பாகம் 91, 92 & 93 வதனமொளிரும் வான் மகனிங்கு வரம் பெற்றெழுந்து வல்லமையோடு வருவான் தாயே. புவியில் எங்கும் போரோசை ஓய அவன் பூவிதழூதும் பூபாளம் கேட்டேன். அப்பூமானெழுச்சியை பொறி விழி கண்டதை யாரோடு பகர்வேன் எம்பெருமானே.

 பாகம் 91 🌸

     




        🌸கண்ணீர் விட்டழுதபடி கன்றுக்காய் மகனை கொன்ற கடும் நீதிச் சோழன் வந்த மண்ணுக்கு சொந்தக்காரன் மாண்புடை எம்மான். இன்று மலைநாட்டோரம் மலர்ந்து மண்காக்க மாயோன் மறு பிறப்பாய் உதிப்பான்.   புண்ணீரொழுக தொடையறுத்து புறாவிற்கு நிறை தந்த கருணைக்கடலாம் சிபி தேவனுதித்த சீர்மண்ணின் மணம் மாறா மைந்தனாய் இவனை கண்டேன். தகடூரான் முரசுக்கட்டிலில் தளர்ந்து துயின்ற தமிழ் கவிக்கு தன்னிலை துறந்து சாமரம் வீசிய தமிழ் தொண்டை இணையிலாது இவன் வடிவில் கண்டேன்.    

           🌸  பங்கயத்தார் வஞ்சகத்தார் பைந்தமிழர்  நெஞ்சகத்தில் மதமெனும் விடம் விதைப்பார் பிணங்குவித்து நிலம் சிவக்க சூது பல செய்திடுவர். நலமான நம் நாட்டின் தென்பரப்பில் உறங்காது ஐயன் உலவும் இடம் உறங்கா நகர் போலிருக்க கீழோர் இயங்கியே இயந்திரமாய் இவனைச் சூழ்ந்து சுற்றிடுவர். 

            🌸 ஐயன் இருப்பிடத்தை அறிந்தோர்கள் வரிசையிலே மையத்தை ஆளுகின்ற மதக்கொடியோர் மலரொன்று தினமும் மலர்ந்த வண்ணம் தென்னிலத்தில் இதழ் விரித்து தீமைக்காய் தீவளர்க்க அதை தினமலமென்றே யான் நிதமும் சபித்திடுவேன். 

        🌸 பித்தன் அருளுடை பெருமானிவனை சித்தனென்று அறியாமல் அற்பனென்றும் அகம் அவிந்தோனென்றும் எத்தர்கள் பட்டம் கட்டி இழிசெயல் விதைத்தது என்னவோ இங்காயினும் இதை விதித்தது அங்கென்று விழியுடையோர் நன்கறிவர்.

          🌸 மலம் கழிக்கா மாந்தரிவர் மார் களிக்க மதம் தூண்டி மனம் குளிர  இனம் தூண்டி ஊர் முழுக்க விடம் ஊன்றி உடல் வளர்க்கும் இனம் நடுவே ஏறெனவே நடப்பானே எம்மையன் கிடைப்பானே. 

     ஆழிசூழ் அகிலம் முழுமையும் கோபி சந்தணன கோவிந்தன் அவை முளைக்க அதிலொன்று தமிழ் முக நெற்றிச்சுட்டியாய் நெய்தலூரில் நீலக்கரையோரம் நிலம் பிடித்து நிலையா மடம் பதிக்கும்.

ஆயினும் அநீதி காப்போர் ஆயிரமாயிரம் அங்குறைந்து ஐயனுக்காய் விதித்த அமுத கலசமிரண்டை அபகரித்து வங்கம் கடத்தி வாய் சுவைக்க அருந்தி களிப்பர். இதன் பின்னணியில் நாலாயிரமாண்டு முன்னம் நவநீதன் தூவரகை விட்டு நாடு பெயர்ந்த நரியினம் ஒன்று தென்முனையாம் திருவனந்தன் புரியாண்ட திருமேனியர்க்கு அறுசுவையில் ஆக்கும் பணிபுரிந்து அரச குற்றம் இழைத்தனால் அங்கிருந்தும் அகற்றப்பட்டு வாட்டாற்றான் வாசலுக்கும் தென்திசையில் வாழ்வோரை வஞ்சித்து வாழ்ந்திருக்கும். இதனுடன் நஞ்சுறை நாயினங்கள் ஒன்று சேர்ந்து நன்நெறியனைத்தையும் கொன்றபடி அறமீன்ற இவ்வழல் குஞ்சை அழிக்க வந்து இயலாமல் போக இவன் வாழ்வை முடக்கிப்போட்டு அற்ப பொய்யருடன் அழியும் வெய்யரை ஏவியே அவன் பூங்கண்ணீரருந்தி புலனின்பம்  கொள்வதனை கண்ணாரக்கண்டேன் பரம்பொருளே.

          🌸 நாளும் நலம் செயா கோளும் நாதனருளிருந்தால் ஏது செயும். எமக்கெனவே நலம் செய்ய இயன்ற ஐயன் நல்லுடல் இன்று ஆலய திருவாசற்கருகே அல்லபட்டு உறங்கக்கண்டேன். எல்லா உயிரும் இன்புற எண்ணும் ஈடிலா நல்லகம் கண்டேன். நானும் துயர் கண்டு நடுங்கா ஐயன் பொற்றாள் பணிந்து புத்துயிர் பெறுவேன்.




பாகம் 92

🌸 கானக நீர் வைரமென கனகம் செண்பகம் வேங்கையொடு பாலும் தேனும் ஓலமிட ஒன்பது வெள்ளி புடவைகளை  பாறைத்தறிகளில்  நெய்தெடுத்து பளபளக்கும் தாவணியாய் பூமகள் மேனியில் போர்த்துமிடம் காவிரி தலைவன் பெயர் கொண்ட பூமுக குறுமுனி மாமலையில் கண்கவர் கைத்தல விரல்களென ஐஞ்சுனை தெறிக்கும் நெடுவரைக்கு நேர் தெற்கே நெடுங்கோட்டில் ஆறரை காதம் பறந்து வந்து அரவினில் உறங்கும் அருமால் திருப்பதியயொன்றை அடியேன்  கண்டேனே. அடிஎடுத்து தொழுதபடி ஐயன் தீரன் திருவிதியை தெரித்து கொள்ளும் நோக்கினிலே யானே மாலனை கேட்கையிலே வட்டாற்றிற்கருகினிலே வந்துதிக்கும் எம் திட்டம்  தவறாய் போகாது என திட்டவட்டமாய் மொழிந்தனை என் திருச்செவி கொண்டதை தந்தேனே.



    🌸 அழியும் விதியோர் அவனி முழுமையும் அலையென எழுந்து ஐயனை அழிக்க நினைத்தும் அழியான். அரம்பையர் அல்குல் அதரம் கொடுத்தும் அதனுள் உறுதியாய் நிலையான். இன்பத் தேன் சுவை இல்லறம் தன்னில் இறுதியில் இரண்டற இணையான். பகைவனைக்கூட பண்புடை வேந்தன் வாழ்வில்  என்றுமே சதியான். பதியாம் பன்னகமணிந்தோன் பரம பதத்தில் பதிவான். பகைவர் நினைத்தும்  பாழ் மக்கள் சினத்தும் பாரை விடுத்து ஒழியான்.  நெருங்கி வந்த நீசர் நெஞ்சில் நிழலாய்கூட நிலையான். இந்நீணிலம் ஆள்வதே இந்நீதிமான் நெற்றியில் நேர்த்தியாய் எழுதிய விதியாம். அவ்விதியைக்கூட விரும்பா பெருமான் நெற்றிக்கண்ணுடன் ஒளிர்வான்.

         🌸 தன்பாலிணை தேடும் தகாத விரும்பியென சிறுமை பெயரெடுத்து செய்யா வினைக்காய் சிலுவையை சுமப்பானே. மதவெறியர் பின்னின்று மறைவாய் உரை பரப்பி ஐயன் மலர் மனம் அழும் வண்ணம் சிதைப்பாரே. மரை மகளாம் திருமகளின் மனம் நிறைந்த மணாளனாய் அவனிருக்க மலமொத்த மாசினையே மாண்பற்ற வேசிமக்கள் மனம்போல இறைப்பாரே. மூடர்கள் மனங்களிக்க முக்கண்ணன் அகம் கொதிக்க அவ்வீணர்களழிவதனை எம் விழியாலே யான் கண்டேன் ஒளியாகி உயிர் காக்கும் ஒப்பற்ற பரம்பொருளே. 

       🌸 அறம் வாழ்த்தும் எம்மையன் அமைவிட குடக்கே அரணமைந்த ஆலம் வரைத் தொடரை அகமிழந்தோர் கொளுத்த விடியும் வரை வெறியொடு தழலெரியும் வேதனையால் வாழுயிர்கள் மலையுள் கருகி மடியும். கருணையே வடிவாய் ஐயன் கண்ணீர் பெருகும் காண்பவர் நெஞ்சோ உருகும். அங்கதன் உச்சிக் கரும்பாறை ஒன்றமர்ந்தது உறங்கும்  களிறு போல் காண குணக்கே குமுதமும் கமலமுமாய் கவினெழில் கண் பறிக்கும் பெரும் பொய்கையொன்றின் பெருமை கண்டேன். பிறந்தது பிறிதூராயினும் அங்கெம் அமுதன் இடம்பெயர்ந்ததாய் அறிவேன் நன்றாய்.

       🌸 ஐயனுதித்தால் அழிந்தோம் தானென்றெண்ணி ஆன்மீக அற்பராயிரம் அஞ்சி நடுங்க அதிலொருத்தி அமுத பெயர் தாங்கி அகத்தில் விடம் ஓங்கி பரவர் குலத்து பாதகியாய் பாவ பொருள் குவிக்க சேரன் நடுநாட்டில்  சீருறை கடல்கரையில் கொல்லும் மடமமைத்து வில் போல் விரிந்த  திருமார்பன் வேகா தலை கொய்ய விரும்பும் முப்புரி தரித்த தீயோர் குழுவில் தீயெனவே இணைவாளே தீதறுக்கும் இறையோனே.

        🌸 சித்தரின் வேடந்தாங்கி சிற்றினத்து எத்தர்கள் திக்கெலாம் எழுவாரே. தெய்வத் திருவாய் அமுதென்று வக்கிலார் வாக்கெலாம் தேனாய் பொய்புனைந்து தருவாரே. மெத்த பக்தி நீதிமானார் மீது பற்றி படர்ந்து வளம் பறிக்கும் உற்ற மடங்கள் பல தோன்றி அட்டை போல் உருஞ்சும் சூழல் உருப்பெறுமே. ஒத்த அரசே ஒத்துழைக்க ஒளியுடை ஆலய பொன்னை புசிக்ககண்டேனே. வலுப்பெறும் இத்தகு நிலை இகமதில் எழும் பொழுதே அண்ணலே எழுந்து வேடரை வேரறுத்து விண்ணீதி விதைக்க  விரைந்தே வருவானே. அண்டமிறங்கி அவன் வருவதை சிந்தை அடக்கி செவ்வெனவே யான் கண்டேன் எந்தையாய் இருந்து யுகங்காக்கும் பரம்பொருளே. 




பாகம் 93

     🌸 கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. 

        🌸 குருவருள் பெற்று குறையுடை மருள் புவியை நிறையுடை நன்னிலமாய் ஆக்காது போக ; உறைவிடம் விட்டு ஐயன் மாய்ந்திடுவானென்றெண்ணி தானே துளிர்த்த தளிர்நிறை புதர்களையும் தண்டுறை மரங்களையும் மனம் கெட்டோர் அகற்றிடுவார். மானே நீ அறிந்திடுவாய். மன்னவர் மன்னவனோ மறைந்திடுவான். மீண்டும் மறுமலர்ச்சியெடுத்திடுவான்.

         🌸 சந்திரன் கிழமைகளில் சரக்குகள் குவிகின்ற சந்தைக்கு குடக்காக சாய்ததள சாலையிலே  சற்றேறக்குறைய பெருங்கோலாயிரமாய் பிடிக்கும் தூரம் நீ நடந்தால் முக்கனிக்கு நடுக்கனியாம் முள் கனி கோடுறைந்து மும்மலமூறிய உற்றாரோடு ஐயன் உயிர்பறிக்க துணிந்தவன் தோற்றிடுவான் உறு கயவர் தோழனவன். அரவம் போல் பல அரிமா குழுவுடையான் அரிவாள் படையொடு அதீத தொடர்புடையான். நம்மையன் குலத்துள்ளே கொடும் பகையாய் உதயமாவான் இக்கொடும் வணிகனவன் தமையன் தன் தலைவாசல் முற்றத்தில் தகாத உறவுக்காய் குற்றுயிராய் கொலையுண்டு குருதி கொட்டி மடிந்திருப்பான்.

    🌸 ஐயன் கிளர்ந்தெழுந்தால் வையம் எதிர்கொள்ளும் வளவாழ்விற்கெதிராக வாழும் வெய்யரையே வேரொடு வீழ்த்திடுவான் என்ற விதியை அறிந்ததனால் வீண் வட்டி பொருளீட்டி வெகு வளமாய் வாழுகின்ற வடமண் வணிகர்களின் வாழ்வே தொலைந்து போகுமென கேடில் ஐயனுக்கு கேடுதிகள் அத்தனையும் நாளும் பொழுதெல்லாம் சிற்றினத்துதவியோடு திட்டம் பல தீட்டி திகிலொடு செய்தபடி தொடர்வார் தம் இழிசெயலை.

        🌸அழுக்கெல்லாம் அகற்றிய பின்னர் அகிலம் முழுமையும் செழித்த மண்ணில் பறவையினமே பண்ணிசைத்து ஆடுவதை பார்க்க சிலரே இருப்பர்ககள். பாழ்மாந்தர் பல பேர்கள் படுபாவசின்னங்களாய் பாராது மண்ணிலடங்கிடுவர். 

       🌸என்பாடல் கொண்டாடும் இனிய நாள் இனி வருமே. ஈரேழுலகாளும் ஈசன் மீது ஆணையிட்டேன். அறம் பாடி அருள்வாக்கு இருள்வாக்காய் பொய்த்திடுமோ. ஆரூடம் யானிசைத்து அரங்கேறாவிட்டால் அப்பிறைசூடி பெருமானை எப்பிறலும் நாடேன். அதற்கீடாக பேய்களுக்கு பூச்சொரிந்து பெருவாரி துதிப்பேன். கூற்றுக்கு கூற்று யான் கூறுவதும் திண்மை. இதில் நூற்றுக்கு நூறு நடைபெறுவதும் உண்மை. வேற்றுமைபாராத விடிவெள்ளி தோன்றி ஆற்றிடும் அருந்தொண்டை அனுபவித்த பின்னே அடியேனும் நிறைவோடு அறிதுயில் கொள்வேன்.

         🌸 தேய்பிறை நாளில் திடீர் தீ கக்கி வானில் வீறுடை குழவிகள் வீழ்ந்து சிதறும். வெப்பத்தால் மன்னுயிர் வெந்து சருகாய் கருகும். மேலைப்புவியே துடித்து பதறும் வட குடக்கே காதமாயிரம் கடந்தமைந்த கடற்குதிரைக்கு இடப்புறம் இருசேர் கருணை கிழங்கு பரப்புடை பரவைக்கு இக்கரையிற் வான்கோழி கூவ அக்கரையிற் ஆணவத்துடனே செஞ் சீலை பிடித்த செவ்வெளிர் மாந்தரின் மண்ணே  செம்மண் ஆகி செந்நீரோடி சிவக்கும் கண்ணே. நாடுகள் பிரிந்து நாணம் கெட்டு அணி மாற அழலுள் சிக்கி அகிலமே  எரிய அதனை எழுத இது புதினமல்ல பொற்புடை பூவே. வதனமொளிரும் வான் மகனிங்கு வரம் பெற்றெழுந்து வல்லமையோடு வருவான் தாயே. புவியில் எங்கும் போரோசை ஓய அவன் பூவிதழூதும் பூபாளம் கேட்டேன். அப்பூமானெழுச்சியை பொறி விழி கண்டதை யாரோடு பகர்வேன் எம்பெருமானே. 

          🌸 ஐயனின்  வருகையொரு அருமருந்தாய் இருக்கையிலே மெய்யினை சாய்க்க வந்து மிரட்டும் கொடும் பிணியே உன்னிடம் துணிவிருந்தால் உடன்பட்டு எதிர்த்து வந்து என்னிடமுன் வீரம் காட்டு. உன் மிரட்டலுக்கு யானோ அஞ்சேன். மென்மேலும் யான் எங்கள் மீட்பனுக்காய் காப்பேன்.

          🌸 அரவம் மெத்தையில்  அறிதுயில் கொள்ளும் மலை நில அனந்தன் மறுபிறப்பெனவே மார்த்தாண்டன் வீரியம் தன்னை மனதில் கொண்டு மண்ணீதி காக்க ஒரு மன்னனாய் வருவானென புராணங்களுரைக்காது போனாலும் எம் புவியன்னை அவன் கலத்தடமயறிவதில் கைதேர்ந்த வல்லாள் என்பதனை காதோரம் சொல்ல வந்தேன் கண்மணியே செவி சாய்ப்பாய். 

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.