்வை தந்தேனே.
🌸 இறையோனை இன்னிசையில் ஏற்றழைக்கும் அருமொழி அரபு தனை பெருமான் கைத்தலத்துள்ளுறைந்த கமல மெய்யின் மூவிதழ் கூராய் முடவன் மேட்டையும் அடுத்த அருணன் மேட்டையும் தொடுத்த அறிஞன் மேட்டையும் தோகைபோல் தொட்ட
அழகினை தூங்கா விழிமலர் விரிய வியந்து பாங்காய் புகன்றேன் பரம்பொருளே.
🌸 வெறியோடு சுற்றிடும் வேங்கைகளும் பசியோடு பாய்ந்து வரும் அரிமாவும் தணிந்து தத்தம் குணமிழந்து தாழ்பணிந்து தங்கமகன் பாதம் முன்னே மண்டியிட்ட எம் மெய் சிலிர்க்கும் காட்சியினை மீண்டும் மீண்டும் கண்டேனே. அரவங்கள் கூட்டாக அரணமைக்கும் அடர் காடு ஐயனுக்கு பொன் வீடு.
ஆந்தையர் காக்கையர் அத்தனையும் ஐயனின் தோழன் என்றே யான் அறிவேன். பாடிடும் புள்ளினங்கள் முகம் அறிந்தே அவன் பக்கமுறை மரம் சுற்றி வலம் வருமே. குருவிகள் கூடு கட்டும் ஐயன் வீட்டில். குயில் ஓசை கேட்கும் அவன் இருப்பிடத்தில். பைங்கிளிகள் பக்கத்தில் அமர்ந்து இருக்க பழம் கொடுத்து அகம் மகிழ்வான் அன்புநாதன்.
ஐயனுள்ளம் நீயுறைந்த ஆலயமாய் அழியாத கருணை கொண்ட காவியமாய் புவியோர்கள் போற்றுகின்ற பொக்கிசமாய் கொள்தற்கு இதைவிட என்ன வேண்டும் பரம்பொருளே.
🌸தெய்வத்தின் திருமனதை புண்ணாக்கி தேடி அறம் சிதைப்போர் நிலைகொண்ட மையத்து மாநிலத்தை மண் புதைக்கும் அவலத்தை வையத்தார் அறியாரே. விண்ணில் ஒலித்ததொரு வேதனை பண்ணொன்றை உள்ளில் கேட்டேனே. வீணர் வெய்யரொன்று கூடி வேரமைத்து தென்னிலம் பதிந்த திருமண்ணில் தீரரினந்தன்னை கெடுக்கும் உய்யா உறுபாவம் ஒருவரையும் விடாது. அவ்வினையின் விளைவாய் நடுக்கண்டம் நடுநடுங்கி நாடே அலறிட நகரங்கள் பல புதையும் நாளிகையை நயனத்தால் கண்டேனே.
சிவனின் சினத்தாலே சிதையும் கொடும்பரப்பை இங்கு இனி எவனும் மீட்கத்தான் இயலுமோ எம்மவரே. அவன் மகனின் மலராட்சி மண்மீது மணம் வீசி அறனின் நற்பயனால் அத்தனையும் தழைத்தோங்கி திறனார் ஒன்றிணையும் தேவ சேதி வெளியிட்டு பறையை அறைந்திவேன் பண்பாளர் பகர்ந்திடவே அன்பாளும் அரும்பொருளே.
🌸 முன்னம் நிகழ்ந்தது போல் முத்தமிழ் வேத வித்தகர் வீடுறைந்து கற்பிக்கும் திண்ணைப்பள்ளி வரும். ஆசான் தின்ன காய் கனிகள் வரும். உண்ண அன்னம் வர உயர் ரக துகிலும் வர உற்ற குருகுலத்தை எம் போல் ஒருசிலரேயன்றி ஒருவரும் அறியாரே. இதை சிவனாரும் நன்கறிய உன் செவி புணர வாக்கு தந்தேன்.
பாகம் 90 🌸
வெட்டி ஊண்ணும் மடக்கொடியோர் விளைந்ததொரு நகரினிலே பட்டி தொட்டி இழி மகன்கள் பதிந்ததொரு பாவியராய் வட்டித்தொழில் புரிகின்ற வடக்கர்களின் இணக்கனான வல்லரக்கர்
ஆணைகட்க்கு சொல்படிந்து சூது உண்ண எம்மானின் சிரம் வேண்டி இரவில் கூட தேரெடுத்து புரவியென தொடர்ந்தாலும் புவிமகள் போர்வை போட்டு புலிமகனை காத்ததனால் அவர்கள்
தொங்கும் தலையோடு தோற்ற கதையானறிவேன். அங்கு அழுக்கு பொன் பெற்றவனாய் அரக்ககுணம் கொண்டதொரு பிணம் சுமக்கும் அமரரூர்தி பெற்ற அற்பன் அறம் சிதைத்த அவலங்களை ஆதிசிவன் நாமமோதி அடியேனானறிவேன். மீதி கதை நீ சொல்வாய் மேதகு பரம்பொருளே.
மறவன் குடியாண்டு மண்ணில் இருப்பு கொண்ட கொடிய குலப்பேய்கள் கூடியே பிறப்பெடுத்து ஐயன் இறையருளை அணுவளவும் அறியாது கருமானொருவன் காசுபெற்று உருக்கி தந்த கையரிவாள் வீச வந்தோர் அவனருளை இழந்ததுடன் அவ்வுலகையும் இழந்தனரே.
🌸 நீதிக்கு விலையெழுதி நிறமாறும் இழியோனும் பாவிக்கு துணையாக பக்கபலம் இருந்தபடி வாதிக்கு எதிராக வாக்குரைக்கும் கொடியோனும் தீ சிதைக்கும் நரகுறைந்து திரும்பிவர இயலாமல் நாயினும் கீழோனாய் நாப்புலர அழுதபடி நீணிலத்தில் அழிவானே. அகமகிழும் அவன் வாழ்வு இவ்வுலகோடு நின்றுவிட குஞ்சோடு குலமழிய கூடுவிட்டு பறந்த பின்பும் மறுவாழ்வே இல்லாமல் மறலிக்கே விருந்தாகி பீடைப் பெருங்கடலுள் பிறப்பெடுத்து உழன்றிடுமே.
🌸 பதிற்றிரண்டு பருவம் தன்னில் பார்த்திபனின் வாழ்விலொரு நேர்த்தியான கருமமொன்று நிகழ்ததுவே ஊழ்வினையால். உற்றபிதா உயிர்துறக்க உள்ளுளைச்சல் அலைக்கழிக்க பெற்ற தயை இயல்புடனே பெருமளவு துளிர்த்ததாலே தரணி நிறை பல்லுயிரும் தம் போலே பிரிவு தாங்கா பெருந்துயரில் பாதித்து வார்த்தையின்றி துடித்தழுமே என்றெண்ணி தீது தாரா திருவழியை தேர்ந்தெடுத்த அன்று முதல் அருமகனார் அகனமர்ந்து பச்சைகாய்களுடன் பல்கனிகள் மிக்க உண்டு படியரிசி பருப்புணவை ஆகாரம் ஆக்கியே அடிப்படையாய் வாழ்வான் ஐயன். புலாலெனும் கொடும்புலியோ புண்ணித்தை கறைபடுத்தி மறை ஏறா மண்டையாக்கி மண்புதைக்கும் என்றறிந்து கருணை தன்னை காவு வாங்கும் கடும்விடமாம் ஊனுணவை சிறுமையென ஒதுக்கிவிட்டு சீர் நெறியை பின்தொடர்வான் சிவனாரின் உவமையிலா சீர்வேளாம் செல்லமகன். ஒவ்வொன்றும் தன்னுயிராய் ஒத்துக்கொள்ளும் இறைமைமிகு இளங்கதிரோன் உலகாளும் நாள் இனி ஒருபோதும் அகலாது அருகில் வரும் காரிருள் மறைத்த உன் கண்மணிக்கு ஒளியும் வரும். காசினிக்குமொரு தெளிவு வரும்.
🌸 தேனுண்ணா தேவதேவன் இவன் போல் தேடி யானும் காண்கிலேனே. மீனுண்ணா மேன் மகனாய் மேதினியில் இவனை கண்டேன். இவன்போல் ஊனுண்ணா உத்தமனாய் ஒருசிலரை மட்டும் கண்டேன். தோலில்லா காலனியை இவன் தூய பாதம் தன்னில் கண்டேன். அனைத்துக்கும் முன்னோடி ஐயன் வாழும் அறநெறியே கடும் தவத்திற்கு இணையாகும் என்று கூறி கற்பகமாய் போற்றுகிறேன் கமலமன்ன கால் மலரை ஒற்றுகிறேன்.
🌸 வானோர்கள் வரவேற்கும் வாழ்வியல் அறநெறியை கடைபிடித்த ஆர்வலர்கள் தாழ்வடையார் என்பதனை யான் கூற கேளாயோ எம்மினமே மீளாயோ.
எம்மான் வாழ்வில் என்றென்றும் பெரும்பகுதி கோபாலுண்ணா கொள்கையுடை அரும்பிறப்பாம்
கோபாலன் பிறப்பு கண்டு யாமும் அகிலத்தில் இன்னல் தரா அவ்வழியை அடியொற்றி தொடர்வேனே அன்புநிறை ஆழியின் அடித்தளமாம் பரம்பொருளே.
Comments
Post a Comment