பாகம் 16, 17 & 18
பாகம் 16💗.
அலையலையாய் பிணி வரும். அதைத் தொடர்ந்தலைக்கழித்தே அவலம் தர கொடும் பஞ்சம் பசியோடு தலைவிரித்தாடிடுமே. இதை யாரடக்க வருவாரோ என்றிருக்க பிணியடக்க வருவானே இப்பேராசான். விளைநிலம் வளங்கொழிக்க வீண்களையை அறுத்தெரிக்க வருவானே இவ்வானாசான். இவனன்றி எவர்க்கும் இது இயலாதென்பதை யாமறிவோம் பரம்பொருளே.
செம்மொழியாம் சீர்தமிழை வாழ்வாங்கு வாழ்விக்க வந்த எம்மானை புவிதனில் புறங்கொணர பேரிடரும் சூறையாடுமென சொல்லாமல் சொல்ல வந்தேன். சொல் நுட்பம் அறிந்திடுவாய். தெய்வீக எல்லை செலும் தெற்கிற்கு இனி தேய்வுமில்லை. தீயோர் சூழ் வட மண்ணிற்கினி வாழ்வேயில்லை. பண்பாட்டை பாழாக்கப் பாடுபட்ட பாதகர்கள் மண்மூடும் காலம் கண்மூடித்திறப்பதற்குள் வந்தே தீரும்.
அண்டவெளி தன்னில் அகிலத்தாற்கடிபணிந்திறகடித்தே கதிருண்ணும் கழுகுகளெல்லாம் தன் கடனாற்ற இயலாமற் பொசுங்கியே கீழ்வீழ இப்பொல்லாருலகிலினி அல்லல் குவியுமென்பதனை அகக்கண்ணாற் அறிந்திட்டேன்.
நெடுமரமாய் கோபுரங்கள் நிற்கதியிழக்க தரணியரனைவருமாதிவாசி போலாவார் என்றுறுதிபட பாட்டுரைத்தேன் பரம்பொருளே.
கொடு நோய் கோடியுண்மை உணர்த்திட உலகை உலுக்கிப்போடும். குலம் பார்ப்போர் இனம் பார்ப்போர் திருந்தி வாழ காலக்கெடு விடும். காலங்களில் நற்காலம் பொற்காலம் எல்லாம் நாம் வைத்தது தான் என்று அடித்துச் சொல்லும்.
கெடுநாளென்று ஒதுக்கிய விடநாள் மணநாள் ஆக மணநாளோ பிணநாளாகும். இவையனைத்து மாறுவதால் நம்பி உண்டி வளர்த்தோர் பூவயிறு பசியோடு திண்டாடடும்.
ஈசனுறைவிடம் ஆலயமன்றென்றது நம்மருமெய் என்ற ஞானியர் நன்னெறி நாற்புறமும் பரவும் நாளும் வரும்.
பாக17💗.
கொடுநோய் தன் பாதையிட இக்கொற்றவனே நடந்துவர அகிலமே கடும் போரிட கலகமே எங்கும் நிலைக்கும் . கண்ணீரை வாரி இறைக்கும் காட்சிகள் காணக்கிடைக்கும். இவனே தான் இருளகற்றும் இரவி போலே இடர்அகற்ற புரவியிலே எழுவானே. எழுவான் என்பது வான் மீதாணை. எழுந்தவுடன் கொடியோரை அரிவானென்பதும் அவன் மீதாணை. நல்லறம் அறிவான் என்பது மண் மீதாணை. நலம் பல புரிவான் என்பது எம்மீதாணை.
எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யா எம்மான் இவனை பல்லுயிரும் கை கூப்பும் பரம்பொருளின் ஒற்றை மகன் இவனன்றி வேறொருவர் மண்மீது இல்லையென்பதை உணர்வாய் மனமே
ஆலைகளெரியும். தேவாலயமெரியும் தேவிகள் கோவிலுமெரியும் குலக்கொழந்திற்கறிவு கூட்டும் பாடசாலையும் பாலைபோல் வெறிச்சோட பூவனத்தை கதிருண்ணும். ஐம்பூதங்களும் அகிலமீது சீறிப்பாயும்.
மரும நோய் சருமம் தீண்ட மன்னுயிர் சீழ்பிடித்து பாவ சம்பளம் பெற்றழும் பாட்டை பகரவந்தேன் பரம்பொருளே.
வெறிகொள் பூநினிம் வெட்டியான் ஆகுமே. வெஞ்சினம் பூண்டு எம் வீரிய துர்க்கை ஆடிட மண்மேடும் புதையுமே.
ஆன்மீகம் விலை போக அநீதி அத்துமீற ஆயிரமாய் போலிகளும் அழியாத தேவனானென்று அலங்கார வசனங்களில் அவ்வப்போது சபையமைப்பர்.
கவின் சிலையை களவாடும் கருவறைக் காவலர்கள் பெரும்பொருள் குவிக்கும் இரகசியத்தை பகருகிறேனிதை மருளற்றோர்க்குரைக்காது போனாலும் மனக்கண்ணாலுணர்ந்திடுவார். மாசற்றோர் கொதிப்படைவர். இது கலிகாலமென்பதனால் கடவுளும் கேலிப்பொருளாகும் என்பதனை கண்கூட கண்டிடுவார் அணுவிற்குள் விழிபதித்தெமையாளும் பரம்பொருளே
பாகம் 18💗.
கருணை இழந்த மாந்தர் மண்ணில் புதைவரென்பதேயுண்மை. மௌனம் கலைத்த நிலமெனும் நற்றாய் தன் மூவாய் பிளந்து விழுங்குவாளென்பதுமுண்மை
அரியணைக்கிவனை கொணரும் வரை அடும்பசி ஆறா அனலொடு சுடுதாபம் தீரா வெறிப்புனலும் நிலம்கொல்லும் என்பதுமுண்மை. காற்றும் தன் கொடுமுகம் காட்டி கண்டதை கொன்றே தணியுமே.
மண்மாதா முலையெரிய தேனோடை தீப்ப்பாகாய் உருகியோட நெஞ்சுறையும். தென்முனைக் கடல்பொங்கி மூவரின் தேரொன்றை அலை இழுத்து கொணர்ந்து அரவக்கோயில் ஏற்றத்தில் அருள்சிலுவையர் முற்றத்தில் புரட்டிப்போட்டே ஆர்ப்பரிக்கும்.இவன் வருகை முன் தீவிரமாய் அன்னை நிலம் நடுங்கிடுமே.
கண்ணிழப்பாள் காரிகையும் கள்ளக்கண்ணாளன் தனை அணைக்கும் வெறிக்கடிபணிந்து மணாளன் தனை சதிப்பாள். ஆடவனும் தன்னன்பு அன்பகம் கொண்ட மனையை அரவமின்றி மண்ணுள் புதைப்பானே என்பதெல்லாம் காலத்தின் கலி உச்சம் தொடுவதற்கு அடையாளம்.
அறந்தாங்கி இவனிறங்கி வந்ததனால் அநீதி குவிந்ததோர் மலிந்ததனால் பாழ் நோய்கள் வேலாகி பள்ளிவாசல் பாழாகும் . பந்த பாசம் தீயில் வேகும். சிலுவையர் ஆலயங்கள் செல்லரிக்கும் காலம் வரும். பெருமைகொள் அந்தணர் ஆலயங்கள் ஆளில்லாமல் சிலந்தி யாடும்.
Comments
Post a Comment