பாகம் 10, 11 & 12

 பாகம்10💗

இவனை அழிக்க நினைத்தால், நினைத்தார் அழிந்தே போவாரே.

இவனை ஒழிக்க நினைத்தால், நினைத்தார் பிணியில் ஒழிவாரே.

இவனுடன் தன்னையே இணைக்க நினைத்தால் நினைப்பவர்

 அவ்வீடடைவாரே. 

வீடற்று வீதியில் அலையும் யாவர்க்கும் இவனே இல்லமாம்.

பொருள் செருக்குடன் நீதி கொல்வார்க்கு மறுமையே கொடுங்கேடாம்.



பாகம் 11💗

சிவன் பேணும் இவன் தாதை தென்பழனிக் கோலம் பூண்ட 

குமரன் நாமம் கொள் குலப்பிள்ளையாம் குமரிக்கன்னி அருளாளன் என்பதனை 

யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே ! 

வேள்விமலைத் திருக்குமரனருள் பெறவே எழிலழகன் 

துதிபாடி அதிகாலை மலைஏறி அருள்மழையில் நனைந்தே இவன் தாதை

பெற்றானிவனை என்பதை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !

தயைகூர் தாதைக்கிவனே தலைமுத்தாய் உதித்தாலும் 

உதிர்த்த கனகன்னையெனும் சிப்பி நாலின்னல்களையுமுடன் தந்தே

ஓய்ந்த்ததென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !

நம்பிநங்கை நால்வருமாய் எண்ணற்ற பதி வளர்ந்ததன் விதி 

ஈன்றோர் பணி அரசடிமை என்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !

தரணி போற்றும் தலைவன் இவனென்றறியா தாதை அன்றிவன்

அவதாரப்பயனறியாதிருந்து பித்தன் பேரடியடைந்தின்றறிவான்

என்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !

இவனுதித்தக் குலமதை கோராமல் கூறுகிறேன் நீயும் கேளாய். 

ஆநிரைகள் அமுதூறக் குழலூதும் கோபாலன் வகையென கோரிநின்றோர் அறிந்திடுக. ஆயினுமிக்குலமழிய இதிலுதித்தோர் புல்லுக்கும் புவியிலெவ்வுயிருக்கும் தொல்லைதரா நல்லோனிவனுக்கெதிராய் வன்கொடியோர் கரமிணைத்து இன்னல் பல செய்வாரென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !




           தென்முனை திக்கின் மேலழகன் மலையில் பிறக்கும் குமரன் குறவஞ்சி கொடியாள் நதியாய் ஓட அதிலிவன் குளித்தே குளிர்ந்தது பதினகவை பருவம் அன்றோ. அது பங்கயநாபன் நகரமென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே ! கோட்டையிவனைக் காக்க குடிபுகுந்த ஈன்றோர் ஈராண்டே வாழ்ந்தே விடைபெற்றார்.

       முன்னர் இவனுறைந்த பூவூர் தானென சொன்னதோ வாளை ஏந்தும் தீரனிவன் வாழ்வூரும் அதுவேதான். தீரனிவன் வாழ்ந்த இந்நல்லூரில் பிரமன் முகம் போலாண்டுகள் மலர்ந்தானங்கே. மலைக்குன்றான் மயில்வாகனனுக்கு பாற்குடமெடுத்தே பாலகனை வழிபட்டானே. அங்கப்பன் சாமி சுப்பையனிடம் இப்பையன் குருகுலம் புகுந்ததனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !

             தென்குமரி நன்னிலத்தில் திருவருளான் பொன்னிலத்தில் நெஞ்சமதில் நஞ்சோடும் நரியினமும் நாவினில் வேதமூறுமந்தணனும் ஒன்றாய் கூடி பாதகம் புரிந்தே புண்ணியமிழப்பாரே. இம்மான் கதை முடிக்க இணைவாரே. எங்கெவர்க்கும் தீதறியா தேவநேயன் இவனன்றோ.

நன்னெறியை நல்லடியாய் பின்பற்றும் இம்மாயோனிதை நன்கறிவான். எங்கெவரும் அண்ட ஒண்ணா அழிவிலா இவ்வாற்றலின் வருகை பேரிடியாய் எழும் போது எண்ணற்றோர் தனை மாய்ப்பர். கூண்டோடே குடிமாய்ப்பர். தப்பிப்பதரிதே என்றுத் தார்மீக முடிவெடுப்பர். எஞ்சியதும் மிஞ்சியதும் எண்ணற்ற கொடியோர்கள் இவன் கைவாளுக்கிரையாகி காலடியில் வீழ்ந்திடுவார். எவர் கண்ணீரையும் ஏற்கமாட்டான். இவனோ கடும் சினத்தான் சேர்க்க மாட்டான்.

          

பாகம் 12💗


அன்றொரு கண்ணீர் கருந்திங்கள் காலைப்பொழுதன்று ஆழித்துயிலருங்கண்டமொன்று  அரவமிலாது போன கதையறியாயோ எம் குழந்தாய். மீண்டுமது தென்முனையில் தானே தலை தூக்கி மேலே உயிர்தெழுமக்கண்கொளா காட்சியினை தரணியே வியந்து காண நீராழிக்கடியில் அணைத்து தாலாட்டி  வடபுலத்தை வாஞ்சையுடன் அலையமம்மை உறங்க வைப்பாள். 

அத்தென் கண்டம் மீண்டும் தெய்வத்திருமன்றமாக திரும்பிவர திருவரம் உண்டென உரக்கச்சொல்வாய்.  காப்பிய மேன்னையுடை  அக்கலி கொண்ட கவின் பரப்பை கரையேற்றக் கடன்பட்டாள் பெருநீரன்னை என்பதனை பாரறிய சொல்ல வேண்டாம். நல்லூரறிய நால்வருக்குச் சொல்லுகிறேன். நல்லோரே கேளுங்கள்.

       கன்னி மாது கரையமர்ந்து வரமருளும் கவின் நிலத்தென்புலத்தில் கடல் கொண்ட கண்டம் உண்டிதனை ஞானத்தாலளந்தவர்கள் சிலருண்டு. உன்காதிற்கேற்றார் போலிதை வாதத்தால் சமைப்பவரோ பலருமுண்டு. தம்முடல் மாய்ந்தாலும் ஊழித்தீ எரித்தாலும்  கடல் உண்ட தரைக்குள்ளே கடுந்தவம் பலர் புரிகின்றார். உளம் ஓய்ந்து போகாமல் ஓயாமல் துதிக்கின்றார்.






ஆழ்கடலுள் கோட்டை உண்டாங்கே பாலாழித் துயில்கொள் பரந்தாமனுக்கும் தோடுடை பரமனுக்கும் பலநூறு கோவிலுண்டாங்கே நீரடியில் நித்தமும் தவம்பூண்டோர் வெண்ணான்மா ஆராதனை செய்வதனை அவனறிவான் இவனறிவான். அடியேனும் நன்கறிவேன் பரம்பொருளே. வேலாழியுள் வீழ்ந்த வேலவன் பெருங்கண்டம் மேலாழியில் தலைதூக்கும் பெருநாள் அதிவிரைவில் வருமென அகிலத்தார் யாரரிவர். அடியார்கள் அருள்பெற்று அக்கரையாய் சொல்லுகிறேன் இம்மெய்யை. ஆவலுடன் கேள் நீயே. 




அக்கரையோரம் பிறந்திருப்பான். அகிலத்தைக் காக்க இவன் அவதாரம் எடுத்திருப்பான். இதை அறிவிலிகள் அறியாரே அந்தணர்கள் அறியாரே.  எவர் அறியாவிட்டாலும் யாம் அறிவோம் பரம்பொருளே. கடல் குமரி கரையேறி காத்தாள் நல் ஈசனுக்காய். கரம் பிடிக்கும் நாளன்று கைகழுவிப்போனானே. அவள் நின்ற கதை யாம் அறிவோம். நெடுங்கதை தான் என்றாலும் அந்தக் கதை சொலத் தானே அடி யோனும் கடன் பட்டேன். அழிவிலா அருணனிவனை அரவணைக்கும் பொருட்டே தன் மணவாழ்வை துறந்தாளே. மணவாளன் துடித்தானே. மண் இதயம் துடித்திடவே மரம் கொடிகள் செழித்திடவே மாமன்னன் உதிப்பானென இவளரணாய் இருந்ததனால் வந்த கொடும் பகைகூட வலுவிழந்தே போனாலும் வஞ்சனைகள் தொடர்ந்து வரும். வதைக்க இவனை எவர்க்கியலும். வரம்பெற்றே வந்தாலும் வரம்பற்று சிதைக்க தான் எவர்க்கியலும். சீதள நிலவெரியும் இச்சீரழகி சினம் கொண்டால். இம்மண்ணுலகே எரியும் இம்மார்பழகி மதம் கொண்டால். அத்தகு வல்லமையாள் எம் திருக்குமரி தென்முனையாள் என்பதனை யாம் அறிவோம் பரம்பொருளே.

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.