பாகம் 106, 107 & 108 ஈன்று புறம் தந்து இதயக்கமலம் கவர்ந்து இனிதாயமைந்த பாட்டன் பரம்பரை வீடு பண்பாளன் படுத்துறங்கும் பாக்கியமிலாது போயினும் அவன் ஊக்கம் கெடாது உளம் தளராது தயை செயும் ஈசனே இடுக்கண் களைந்து என்றும் துணையிருக்க வானவர் வாய் மணம் வீசும் வாழ்த்துகள் பெற்று வல்லவனவன் ஏற்கும் வண்ணம் இல்லமதை வாழும் கிண்ணமாய் எழுப்பி வந்து பெரும்பேறு தந்து கனலன்ன கனகன்னை கடும் பணியாற்றி கைத்தலம் நிறை காஞ்சனமீட்டி கைவசமாக்கிய கவின் மனையாயினும் கடன் பட்டு கரம் பற்றி மணமுற்ற மனைக்கு கைமாறி ஆங்கடிமையாயுறைந்து அகமுடைந்து ஐயன் அறந்தாங்கி தவமேற்று அகன்று போவானென்பதையும் அடியேனறிவேன் ஆருயிரே.
பாகம் 106
🌸 கைக்கொடையிற் கதிர்மகனன்ன கமல கைத்தலம் கண்டு மெய்யுடை வாக்கு மேதினியறிய காதினில் தந்தேன். பொய்யா வானம் பூமாரி பெய்ய வெய்யரில்லா வேந்தனின் விரிநிலம் வீசும் தரை மரையொப்ப புகழ் மணம் மோந்தி அமரர் அண்ணலே அழுக்காறடைவான் அம்மையப்பனே நீயறிவாய்.
🌸 ஈன்று புறம் தந்து இதயக்கமலம் கவர்ந்து இனிதாயமைந்த பாட்டன் பரம்பரை வீடு பண்பாளன் படுத்துறங்கும் பாக்கியமிலாது போயினும் அவன் ஊக்கம் கெடாது உளம் தளராது தயை செயும் ஈசனே இடுக்கண் களைந்து என்றும் துணையிருக்க வானவர் வாய் மணம் வீசும் வாழ்த்துகள் பெற்று வல்லவனவன் ஏற்கும் வண்ணம் இல்லமதை வாழும் கிண்ணமாய் எழுப்பி வந்து பெரும்பேறு தந்து கனலன்ன கனகன்னை கடும் பணியாற்றி கைத்தலம் நிறை காஞ்சனமீட்டி கைவசமாக்கிய கவின் மனையாயினும் கடன் பட்டு கரம் பற்றி மணமுற்ற மனைக்கு கைமாறி ஆங்கடிமையாயுறைந்து அகமுடைந்து ஐயன் அறந்தாங்கி தவமேற்று அகன்று போவானென்பதையும் அடியேனறிவேன் ஆருயிரே.
ஓங்கிய இருநிலை உயர்வுடை இல்லம் உச்சி தலை வைத்து உற்ற வட திக்கிலொளிரும் திருவாசல் உறைந்திருக்க கொற்றவன் கண்ணோக்கும் தொலைவினில் குன்றென மலையொன்றின் கொண்டை முடியில் கோமானிவன் வரவிற்காய் கொலுவுற்றமர்ந்தபடி மதம் தீண்டா மிதமொடு மாதங்கம் மாதவம் பூணக்கண்டேனிதை யுன் பதமலர் பங்கயம் வருடி பார்க்கின்றேன் பரம்பொருளே.
🌸 அன்று ஈழம் கீழடக்கி ஈன குணம் மேலெழுப்பி முன்பொருவன் தன் தடந்தோளால் கங்கைவார்ச்சடையனுறைந்த கயிலையை அசைத்த கர்வம் கொண்டு கற்புடை மயிலையும் சிறையெடுத்து சீர்வரம் காத்த செழுவாழ்வேயழிய நேர்விதியுமமைத்து நெடுவிண்ணிற் புகுந்து வீடுறைய மீண்டும் மண்ணில் மலர்வான்.
திருவரங்கப் பெருமானொரு தீரனாய் பிறப்பெடுக்க அவன் திருவாசல் காவிறை இருவரில் இன்முகனொருவன் வைதேகி வாழ கரம் தந்தோன் திருவமுதாய் வாழையூரில் வாஞ்சைமிகு தேராய் வந்திறங்கிடுவான். வரவேற்றவனை என் நெஞ்சில் நிறைத்திடுவேன். உடன் வாராதின்னொருவன் வைகுந்த வாசலில் நிறைந்திடுவான்.
🌸 வீணரக்கன் வெற்று விலையறிந்து வீழ்த்தும் கலை நாலறிந்து வெற்றி முகம் தானறிந்து நாநிலத்து நன்மாந்தர் நலமுணர்ந்து திருச்சீரலைவாய் புரமெழுந்து ஆடவப் பேராண்மை அனலெனவே மேலெழுந்து அறவேள் வீரம் தோற்காது வேலெறிந்து விரிந்தகன்ற அவன் காரிருள் மார்துளைத்தெறிந்த கதிர்வேளமர்ந்த நூலறிந்து கருணைக்கடல் வாலறிவனிவனென்று வானவரே வாழ்த்துகின்ற ஆளரியாய் ஆர்பரிக்கும் வீரநடை வேந்திவன் வேண்டும் ஈரமுறை அகமுடையோன் அங்கமதில் அரவமாடும் ஆலகால சங்கமுடை ஆதிரை அன்புநாதன் அருளாலே அழவந்தே இக்கோளரி தன் கொற்றம் முற்றும் நிறுவி குடையொன்றின் கீழ் வானமைதி வந்தமைய வழி வகுப்பான். வள்ளலான் வருகையொரு அதிவிரைவாய் அமைவதற்கு அருள்கூர்ந்து வரமருள்வாய் அகமுறைந்த பரம்பொருளே.
பாகம் 107
🌸 உழவினை தொடுவோர் உயர் குடி அமைவோரென ஐயனோங்கி அனுதினம் தொழுவான். அவ்வரமிலாது வளர் வயல் எழாது போயின் வாழ்வியல் எதுவுமில்லை. அவரிடும் பிச்சை இலாது போயின் பெருங்குடியே தகர்ந்து போகும். பேணும் ஊனுடலெல்லாம் பெற ஊணிலாது போனால் மண்ணுயிர் மடிவதே உண்மை. இந்த ஊழ்வினையறிந்து உண்மையையுணர்பவன் உலகினில் ஒப்பற்ற ஞானி.
🌸 பழைமையை ஏற்று பைந்தமிழ் காத்து பெருமையாய் கருதும் மங்கையர் மடந்தையர் மனமொரு மலராயுணர்ந்து அதென்றும் சிதையா வண்ணம் எம்மான் இமையென காப்பான். அரிவையர் தெரிவையர் அழுவதை அண்ணல் அறவே கண்ணால் தாங்காதவனாய் மாதர் குலத்தின் மலரடி பணிந்து மாண்புடன் மதிக்கும் வேந்தனையறிந்து விடுகதை போல புதிர் கதை தந்தேன். புழுதியுள் எழுந்த பொற்றாமரையானை புண்படாது பறித்து உன் பூமனத்துள்ளே பதிப்பாய்.
🌸 பழம் விதி அனைத்தும் பாழ்விதியில்லை என சிலவிதி எடுத்து பல விதி தகர்ப்பான் ஐயன். உளவியலறிவில் ஊறியே திளைப்பான். அரசியல் அறிவை அம்பென கொண்டு ஆடும் அரசுகள் அனைத்தையும் தகர்த்து அறம் சொல்லும் ஆளுமை தனை திறனம்பட கொண்டு ஆடா அரசிற்கடித்தளமிடுவான் புரட்சிகள் வெடித்து போர்களமாக விழுச்சி கொள்ளென வீழ்ந்த மாந்தர் முன் எழுச்சியோடு ஏறேன நின்று ஆளவந்தான் ஆற்றலறிவேன். அதை அம்புலி தலைவனே என்னிலும் அறிவான்.
🌸 களவியல் புரியா காதல் புரிவான். கன்னியர் கற்பை காஞ்சனம் போலே கண்களில் ஒற்றி கடமை மதிப்பான். செம்பவள நகக்கண் கவர சீதள முகக்கண் கயலென ஒளிர செம்புல சிறுத்தையை கண்டேன். அவன் சீரிய நெற்றியில் கூரிய கண்ணது நீரு போர்த்திய நெருப்பென உறங்கிடக் கண்டேன். பவளப்பூவென மூக்கும் பளபளப்பென எழில் சேர்க்கும். பார்வை பாய்ச்சிடும் பாவையர் பால் நெஞ்சேங்கும் பங்கய மலரென வதனம் வேல் விழி வீழ்ந்தால் விடுமோ. வெண்டலையானே இதற்கு விரிவுரையொன்றெனக்கனுப்பு. இது கன்னியர் தொடுத்த வழக்கு. அட காமனே வந்திங்கு அக்கள்வனின் கவர்ச்சி ரகசியம் விளக்கு.
🌸 மறலி அழைக்கா மாமருந்தாம் திருக்குறளமுதை தித்திக்க குடித்து தீர்த்த தீரனவன் குடிமகனாகி கோனெ திரியும் நாள் வரைக்கும் அவனை
துருவித்துருவி யானறிவேன். தூதுவனிலாது தெலைவறிந்து தொடர்புகொள்வேன் பரம்பொருளே. தோற்றம் கண்டு யானுறைந்து தொய்விலாது வாக்கு தந்தேன். ஏற்று இயக்கும் எம்மானின் நோக்கும் விழிகள் உடுத்திக்கொண்ட குழியுடன் குவியும் ஆடிகளின் குறிப்பெடுத்த வேற்றுமையை அவன் விழிக்குளுறைந்த பாவைகளே விரைந்தறியும் முன்னரதன் பாகுபாட்டை யானுணர்ந்து பாடல் வடிவில் பகருகின்றேன். பார்ப்பது என்னொரு அனல்விழியே. அப்பக்குவம் வந்தது சிவனருளே .
பாகம் 108
🌸 புவிமகள் வரமாய் பெற்றவன் மர்மம் உரைக்கவந்தேன் ஒழிக்கா வண்ணம். அக்கொற்றவன் கொண்ட குறித்தண்டிடதே அழகுடை அரிமணியளவுடை ஆறு மச்சம் அறுபடை வீடென அமைய கண்டேன். வலப்புறத் தண்டில் வரிசை தவறி ஒன்பான் கோள்களை உரைக்கும் வண்ணம் ஒன்பது மருக்களை உற்று நோக்கி உள்ளம் நெகிழ்ந்த உண்மையை சொல்வேன். மரை மலர் மொட்டின் நுனியடி தன்னில் சிறுநீரருவி சீறிடும் துளைகீழ் ஆம்பல் விதைபோல் அங்கொரு மச்சம் இருளின் நிறத்தில் எழில் வேள் குறியே ஏற்றிருப்பதை என் வெறும் விழிமூடி வெற்றிக்கண்ணாம் நெற்றியிலமைந்த நெடுவிழி திறந்து உற்று நோக்கி உலகுக்கு தந்தேன். கருஞ்சீரகமாய் கண்ட மச்சம் இடப்புறமிரண்டும் வலப்புறமிரண்டும் விதையுறை மேலே வீற்றிருந்தை கண்ணால் கண்டேன் காதுகொடுப்பாய்.
நடுக்குறி மூடு நட்ட இடமாம் நற்றாமரை தண்டு முளைத்த அடிவயிற்றருகில் அங்கொரு மச்சம் கொள்ளென கொண்ட குறியதை குறித்துக் கொள்ளென சொல்வேன். அவன் அயர்ந்துறங்கிய அன்றொரு யாமம் தன்னில் அவனே அறியா வண்ணம் ஆடையுள் நுழைந்து அடியேனெந்தன் அழல் விழி பாய்ச்சி அடுத்தவர் கொண்ட பீடைக்கண்கள் பிடிக்கா வண்ணம் அனைத்தையும் கண்டு அளவீடெடுத்து பாடல் வடிவில் படிக்கத் தந்தேன். பரமன் அருளால் பக்குவப்பட்டோன் படிக்கக்கடவன்.
🌸 மனம் திறந்து மெய்யுரைப்பின் மாநிலத்தில் இன்னல் இங்கெவர்க்குமில்லையே. பிணம் குவிக்கும் நோக்கினையே பெரிதாய் கொண்ட கனம் குவித்த காலன் அவன் கைக்கு கடமை என்பதில்லையே. பணம் குவிக்கும் அவாவில் பாவம் தனை மாந்தர் என்றும் விடுவதில்லையே. ஆதலால் பிறவிப்பெருங்கடலை பேதைகள் கடப்பதனென்பது இயலா பெரும் சாதனை என்பதுண்மையே.
🌸 பள்ளியிலுடன் பயின்ற யெம் பண்பாளன் மேல் பாதகப் பதரொருவன் பாசாங்காய் பாசம் பொழிய எம்மானுதித்த இன்னூரருகே இரவியென எழுந்து ஈடிலான் இதயக்கமலம் கிழித்து இடரிழைக்கும் வஞ்சக வடமண் விலங்குடன் வாழ்வோங்கி வாழ வன்கரமிணைப்பான் கதிர்கண்ணாயிரம் என்ற கறையுடை மறுபெயர் தாங்கி கன்னன் காலடி வீழ்ந்து கழுத்தறுக்கும் காலனாய் தேர்ந்து புதிரெனவே புன்னகை பூத்து பொல்லா நட்புடை நெஞ்சில் நஞ்சுறை நாகம் மறைத்து தெள்ளென தெரிவான் திளைத்து. செய்நன்றி கொன்றவனவன் சிற்றுயிர் நடுங்கி செவியற அலறி குற்றுயிராகி கூற்றுவன் கொடுக்கும் கொடிய அளற்றுள் குடிபுகாது அவனை ஆட்கொண்டகற்றிடுயென யான் பற்றிய நின் பாதத்தில் ஒற்றிய உவர்நீர் விழிகளால் ஒரு வரம் கேட்பேன் வான்பிறையணிந்த வரம்பிலா வல்லாளா.
🌸 சிலுவையை வழிபடுமிருவர் சீரிய நட்பெனும் போர்வையுள் வருவர் அக்கயவர். இளைமை முழுவதும் எம்மான் உதவிட உயர் தாழ் பணிந்து உதிரிப்பூவாய் பிரிந்து எதிரியின் ஏவலராகி எல்லா வளமும் சேர்த்து பெருமை பேசியே சதிப்பர். பீடுடை வேளிவன் கொண்ட பெருங்குணம் முற்றும் உணர்ந்தும் உணராமலகன்று உறவறம் பேணாதறுத்து உயிர் வதை கூட்டணி புகுந்து எருமை வாகனன் பிடிக்கும் ஈனர் மந்தையுள் விழுவர். கபடம் கண்களில் ததும்ப கருநாகமாய் திரிந்து வேண்டிய நலத்தை ஈட்டி விரைந்தே மண்ணில் புதைந்து மரணத்தின் வளையத்துள் நுழைந்து மறலி வாயுள் விழுந்து மலரா நிலையை அடைந்து மறுமைவீடே அடையார்.
Comments
Post a Comment